கொட்டும் மழையிலும் சுடச்சுட உணவு வழங்கும் நெடுவாசல் மக்கள்! மெய்சிலிர்க்க வைக்கும் உபசரிப்புகள்.

No comments

Peravurani Town :


புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல், நல்லாண்டர் கொல்லை, கோட்டைக்காடு உள்ளிட்ட 5 இடங்களில், கடந்த 17 நாள்களாக போராட்டம் தொடர்கிறது. மக்கள், தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராகப் போராடி வருகிறார்கள். போராடும் மக்களுக்கு ஆதரவாக நெடுவாசல் மட்டுமல்லாமல், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து, ஏராளமான பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் தொடர்ந்து ஆதரவு தருவதால் போராட்டம் தொய்வில்லாமல் நடந்துவருகின்றது.

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வருபவர்களை, தங்கள் சொந்த வீட்டு விசேஷத்துக்கு வரும், உறவுகளைப்போல, வரவேற்கும் நெடுவாசல் கிராமமக்கள், வெளியூர் நண்பர்களுக்கு, அங்கேயே சமைத்து “உணவு” பரிமாறுகிறார்கள். போராட்டக்களத்தில், குப்பைகளை சேகரிப்பது முதல் உணவு பரிமாறுவது வரை அனைத்தையும், அந்த கிராமத்து இளைஞர்கள், பெரியவர்கள் வயது வித்தியாசம் இல்லாமல் பார்த்துப் பார்த்துச் செய்கிறார்கள்.

கடந்த 3-ம் தேதி விடாமல் கொட்டித் தீர்த்த மழையிலும் நனைந்துகொண்டே சமைத்து, சேறும் சகதியுமாக இருந்த நிலையிலும் மக்களுக்கு, வயிறார சோறு பரிமாறிய விதம் மெய்சிலிர்க்க வைத்தது. கடந்த ஆறு நாள்களுக்கும் மேலாக இரவு பகலாக சமையல் பணியை மேற்கொண்டு வரும் பேராவூரணியைச் சேர்ந்த ஏ.எம்.சரவணனிடம் பேசினோம்.

”இந்தச் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஏதாவது விசேஷம் என்றால் நாங்கள்தான் சமையல் செய்து கொடுப்போம். அந்தவகையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடங்கிய சில நாள்கள் கழித்து, இந்த ஊரில் முக்கியமானவர்கள் என்னை அழைத்து சமைத்துக்கொடுக்கச் சொன்னார்கள். இந்த ஊரும் மக்களும் நல்லா இருந்தால்தானே, நமக்கும் நல்லதுன்னு, சமைக்க ஒத்துக்கிட்டேன். ஒரு நாள் சமைக்க, 50 ஆயிரம் வரை ஆகும். ஆனால் நான் பணியாளர்களுக்குக் கூலி மட்டும் வாங்கிக் கொடுத்துவிடுகிறேன். அவங்களுக்கும் குடும்பம், பிள்ளைகள் இருக்கு இல்லையா சார். ராத்திரி பகலாக உழைத்தாலும், மன நிறைவாக இருக்கு. இந்தத் திட்டம் வந்தால், இந்தப் பகுதியே வீணாகப் போய்விடும்னு சொல்லுகிறார்கள். வருகிற எல்லோருக்கும் சோறு போடுவதைப் பெருமையா பேசுகிறார்கள். ஆனால் ஊருக்கே சோறுபோடும் விவசாயி மண்ணைக்காக்கப் போராடுகிறார்கள். மனசெல்லாம் கஷ்டமாக இருக்கு சார். இந்தப் போராட்டம் ஜெயிக்கணும். போராடும் மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும்” என்றார்.

சமையல் பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணான பூமாலை, “இது நான் பிறந்த ஊர். நாங்கள் சின்ன வயசாக இருக்கும்போதே, எங்கம்மா இறந்துட்டாங்க. கஷ்டப்பட்டு வளர்ந்தோம். எங்க ஊரைப் பொறுத்தவரை, அப்பா, அம்மா இல்லன்னாகூட, குழந்தைகள், விவசாய வேலை செய்தாவது பிழைத்துக்கொள்ளும். அப்படித்தான் நாங்கள் வளர்ந்தோம். என்னை பேராவூரணியில் கல்யாணம் பண்ணிக்கொடுத்தாங்க. அங்க அவ்வளவா விவசாயம் இருக்காது. அதனால் எங்க அக்கா, ’மாதாமாதம் நெடுவாசலில் விளையும் காய்கறி, பயிர், நெல்’ என அனுப்பி வைப்பார்கள். அதைவைத்து, டவுனில் வாழ்ந்தாலும் சிரமம் இல்லாமல் வாழ்கிறோம். இப்போது, ‘அப்படி விளையும் நிலங்கள் எல்லாம் வீணாகப்போய்விடும்’னு சொல்கிறார்கள். இவ்வளவு பேர், வேலைவெட்டியை விட்டுட்டு வந்து போராடுகிறார்கள். சென்னை உள்ளிட்ட வெளியூர்களிலிருந்து, யார் பெற்ற பிள்ளைகளோ, இங்க வந்து எங்க நிலத்தைக் காப்பாற்ற கஷ்டப்படுது. அதான் சரவணன் அண்ணன், சமைக்கக் கூப்பிட்டதில் இருந்து, ராத்திரி பகலா சமைச்சுக்கொடுக்கிறோம். இவ்வளவு பேர், மழை, வெயில் பார்க்காமல் போராடுறாங்க. இந்த அரசாங்கத்துக்கு இரக்கமே இல்லையா..? இந்தப் பாழாய்ப் போன திட்டத்தை ரத்து பண்ணினால் என்ன சார்” என ஆதங்கப்பட்டார்.

விவசாயி சந்திரபோஸ், ‘’எங்க ஊர் தம்பிகள், வெளிநாடுகளில் எண்ணெய்க் கிணறுகளில் வேலை பார்க்கிறார்கள். அவர்கள், இந்தத் திட்டம் பற்றி விளக்கிச் சொன்னபிறகுதான் முழுமையாகத் தெரிந்தது. தொடர்ந்து போராடும் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வரும் மக்கள் பசியோடு போகக்கூடாதென்று முடிவுசெய்து, உள்ளூர் பொதுப்பணத்தில் சாப்பாடு சமைத்துப் போட ஆரம்பித்தோம். வெளிநாட்டில் உள்ள எங்கள் கிராமத்து தம்பிகள், சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் உதவுகிறார்கள். எங்கள் மண்ணைக் காக்கும் போராட்டம். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் மக்களின் பசியைப் போக்குகிறோம் அவ்வளவுதான்'' என்றார்.

இந்த மண்ணைக் காக்கும் போராட்டத்தில், மக்களின் பசியை உணர்ந்த இவர்களின் உபசரிப்பு பலரையும் மெய்சிலிக்க வைக்கிறது.

- சி.ய.ஆனந்தகுமார்

படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ், ம.அரவிந்த்
நன்றி: விகடன்

பேராவூரணி அரசு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி.

No comments

Peravurani Town :


பேராவூரணி அரசு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து இயக்கப்படும் நகர்புற பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிபடுகின்றனர். 1985ம் ஆண்டு பேராவூரணியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை துவங்கப்பட்டது. துவங்கிய காலத்தில் 3 நகர்புற பேருந்துகளுடன் இயங்கிய பணிமனை, தற்போது 26 பேருந்துகளுடன் இயங்குகிறது. பேராவூரணி வட்டார தலை நகரமாகவும், சட்டமன்ற தொகுதியாகவும் உள்ளதால் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். கிராமப்புற மக்களுக்கு போக்குவரத்திற்கு அரசுப் பேருந்துகள் மட்டுமே ஒரே வழி. சமீபகாலமாக பேராவூரணியிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்ட நகர்புற பேருந்துகளை போக்குவரத்து அதிகாரிகள் அடிக்கடி நிறுத்தி விடுகின்றனர். குறிப்பாக பேராவூரணியிலிருந்து இரவு 9 மணிக்கு அறந்தாங்கி சென்று, அங்கிருந்து 10 மணிக்கு பேராவூரணி வரும் பேருந்தை திரும்ப வராமல் அறந்தாங்கியிலேயே நிறுத்தி விடுகின்றனர். இதனால் மதுரை, காரைக்குடி, குன்றக்குடி போன்ற ஊர்களுக்கு சென்றுவிட்டு அறந்தாங்கி வரும் பொதுமக்கள், பேராவூரணிக்கு செல்ல பேருந்து இல்லாமல் அறந்தாங்கியிலேயே இரவை கழிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும், அதிகாலையில் வேலைக்கு செல்பவர்கள் காரைக்குடி கல்லூரி, அறந்தாங்கி பாலிடெக்னிக் கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். 

இதேபோல் பேராவூரணியிலிருந்து இரவு 8.30 மணிக்கு கொத்தமங்கலம் சென்று அங்கிருந்து பேராவூரணிக்கு வரும் பேருந்தை கொத்தமங்கலத்திலேயே நிறுத்திவிடுவதால் காய்கள் பயிரிடும் சிறு வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இதேபோல் இரவில் நெடுவாசலிலிருந்து பேராவூரணிக்கு வரும் பேருந்தை நெடுவாசலிலிலேயே நிறுத்தி காலையில் வருவதால், பொதுமக்கள் ஆவணம் கைகாட்டியிலேயே இரவை கழிக்க வேண்டியுள்ளது. இதேபோல் எண். 96, 15, 6, உள்ளிட்ட பேருந்துகளையும் தங்களது இஷ்டத்திற்கு அதிகாரிகள் இயக்குகின்றனர். கடந்தசில வருடங்களாக கிராமப்புறங்களுக்கு செல்லும் பேருந்துகளை நிறுத்திவிட்டு சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் என்ற பெயரில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. உயர் அதிகாரிகளுக்கு பேராவூரணி பணிமனையிலிருந்து தினசரி இயக்கப்படவேண்டிய தூரம் கணக்கில் காட்டப்படுவதால் இதுகுறித்து யாரும் கண்டுகொள்வதில்லை. இதேநிலை நீடித்தால் பேராவூரணி பணிமனையை இழுத்து மூடிவிடுவார்களோ என பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே கடந்த பல ஆண்டுகளாக இயக்கப்பட்ட அனைத்து வழித்தடங்களிலும் குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


நன்றி : தினகரன்

ஹைட்ரொ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் 17வது நாளாக தொடரும் போராட்டம்.

No comments

நெடுவாசலில் ஹைட்ரொ கார்பன் திட்டத்துக்கு எதிராக 17வது நாளாக தொடரும் போராட்டம்

பேராவூரணி சுற்றுவட்டாரப் பகுதியில் மாலை நேரத்தில் மிதமான மழை பெய்தது.

No comments



பேராவூரணி மற்றும் அதன் சில சுற்றுவட்டார கிராமங்களில் மாலை நேரத்தில் மிதமழை பெய்தது. இதனால் பொதுமக்களும், கடலை, எள்ளு,உளுந்து சாகுபடி விவசாயப்பெருமக்களும் மகிழ்ச்சியடைந்தனர். பேராவூரணி மழை பெய்ததால் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலையில் மாணவர்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம்.

No comments



ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

பேராவூரணி சுற்றுவட்டாரப் பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது.

No comments

Peravurani Town :



தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் ஏமாற்றி விட்டது. பல பகுதிகளில் வறட்சி தாண்டவமாடுகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் பல விவசாயிகள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.

பிப்ரவரி மாதத்திலேயே வெயில் கொளுத்தி வரும் நிலையில் மார்ச் மாதத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஆறுதல் செய்தி கூறியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வரலாற்று சிறப்பு மிக்க மழை மார்ச் மாதத்தில் பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரவீன் தெரிவித்திருந்தார்.

பேராவூரணியில் மிதமான மழை பெய்து வருகிறது.

தஞ்சை பெரியகோவில் அருகே பாலம் கட்டுவதற்காக தோண்டிய போது மன்னர்கால நீரேற்று குழாய்கள் கண்டெடுப்பு.

No comments

தஞ்சை மாநகராட்சி பகுதியில் பழைய பாலங்கள் அகற்றப்பட்டு புதிய பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன. தஞ்சை சிவாஜி நகர்- சேவப்பநாயக்கன்வாரி இடையேயும், பெரியகோவில் அருகே கல்லணைக்கால்வாய், கரந்தை பூக்கொல்லை, கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார்கோவில் அருகே, பெரியகோவில் அருகே உள்ள அகழி என 13 இடங்களில் பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பெரியகோவில் அருகே உள்ள சிவகங்கை பூங்காவில் இருந்து சீனிவாசபுரத்துக்கு செல்லும் பிரதான சாலையில் உள்ள பெரியகோவில் கோட்டைச்சுவர் அருகே இருந்த பழைய தரைப்பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகின்றன. இதற்காக பொக்லின் எந்திரம் மூலம் மண் தோண்டப்பட்டு வருகிறது.

3 இரும்பு குழாய்கள் கண்டெடுப்பு

நேற்று மாலை மண் தோண்டப்பட்ட போது பூமிக்கு அடியில் பெரிய இரும்புகுழாய் தென்பட்டது. உடனே அந்த குழாய் மேலே எடுக்கப்பட்டது. பின்னர் தோண்டிய போது அதில் மேலும் 2 இரும்பு குழாய்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த குழாய்கள் 10 அடி முதல் 12 அடி வரை நீளம் உடையது. இதில் ஒரு குழாயில் 2 புறமும் ஓட்டை உள்ளது. மற்றொரு குழாயில் ஒருபுறம் மட்டும் ஓட்டை உள்ளது. இன்னொரு பெரிய குழாயில் 2 புறமும் மூடப்பட்டு பக்கவாட்டின் ஒரு பகுதியில் 2 வால்வும், இன்னொரு புறத்தில் 3 வால்வுகளும் காணப்படுகின்றன.

இந்த 3 குழாய்களும் மண்ணுக்கு அடியில் இருந்ததால் அவை துருப்பிடித்த நிலையில் காணப்படுகிறது. மேலும் இந்த குழாய்கள் மன்னர்கள் காலத்தில் பீரங்கியில் பயன் படுத்தப்பட்ட குழாய்களாக இருக்கலாம் என கருதி ஏராளமானோர் வந்து பார்த்தனர். பின்னர் இது குறித்து விசாரித்த போது அந்த குழாய்கள் மன்னர்கள் காலத்தில் தண்ணீர் கொண்டு செல்வதற்காக பூமிக்கு அடியில் பயன்படுத்தப்பட்ட குழாய்கள் என்பது தெரிய வந்தது.

மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்டது

இது குறித்து தஞ்சை சரசுவதி மகால் நூலக பண்டிதர் மணிமாறன் கூறுகையில், “தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள சிவகங்கை பூங்கா குளம் மழைநீர் சேகரிப்பு குளம் ஆகும். மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்ட இந்த குளத்தில் மழை காலத்தில் பெரியகோவில் பகுதிகளில் உள்ள மழைநீர் அனைத்தும் சிவகங்கை பூங்கா குளத்தில் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து தஞ்சை மாநகரில் உள்ள பல்வேறு குளங்களுக்கும், அரண்மனைகளில் உள்ள கிணற்றுக்கும் பூமிக்கு அடியில் தண்ணீர் கொண்டு செல்லப்படும். இதற்காக சுடுமண்குழாய்கள் பூமிக்கு அடியில் பதித்து வைக்கப்பட்டு இருந்தன. மேலும் தண்ணீரை பல பிரிவுகளாக அனுப்புவதற்காக இரும்பினால் ஆன நீரேற்று குழாய்களை பயன்படுத்தினர். அந்த குழாய்கள் தான் தற்போது பாலம் தோண்டிய போது கண்டெடுக்கப்பட்டுள்ளது”என்றார்.
Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar