தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம் மே 5 வெள்ளியன்று நடைபெறவுள்ளதையொட்டி அன்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.அன்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை நாட்களுக்கு பதிலாக மே 27 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவித்தும், மேற்படி நாளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் இயங்கிட அனுமதித்தும் ஆணையிடப்படுகிறது. மேற்படி உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி சட்டம் 1881ன் கீழ் உட்படாது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூல மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் மேற்படி உள்ளூர் விடுமுறை நாளான மே 5 அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு இயங்கிடவும் ஆணையிடப்படுகிறது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம் மே 5 வெள்ளியன்று நடைபெறவுள்ளதையொட்டி அன்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
No commentsPeravurani Town :
May 01, 2017தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம் மே 5 வெள்ளியன்று நடைபெறவுள்ளதையொட்டி அன்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.அன்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை நாட்களுக்கு பதிலாக மே 27 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவித்தும், மேற்படி நாளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் இயங்கிட அனுமதித்தும் ஆணையிடப்படுகிறது. மேற்படி உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி சட்டம் 1881ன் கீழ் உட்படாது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூல மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் மேற்படி உள்ளூர் விடுமுறை நாளான மே 5 அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு இயங்கிடவும் ஆணையிடப்படுகிறது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நெடுவாசலில் ஹைட்ரோகார்பனுக்கு எதிராக 20வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் பொதுமக்கள் மரத்தில் ஏறி நூதன போராட்டம் நடத்தினர்.
No commentsபுதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த, கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். பின்னர் மாநில அமைச்சர்கள் நடத்திய சமரச பேச்சுவார்த்தைக்கு பின், போராட்டம் திரும்ப பெறப்பட்டது. இதற்கிடையே, ஹைட்ரோ கார்பன் எடுக்க ஜெம் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதைக்கண்டித்து, நெடுவாசல் அருகே உள்ள ஆலங்குடியில் 20வது நாளாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று நடைபெற்ற போராட்டத்தில் மரத்தின் மீது ஏறி முழக்கங்களை எழுப்பினர். அப்போது இளைஞர் ஒருவர் தலைகீழாக தொங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
மே தினத்தை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு.
No commentsமே தினத்தையொட்டி அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கத்தின் சார்பில், பேராவூரணி பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சி திங்களன்று நடைபெற்றது. ஆசிரியர் ச.செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முகமது மாரூப், க.நீலகண்டன், சிவராஜ், இளமதியன், செ.இராகவன்துரை, செ.இராமநாதன், பாக்கி உமாநாத், வீர.மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக வீர.சந்திரசேகரன் நன்றி கூறினார்.
நன்றி : தீக்கதிர்
பேராவூரணியில் முறையாக அரசுப் பேருந்துகள் இயக்காததைக் கண்டித்து மறியல்
No commentsபேராவூரணி அருகே அரசுப் பேருந்துகள் முறையாக இயக்க ப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பேராவூரணி அரசுப் போ க்குவரத்துக் கழகத்திலிருந்து குருவிக்கரம்பை, குறவன்கொ ல்லை, கஞ்சங்காடு, கரம்பக்காடு, செருபாலக்காடு வழியாக தடம் எண். 8, 14 ஆகிய அரசுப் பேருந்து கள் பட்டுக்கோட்டை வரை இயக்கப்பட்டு வருகின்றன. இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 2000 பேர் வசித்து வருகின்றனர். கடந்த காலங்களில் தினசரி சுமார் 10 முறைகளுக்கு மேல் முழு நேரமும் இந்த பகுதிகளில் இயங்கி வந்த இந்த பேருந்துகள் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக 4 முறைகள் கூட முழுமையாக இயக்கப்படவில்லை. இதனால் இப்பகுதிகளுக்கு பேருந்துகளில் பயணம் செய்யும் பயனாளிகள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள குருவிக்கரம்பை வரை நடந்து சென்றுதான் பேருந்துகளில் செல்ல வேண்டியிருந்தது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்கள், சிறுவர்கள், கடைகளில் வேலை செய்யும் பெண்கள் உட்பட அனைவரும் இரவு நேரங்களில் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். அரசு பேருந்துகள் முறையாக இயங்காததால் இதன் வழியாக இயக்கப்படும் ஒருசில தனியார் பேருந்துகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கட்டண நிர்ணயம் இல்லாமல் அதிகமாக வசூல் செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கஞ்சங்காடு, வாவிலான்வயல், பூங்குடிக்காடு, குறவன்கொல்லை, தேனங்காடு, தண்டாமரைக்காடு, சங்கரன்கொல்லை உட்பட சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 100 க்கும் மேற்பட்டோர் திங்கட்கிழமை கஞ்சங்காடு பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளர் சம்பவ இடத்திற்கு வந்தால்தான் மறியல் கைவிடப்படும் என பொதுமக்கள் கோரிக்கை வை த்தனர். இந்நிலையில் போக்குவரத்துக் கழக நிர்வாகி வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு வந்து இனிமேல் முழுமையாக இந்த 2 பேருந்துகளும் இந்த பகுதியில் இயக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது.பொதுமக்கள் குற்றச்சாட்டு பேராவூரணி போக்குவரத்துக் கழக கிளை மேலாளராக லெட்சு மணன் என்பவர் பொறுப்பேற்றதில் இருந்து, பேருந்துகள் இயக்கம் முறையாக இயக்கப்படவில்லை எனவும், சிறப்பு பேருந்துகள் என இயக்கி கமிஷன் பார்ப்பதாகவும், பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களே வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கீரமங்கலம் பகுதி யைச் சேர்ந்த லெனின் பிரபு என்பவர் கூறுகையில்," கடந்த சில தினங்களுக்கு முன் கீரமங்கலம் பகுதிக்கு பேருந்து வரவில்லை என பேருந்து நிலையத்தில் உள்ள டைம் கீப்பரிடம் கேட்கலாம் என சென்றால், அங்கு பதில் சொல்ல யாருமில்லை. பேராவூரணி டெப்போவுக்கு 04373-232531 என்ற எண்ணுக்கு பலமுறை அழைத்தும் பதில் இல்லை. பின்னர் கும்பகோணம் அலுவலகத்திற்கு 0435-2403726 மற்றும் 1800-41-94287 என்ற டோல்-ப்ரீ நம்பருக்கு அழைத்தும் எந்த பதிலும் இல்லை. பேராவூரணி போக்குவரத்துக் கழக அதிகாரிகளின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது" என்றார். போக்கு வரத்துக் கழக உயர் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி : தீக்கதிர்
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை: ஆன்-லைன் பதிவு தொடங்கியது.
No commentsஇந்தக் கல்வியாண்டு (2017-18) பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளரக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க ஆன்-லைன் மூலம் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஆன்லைன் முகவரி றறற.யnயேரniஎ.நனர ஆகும். திங்களன்று (மே 1) பதிவு தொடங்கியது.ஆன்-லைன் மூலம் பதிவு செய்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரிலோ, தபால் மூலமோ சமர்ப்பிக்க ஜூன் 3 கடைசித் தேதியாகும்.சமவாய்ப்பு எண் ஜூன் 20 அன்றும், தரவரிசைப் பட்டியல் ஜூன் 22 அன்றும் வெளியிடப்படுகிறது.அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு (பி.இ.) சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.2017-18 கல்வியாண்டுக்கான கலந்தாய்வு அறிவிப்பை பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்டது.அதன்படி, பொறியியல் கலந்தாய்வு ஜூன் 27-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.முதலில் விளையாட்டுப் பிரிவினர், ராணுவ வீரர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கும் பின்னர் பொதுப் பிரிவினருக்கும் சேர்க்கை நடைபெறும்.
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் ஆலய கும்பாபிஷேகம் காட்சிகள்.
No commentsஉலகப் புகழ் பெற்ற பிள்ளையார்பட்டி கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கற்பக விநாயகரின் ஆசி பெற்றனர். இன்று பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு கோயிலின் கோபுரங்கள், தளவரிசைகள் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டன. கடந்த 24ந்தேதி யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று அதிகாலை 4.30மணிக்கு எட்டாம் கால யாகசாலை பூஜையும், காலை 8 மணிக்கு மஹா பூர்ணாகுதி, தீபாராதனை, கடம் புறப்பாடு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் இராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம், தொடர்ந்து மூலஸ்தான மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் லட்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Subscribe to:
Posts (Atom)


















