கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு வானிலை மையம்.
No commentsதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்தமிழ்கத்தில் ஒரு சில இடங்களிலும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இரவில் மழைபெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பேராவூரணி ஏடிஎம்கள் பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற மக்கள்.
No commentsபேராவூரணி உள்ள பெரும்பான்மையான ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாததால், தங்களது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் பொது மக்கள் திரும்பிச் சென்றனர். இதேபோல், நோட்டு மாற்ற வருவோருக்கு வைக்க பல வங்கிகளில் மையும் வரவில்லை.
பழைய செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் புதிய அறிவிப்புகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டே இருக்கின்றன. ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான அளவு குறைக்கப்பட்டு இனி ரூ.2 ஆயிரம் மட்டுமே மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதேபோல ரூ.500 நோட்டுகளும் வரவில்லை, பழைய ரூ.100 நோட்டுகளும், ரூ.50 நோட்டுகளும், ரூ.20 நோட்டுகள் மட்டுமே கையிருப்பு உள்ளது. இதனால் பொது மக்கள் சிரமத்துக்குள்ளாவதை நாங்கள் அறிவோம்.
பணம் புழக்கம் அதிகரிக்க வங்கிக்கு அனுப்ப வேண்டிய பணத்தின் அளவை உயர்த்த வேண்டும், ரூ.500 நோட்டுகளை அதிகளவில் விட வேண்டும். அப்படி இல்லையென்றால் இந்த நிலை சீராக மூன்று மாதங்களாகும்.
அதேபோல ரூ.500 நோட்டுகளும் வரவில்லை, பழைய ரூ.100 நோட்டுகளும், ரூ.50 நோட்டுகளும், ரூ.20 நோட்டுகள் மட்டுமே கையிருப்பு உள்ளது. இதனால் பொது மக்கள் சிரமத்துக்குள்ளாவதை நாங்கள் அறிவோம்.
பணம் புழக்கம் அதிகரிக்க வங்கிக்கு அனுப்ப வேண்டிய பணத்தின் அளவை உயர்த்த வேண்டும், ரூ.500 நோட்டுகளை அதிகளவில் விட வேண்டும். அப்படி இல்லையென்றால் இந்த நிலை சீராக மூன்று மாதங்களாகும்.
500, 1,000 நோட்டுகளை கொடுத்து வரி செலுத்த அழைப்பு பேராவூரணி பேரூராட்சி.
No commentsPeravurani Town :
November 17, 2016பேராவூரணி பேரூராட்சி பகுதியில் உள்ள மக்கள் முக்கிய அறிவிப்பு தங்களிடம் உள்ள பழைய ரூ. 500 மற்றும் ரூ. 1,000 நோட்டுகளை வருகிற 22ம் தேதி வரை நகராட்சி அலுவலகத்தில் கொடுத்து சொத்து வரி, வீட்டு வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் குத்தகை இனங்கள் அனைத்தையும் செலுத்தலாம். அதற்கான ரசீதும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவது ரூ.4,500-ல் இருந்து 2000 ஆக குறைப்பு.
No commentsவங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவது ரூ.4,500-ல் இருந்து 2000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது.
நாடு முழுவதும் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து, மக்கள் தங்கள் கைகளில் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய நோட்டுகளை பெற்றுக் கொண்டு வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 4,500 ரூபாய் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு கைகளில் ரொக்கமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில் வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவது ரூ.4,500-ல் இருந்து 2000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் இதனை தெரிவித்தார். எனவே வங்கிகளில் இன்று பழைய பணத்தை மாற்றுவோர் ரூ.4500-ஐ ரொக்கமாக பெறலாம். ஆனால் நாளை முதல் பணத்தை மாற்றுவோரின் கைகளில் ரூ.2000 மட்டுமே ரொக்கமாக வழங்கப்படும்.
Subscribe to:
Posts (Atom)







