Latest

latest

பேராவூரணி ஸ்ரீ ஏந்தல் நீலகண்ட விநாயகர் கோவில் சித்ரா பௌர்ணமி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது

Peravurani Town :

/ by IT TEAM
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ஏந்தல் ஸ்ரீ நீலகண்ட விநாயகர் கோயில் அமைந்து உள்ளது.

இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி உற்சவம் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடத்தப்படும். 12 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவிற்கு அனைத்து ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்த வழிபாடுவார்கள். இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி உற்சவ திருவிழா(1-ம் நாள் திருவிழா) இன்று காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.


12 நாட்கள் நடக்கும் சித்ரா பவுர்ணமி திருவிழா நிகழ்ச்சி நிரல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

2-ம் நாள் திருவிழா - பங்குனி 31 - 13.04.2016 - கேடகம்.

3-ம் நாள் திருவிழா - சித்திரை 1 -14.04.2016 - காமதேனுவாகன வீதி உலா.

4-ம் நாள் திருவிழா - சித்திரை 2 - 15.04.2016 - பூதவாகன வீதி உலா.

5-ம் நாள் திருவிழா-சித்திரை 3 -16.04.2016 - அன்னவாகன வீதி உலா.

6-ம் நாள் திருவிழா - சித்திரை 4 -17.04.2016 - மயில் வாகன வீதி உலா.

7-ம் நாள் திருவிழா - சித்திரை 5 - 18.04.2016 - ரிஷப வாகன வீதி உலா.

8-ம் நாள் திருவிழா - சித்திரை 6 - 19.04.2016 - குதிரை வாகன வீதி உலா.

9-ம் நாள் திருவிழா - சித்திரை 7 - 20.04.2016 - தேரோட்டம், காவடி - பால்குடம்.

10-ம் நாள் திருவிழா - சித்திரை 8 - 21.04.2016 - தீர்த்தவாரி விழா.

11-ம் நாள் திருவிழா - சித்திரை 9 - 22.04.2016 - திருக்கல்யாணம், தெப்ப விழா.

12-ம் நாள் திருவிழா - சித்திரை 10 - 23.04.2016 - விடையாற்றி உற்சவம்.

9-ம் நாள் திருவிழாவான 20.04.2016 அன்று தேரோட்டமும் நடக்கிறது. வருடம்தோறும் இந்த தேரோட்டத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வருவார்கள். மேலும் அன்றைய தினத்தன்று பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு பால்காவடி, பறவை காவடி, பால்குடம், பல்வேறு வகையான காவடிகள் பக்தர்கள் எடுத்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள்.

11-ம் திருவிழாவான 22.04.2016 அன்று திருக்கல்யாணம் நடக்க உள்ளது. திருவிழாவின் நிறைவாக 23.04.2016 அன்று விடையாற்றி உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar