Latest

latest

பேராவூரணி வட்டாரத்தில் உரங்களை அதிக விலைக்கு விற்றால்!!!

Peravurani Town :

/ by IT TEAM





பேராவூரணி வட்டாரத்தில் உரங்களை அதிக விலைக்கு விற்றால் +919698580420 என்ற எண்ணில் புகார் அளிக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் :: உரத்தை அதிக விலைக்கு விற்றால் சட்டப்படி நடவடிக்கை என ஆட்சியர் எச்சரிக்கை.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் என்.சுப்பையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் உள்ள உரக்கடைகளில் தரமான உரங்கள் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்குவதற்கு உரிய
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உரக் கட்டுப்பாட்டு ஆணையின்படி செயல்பட
அனைத்து உரக்கடைகளுக்கும் உரிய அறிவுரை வேளாண்மைத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆணையின்படி செயல்படாத உரக்கடைகள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உரக்கட்டுப்பாட்டு ஆணைப்படி உர உரிமம் பெற்று விற்பனை செய்வது, உர உரிமத்தில் மேற்சேர்க்கை வழங்கிய
நிறுவனங்களின் உரங்களை மட்டுமே விற்பனை செய்வது, உர
மூட்டைகளில்
குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கு மிகாமல் விற்பனை செய்வது போன்ற விதிமுறைகளை அனைத்து கூட்டுறவு, தனியார் விற்பனையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
உர இருப்பு விவரம் மற்றும் விலை விவரத்தைக் குறிப்பிட்டு விலை விவரப்பலகை நன்கு தெரியும் விதத்தில் கடையில் வைக்கப்பட வேண்டும். மேலும், விவசாயிகள் உர மூட்டைகளை வாங்கும்போது
பற்றொப்ப ரசீது கேட்டு, அதில் கையெழுத்து இட்டு வாங்க வேண்டும். அதிக விலைக்கு விற்றால் அப்பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது 9750969401 (தஞ்சாவூர்), 9750969402 (பூதலூர்), 9750969403 (திருவையாறு), 9750969404 (ஒரத்தநாடு), 9750969405 (திருவோணம்), 9750969406 (பட்டுக்கோட்டை), 9750969407
(மதுக்கூர்), 9698580420
(பேராவூரணி), 9750969409
(சேதுபாவாசத்திரம்), 9750969410 (பாபநாசம்), 9750969411 (அம்மாபேட்டை), 9750969412 (கும்பகோணம்), 9750969413
(திருவிடைமருதூர்), 9750969414
(திருப்பனந்தாள்) ஆகியவற்றில் தொடர்புடைய பகுதி
செல்லிடப்பேசி எண்களிலோ தெரிவிக்கலாம்.
மேலும் உர விற்பனை நிலையங்களில் ஏதேனும்
குறைபாடு இருந்தால் தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தை 04362 267679 அல்லது வேளாண்மை உதவி
இயக்குநரை (தரக்கட்டுப்பாடு) 9750969417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar