Latest

latest

பொது விநியோக திட்டத்தில் ஆதார் இணைப்புக்கு புதிய செயலி: வீட்டில் இருந்தபடியே ஆண்ட்ராய்டு கைபேசி மூலம் பதிவேற்றம் செய்யலாம்.

Peravurani Town :

/ by IT TEAM


பொது விநியோக திட்டத்தில் ‘மின்னணு குடும்ப அட்டை’ வழங் கும் பணிக்காக புதிய கைபேசி செயலியை தமிழக உணவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் நியாயவிலைக் கடைகளுக்கு செல்லாமலேயே ஆண்ட்ராய்டு கைபேசியில் ஆதார் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் தற்போது புழக் கத்தில் உள்ள குடும்ப அட்டைகள் 2005-ம் ஆண்டு வழங்கப்பட்டவை. இந்த அட்டைகள் கடந்த 2009-ம் ஆண்டே காலாவதியாகிவிட்டன. தொடர்ந்து, 6 ஆண்டுகளாக உள்தாள் ஒட்டப்பட்டு வருகிறது. இந்த அட்டைகளுக்கு பதில் புதிய மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கும் திட்டம் முதல்வரால் அறிவிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, தமிழகம் முழுவதும் பொது விநியோக திட்டப் பணிகளை கணினிமயமாக்கும் பணிகள் நடக்கின்றன. இதை யொட்டியே, மின்னணு குடும்ப அட்டை வழங்க ஏதுவாக ஆதார் எண் உள்ளடக்கிய கணினி தொகுப்பு விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக நியாய விலைக் கடைகளுக்கு வழங்கப் பட்டுள்ள, ‘பாயின்ட் ஆப் சேல்’ கருவியில், ஆதார் விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதன் மூலம், கடையில் உள்ள இருப்பு, பொருட்கள் விநியோகம் ஆகிய வற்றையும் நுகர்வோர் குறுஞ் செய்தி மூலம் அறிந்துகொள்ள முடியும். அடுத்தாண்டு தொடக் கத்தில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் மின்னணு குடும்ப அட்டை வழங்க திட்டமிட்டுள்ள தமிழக அரசு, தற்போது புதிய கைபேசி செயலியையும் உரு வாக்கியுள்ளது. ஆண்ட்ராய்டு பயன்பாடுள்ள கைபேசியில், இந்த செயலியை பதவிறக்கம் செய்து அதன் மூலம், நியாய விலைக்கடைகளுக்கு செல்லாம லேயே, ஆதார் விவரங்களை இணைக்க முடியும்.
இதற்காக கைபேசியில், ‘கூகுள் பிளே ஸ்டோர்’-ல், ‘TNePDS’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் குடும்பத்தலைவரின் தொலைபேசி எண்ணை பதிவு செய்தால், நுகர்வோருக்கான பக்கம் திறக்கும். அதில், குடும்ப அட்டை எண், ஆதார் எண், பகுதி, கடை விவரம், குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதன்பின், ‘ஒருமுறை கடவுச்சொல்’ வரும். அதை பதிவு செய்தால், ஆதார் அட்டையை ஸ்கேன் செய்து பதிவேற்றுவதற்கான பக்கம் திறக்கும். அதன் மூலம் வீட்டில் உள்ளவர்கள் ஆதார் அட்டைகளை ஒன்றன் பி்ன் ஒன்றாக பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்து முடித்ததும், இந்த விவரங்கள், நியாயவிலைக் கடையில் உள்ள பாயின்ட் ஆப் சேல் இயந்திரத் துடன் இணைக்கப்பட்டுவிடும்.
இது தொடர்பாக நியாய விலைக் கடை ஊழியர் ஒருவர் கூறுகையில், ‘‘தற்போது பெரும் பாலானவர்கள் ஆண்ட்ராய்டு கைபேசி வைத்துள்ளனர். அவர்கள் வீட்டிலிருந்தபடியே இந்த செயலி மூலம் ஆதார் பதிவு செய்தால், கடையில் வந்து வரிசையில் நிற்க வேண்டியதில்லை. ஒருவருக்கு ஆதார் பதிவு செய்ய குறைந்த பட்சம் 10 நிமிடங்களாவது ஆகும். இதனால், கடையில் தேவையற்ற நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப் படும். கடையில் இருக்கும் பொருட் கள் குறித்தும் அவர்கள் இனி அறிந்து கொள்ள வசதி ஏற்படும்’’ என்றார்.
அதிகாரி தகவல்
உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஆதார் இணைப் பின் மூலம் போலி கார்டுகளை குறைத்துவிடலாம். உண்மையான நுகர்வோருக்கு மானியத்துடன் பொருட்கள் சென்று சேருவதையும் கண்காணிக்க முடியும்’’ என்றார்.
தற்போது இந்த செயலியின் பயன்பாடு பிரபலமடைந்து வருகிறது. விரைவில் உணவு மற்றும் கூட்டுறவுத்துறைகள் இந்த செயலி தொடர்பான அறிவிப்புகளை வெளியிடும் என தெரிகிறது.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar