Latest

latest

நம்ம பேராவூரணில இப்படியும் ஒரு கண்காட்சியா???

Peravurani Town :

/ by IT TEAM





நம்ம பேராவூரணில இப்படியும் ஒரு கண்காட்சியா? அசத்தும் வாலிபர்கள்.. பேராவூரணி  பெரியார் அம்பேத்கர் நூலகம், தமிழ்ப் பல்கலைக் கழக கல்வி மைய வளாகத்தில் செப்டம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் திரு.L.A.M.சாதிக் அலி,       சு.கதிரேசன், அப்துல் ரஹ்மான் ஆகியோர் சேகரித்த தஞ்சை பெரிய கோவில் பொறிக்கப்பட்ட 1000 ரூபாய், தமிழ் எழுத்துகள் மற்றும் எண்கள் பொறிக்கப்பட்ட நாணயத் தாள்கள், சோழர்கள், முகலாயர் கால நாணயங்கள், 1000 ஆண்டு பழமை வாய்ந்த நாணயங்கள், 35,000 இந்திய இருபத்தைந்து பைசா, 13,000 இந்திய இருபது பைசா, 7,000 இந்திய பத்து பைசா நாணயங்கள், இக்காலத்தில் காண கிடைக்காத 1 பைசா, 2 பைசா, 3 பைசா, 2 அணா, 4 அணா போன்ற இந்திய நாணயங்கள், புதுக்கோட்டை அம்மன் காசு, இந்திய வெள்ளி நாணயங்கள், அறிஞர் அண்ணாவின் கையொப்பம் பொறித்த நாணயங்கள், துளையிட்ட நாணயங்கள் (ஓட்ட காசு),திருவள்ளுவர் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம், 7 கிலோ எடை கொண்ட சவுதி அரேபியா இலச்சியணை, 28 நாடுகளின் நாணயங்கள் தாள்கள் மற்றும் கலை பொருட்கள் போன்றவை காட்சி படுத்தப்பட்டன.நிகழ்ச்சியினை லயன்ஸ் சங்க தலைவர் Er.கனகராஜ் அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார்.










நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில்  இருந்து வந்திருந்த பள்ளிகளில் மாணவர்கள் மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வரலாற்று ஆர்வலர்கள், படித்த படிக்காத ஆண்கள் பெண்கள் ஆகியோர் கண்காட்சியினை கண்டு களித்தனர்.கண்காட்சியில் இடம் பெற்றிருந்த நாணய குவியல்களை கண்டு ஆச்சரியத்திலும் உறைந்து போய்விட்டனர்...





இன்னும் 2000 -20 பைசா நாணயங்கள் சேகரித்தால் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கும் வாய்ப்பினை சு.கதிரேசன் அவர்கள் பெறுவார். கின்னஸ் சாதனைக்காக கதிரேசன் சேகரித்து வைத்து உள்ள 13000- இந்திய 20 பைசா நாணயங்கள், 35,000- இந்திய 25 பைசா நாணயங்கள், 7,000 -இந்திய 10 பைசா நாணயங்கள் போன்றவையும் காட்சி படுத்தப்பட்டன. இவைகளை காட்சி படுத்த கதிரேசன் அவர்கள் தன்னிடம் இருந்த நாணயங்களை குட்டி யானை வண்டியில் எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

உங்களிடம் நாணயங்கள் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - சாதிக் அலி 99655 31452, சு.கதிரேசன் -84899 89637

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar