Latest

latest

வீட்டிலிருந்தபடி விவசாயம் செய்ய உதவும் தானியங்கி டிராக்டர்கள

Peravurani Town :

/ by IT TEAM

விவசாயத்தின் அடிப்படை பணிகளில் ஒன்று உழுதல். காளைகளை பூட்டி ஏர் உழுத காலம் மலையேறிவிட்டது. டிராக்டர்கள் கரடுமுரடான பகுதியையும் கணப்பொழுதில் தேவையான ஆழத்திற்கு உழுதுவிட்டுச் செல்கின்றன. தற்போது உழுதல் உள்ளிட்ட விவசாயப் பணிகளை மேலும் எளிதாக்கும் தானியங்கி டிராக்டர்கள் வந்துவிட்டன. 

நியூ ஹாலந்தைச் சேர்ந்த ‘என்.எச். டிரைவ்’ நிறுவனம் இந்த புதுமை டிராக்டர்களை உருவாக்கி உள்ளது. இதற்கான அப்ளிகேசன்களின் உதவியுடன் வீட்டிலிருந்தபடியே இதை இயக்கி நிலத்தை உழவு செய்யலாம். இரவிலும், பகலிலும், மழையிலும், வெயிலிலும் கூட வேலை செய்யக்கூடியது இந்த சக்தி மிக்க டிராக்டர். 

உழவு செய்ய வேண்டியது என்ன ஆழம், எவ்வளவு அகலம், எவ்வளவு தூரம் என்பதை மட்டும் அப்ளிகேசனில் பதிவு செய்து விட்டால் துல்லியமாக உழவு செய்து கொடுத்துவிடும். இதிலுள்ள ராடர் மற்றும் கேமராக்கள் நிலத்தில் உள்ள தடைகளை அறிந்து விவசாயிக்கு திரையில் காட்டும். பள்ளம்–மேடு, கல், மரம் என தடைகளுக்கேற்ற தீர்வுகளையும் பரிந்துரைக்கும். தடைகளை அகற்ற கட்டளை கொடுத்தால் ஜே.சி.பி. போன்ற எந்திர  பாகத்தை இணைத்து தடையாக இருப்பவை அப்புறப்படுத்தப்படுகிறது. 

பரிசோதனை முயற்சிகளில் வெற்றிபெற்று விட்ட இந்த புதுமை டிராக்டர்கள் விவசாய களம் காணும் காலம் வெகு தொலைவில் இல்லை.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar