Latest

latest

பேராவூரணி காட்டாற்றை தூர்வாரும் பணி தொடக்கம்.

Peravurani Town :

/ by IT TEAM

பேராவூரணி, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடைமடை பகுதிகளில் உள்ள காட்டாறுகள், ஏரி,குளங்கள் தூர்வாரப்படாமல் மண்மேடிட்ட நிலையிலும், நெய்வேலி காட்டாமணக்குச் செடிகள் மண்டிய நிலையிலும் உள்ளன. அரசு நிதி ஒதுக்கிய போதிலும் ஒப்பந்ததாரர்கள் தூர் வாராமல் மோசடி செய்து வருகின்றனர். எனவே இதனை உடனடியாக சீர் செய்ய வேண் டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது.இதுகுறித்து கடந்த செப்டம்பர் 29 ந்தேதி வியாழன் அன்று தீக்கதிரில், “தூர்வாராமல் மோசடி; ஒப்பந்ததாரர்கள் முறைகேடு” என்றதலைப்பில் விரிவானசெய்தி வெளியாகியிருந் தது. செய்தி வெளியான மறுதினமே, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிகளுக்குச் சென்றுதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை திடீர் ஆய்வு மேற்கொண்டார். பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஆறு, ஏரி, குளங்கள், காட்டாறுகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் தீக்கதிரில் செய்திவெளியாகி இருந்த பட்டுக்கோட்டை சாலை காட்டாறுபகுதியையும் பார்வையிட்டு, புதர்போல் மண்டிக் கிடந்த கோரைப்புற்களை அகற்றுமாறும் உத்தரவிட்டார்.அரசு அறிவிக்கும் திட்டங்கள், மாவட்ட நிர்வாகத்தின் வேகத்திற்கு தகுந்தவாறு, சுணக்கம் காட்டாமல் பணிகளை உடனடியாக நிறைவேற்றுமாறு, பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டதாகத் தெரிகிறது.இதையடுத்து காட்டாற்றில் உள்ள கோரைப்புற் களை அகற்றும் பணி,இயந்திரங்கள் உதவியோடுதொடங்கி கடந்த 3 தினங் களாக நடைபெற்று வருகிறது.
மார்க்சிஸ்ட் கட்சி கருத்து


இதுகுறித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேராவூரணி ஒன்றியச்செயலாளர் ஏ.வி.குமாரசாமி கூறுகையில், “ நடைபெற்று வரும் பணிகள் வெறும் கண்துடைப்பாக அல்லாமல், முழுவதுமாக ஆறு, ஏரி, குளங்கள் தூர்வாரப்பட வேண்டும். பொதுமக்களையும், மாவட்ட நிர்வாகத்தையும் ஏமாற்றும்விதமாக பொதுப்பணித் துறை அலுவலர்களும், ஒப்பந்ததாரர்களும் நடக்க முயன்றால் வீதியில் இறங் கிப் போராட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயங் காது” என்றார்.

நன்றி :-  தீக்கதிர்

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar