Latest

latest

தஞ்சையில் பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வு பேரணி கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.

Peravurani Town :

/ by IT TEAM


தஞ்சையில் பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.

பேரிடர் குறைப்பு தின பேரணி


சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி தஞ்சையில் நேற்று நடைபெற்றது. தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணியை தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி காந்திஜி சாலை, கீழராஜவீதி வழியாக அரசர் மேல்நிலைப்பள்ளியை சென்றடைந்தது. பேரணியில் அரசர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 800–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் அண்ணாதுரை கூறியதாவது:–

தீயணைப்புத் துறை மூலம் பேரிடர் காலங்களில் எவ்வாறு தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு செயல்விளக்க நிகழ்ச்சியும், தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது எப்படி? என்பது தொடர்பாக பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மழை, புயல், சூறாவளி காற்று ஆகியவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

சரி செய்யப்படும்


பேரிடர் ஏற்படும் பொழுது மாநில அவசர கட்டுப்பாட்டு அறை 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், மாவட்டத்தில் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பாதிப்பு மற்றும் சேத விவரங்களை பொது மக்கள் தெரியப்படுத்தலாம். கட்டுப்பாட்டு அறைக்கு வரும் சேதம் மற்றும் பாதிப்பு தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்பட்டு உடனுக்குடன் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சரி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேரணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், மாவட்ட வருவாய் அதிகாரி சந்திரசேகரன், வருவாய் கோட்டாட்சியர் ஜெய்பீம், தாசில்தார் குருமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar