Latest

latest

தஞ்சை மாவட்டத்தில் மத்திய நிபுணர்குழு விவசாய நிலங்கள் பார்வையிட்டு ஆய்வு.

Peravurani Town :

/ by IT TEAM





தஞ்சாவூர் மாவட்டத்தில், உச்ச நீதிமன்ற உத்திரவின்படி மத்திய நிபுணர் குழு ஒரத்தநாடு வட்டம்,  சோழகன்குடிகாடு ஊராட்சியிலும்,  மதுக்கூர் ஒன்றியத்தில் சொக்கானாவூர் ஊராட்சியிலும் சம்பா சாகுபடியில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்களை தேசிய நீர் ஆணையத் தலைவர் ஜி.எஸ்.ஜா அவர்கள் தலைமையிலான  மத்திய நிபுணர் குழு இன்று (10.10.2016) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

இவ்வாய்வின் போது மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர். ககன்தீப் சிங்பேடி, மாவட்ட ஆட்சித் தலைவர். ஆ.அண்ணாதுரை, ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் காவிரி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட கர்நாடாக அரசுக்கு உத்திரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்கள்.  இவ் வழக்கினை விசாரித்த உச்சநீதி மன்றம் கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் உள்ள காவிரி படுகைகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் மட்ட தொழில் நுட்ப நிபுணர் குழுவினை அமைக்கும்படி மத்திய அரசுக்கு உத்திரவிடப்பட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேசிய நீர் ஆணையத் தலைவர் ஜி.எஸ்.ஜா அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவில்  தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் திரு.பிரபாகரன், இ.ஆ.ப., அவர்கள், காவிரி தொழில்நுட்ப குழு மற்றும் மாநிலங்களுக்கிடையேயான நீர் குழுத் தலைவர் திரு.சுப்பிரமணியம், ஆகியோரும் கேரளா, கர்நாடாக  மற்றும் புதுச்சேரி மாநில பிரதிநிதிகளும்   இன்று (10.10.2016) தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு வட்டம், சோழகன்குடிகாடு, மதுக்கூர் ஒன்றியம் சொக்கானாவூர், ஆகிய பகுதிகளில் நேரடி நெல் விதைப்பு மூலம் விவசாயம் செய்யப்பட்டு தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் காய்ந்து வறட்சியாக உள்ளதை நேடிரயாக விவசாய நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

பின்னர், நிபுணர் குழு தலைவர் ஜி.எஸ்.ஜா அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, காவிரிப்பாசன பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றோம், களத்தில் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக பார்வையிட வந்துள்ளோம். இது தொடர்பான  அறிக்கையினை தயாரித்து உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளோம் என தெரிவித்தார்.

ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் பெ .சந்திரசேகரன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிமாறன், வருவாய் கோட்டாட்சியர் ஜெய்பீம், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சொக்கலிங்கம், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர்கள் திருமதி.ரேவதி, இளங்கோவன், கண்ணன், வட்டாட்சியர் திருமதி.தமிழ்ஜெயந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar