Latest

latest

பெரம்பலூரில் பள்ளி வளாக தோட்டத்தில் காய்கறி விளைச்சல்.

Peravurani Town :

/ by IT TEAM

பெரம்பலூர் அரசுப்பள்ளி வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி தோட்டத்தில் காய்கறிகள் மிகுதியாக காய்த்துள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் காய்கறித்தோட்டம் அமைத்திடும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பள்ளி வளாகங்களில் காலியாகக்கிடந்த நிலங்களை மாணவர்களைக் கொண்டே சீரமைத்து, அவற்றில் காய்கறித்தோட்டம் அமைக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி மற்றும் ஆலோசனையின் பேரில் சில மாதங்களுக்கு முன்பு இத்திட்டம் தொடங்கப்பட்டது. இவ்வாறு இயற்கை முறையில் பயிரிடப்பட்ட காய்கறிகள், கீரைகள் தற்போது நன்கு விளைச்சலைத் தந்து வருகின்றன. அரசுப் பள்ளிகளில் அந்தந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவுத் திட்டத்திற்குத் தேவையான காய்கறிகளே பெறப்படுவது பெற்றோர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

இதற்குத் தேவையான காய்கறி விதைகள் பெரம்பலூர் மாவட்ட தோட்டக்கலைத்துறைமூலம் வழங்கப்பட்டன. தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் அடிக்கடி இந்த பள்ளிகளைப் பார்வையிடப்பட்டு, தேவையான ஆலோசனைகளை வழங்கிவந்தனர். பள்ளி வளாகங்களில் வெண்டை, கத்தரி, கொத்தவரை, முள்ளங்கி, பச்சை மிளகாய் போன்ற காய்கறிகள் வளர்க்கப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 15 முதல் 20 கிலோ வரையான காய்கறிகள் வாரம் 3 நாட்கள் அறுவடை செய்யப்படுகின்றன. பெரும்பாலான பள்ளியில்  சத்துணவிற்காக இந்த காய்கறிகள், கீரைகளே முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் முன்பு இருந்ததைவிடவும் அதிகமான காய்கறிகள் உணவில் சேர்க்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வும், காய்கறிகளால் ஏற்படும் நன்மைகள், தோட்டம் அமைப்பதன் பயன்கள் குறித்த விழிப்புணர்வும் பெருமளவில் அதிகரித்துள்ளது. 

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar