Latest

latest

தஞ்சாவூர் 100 சதவிகிதம் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம்.

Peravurani Town :

/ by IT TEAM

தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதி பொது தேர்தல் முன்னிட்டு வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் நேர்மையாக வாக்களிப்பது தொடர்பாக வல்லம் பேரூராட்சி பகுதி பேருந்து நிலையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் மாதிரி வாக்குச்சாவடியும், 100 சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கமும், வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்பு பிரச்சாரம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள்  தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ், அவர்கள் முன்னிலையில் இன்று (1.11.2016) நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையம் வலிகாட்டுதலின்படி வாக்காளர்களிடையே வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் குறைந்த அளவு வாக்குப்பதிவு நடைபெற்ற கிராமங்களை தேர்ந்தெடுத்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வாக்காளர்கள் வாக்களிப்பது நமது உரிமை.  நமது உரிமையை விட்டு கொடுக்காமல் நேர்மையாகவும், நியாயமாகவும், அச்சமின்றியும் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்.   வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  வாக்காளர்களிடையே தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதியில் ஒவ்வொரு கிராமாக தேர்வு செய்து தினமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இன்று வல்லம் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது குறித்து மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  மேலும், வருகின்ற தேர்தலில் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.  இதை தொடர்ந்து வல்லம் பேரூராட்சி பகுதியில் வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வீடுவீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

வல்லம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடி மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளம், மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் வல்லம் பேரூராட்சியின் உதவி இயக்குநர் ஆர்.இளங்கோவன், தனி வட்டாட்சியர் வெ.பூங்கொடி  தேர்தல் விழிப்புணர்வு அலுவலர் திருமதி.பூங்கோதை, மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar