Latest

latest

அரையாண்டுத் தேர்வு: டிச. 7.

Peravurani Town :

/ by IT TEAM


பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 7-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9-ஆம் தேதியும் தொடங்கும் என பள்ளிக் கல்வி இயக்ககம் சனிக்கிழமை அறிவித்துள்ளது. இந்தத் தேர்வு காலை 10 முதல் பிற்பகல் 12.45 வரை நடைபெறுகிறது.
பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை
டிசம்பர் 7 புதன்கிழமை - தமிழ் முதல் தாள்
டிசம்பர் 8 வியாழக்கிழமை - தமிழ் இரண்டாம் தாள்
டிசம்பர் 9 வெள்ளிக்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்
டிசம்பர் 10 சனிக்கிழமை -ஆங்கிலம் இரண்டாம் தாள்
டிசம்பர் 14 புதன்கிழமை - கணிதம், நுண்ணுயிரியல்,
விலங்கியல், சத்துணவியல், ஆடை வடிவமைத்தல், உணவு மேலாண்மை- குழந்தை நலன், வேளாண்மை செயல்முறைகள், அரசியல் அறிவியல், செவிலியத்துறை (தொழில்பிரிவு), செவிலியத்துறை (பொது), கணக்கியல்-தணிக்கையியல்.

டிசம்பர் 15 வியாழக்கிழமை - வணிகவியல், மனையியல்,
புவியியல்
டிசம்பர் 16 வெள்ளிக்கிழமை -தகவல் மேலாண்மை ஆங்கிலம்,
இந்தியப் பண்பாடு, கணினி அறிவியல், உயிர் வேதியியல், சிறப்புத் தமிழ், புள்ளியியல்.
டிசம்பர் 19 திங்கள்கிழமை - இயற்பியல், பொருளியல்,
பொது இயந்திரவியல், மின்னனு சாதனங்கள், கட்டட வரைவாளர், மின் இயந்திரங்களும் சாதனங்களும், ஆட்டோ மெக்கானிக், நூற்பாலை தொழிற்நுட்பம், அலுவலக மேலாண்மை
டிசம்பர் 21 புதன்கிழமை -வேதியியல், கணக்கு பதிவியல்
டிசம்பர் 23 வெள்ளிக்கிழமை - உயிரியல், தாவரவியல்,
வரலாறு, வணிகக் கணிதம்
செய்முறை தேர்வு: இத்தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 1.15 மணி வரையில் நடைபெறும். இதில் பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவு, தட்டச்சு(தமிழ், ஆங்கிலம்) உள்பட செய்முறை தேர்வுகள் அனைத்தையும் அரையாண்டு தேர்வுக்கு முன்னரே நடத்தப்பட வேண்டும்.
10 ஆம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்வு கால அட்டவணை
டிசம்பர் 9 வெள்ளிக்கிழமை -தமிழ் முதல் தாள்
டிசம்பர் 10 சனிக்கிழமை - தமிழ் இரண்டாம் தாள்
டிசம்பர் 14 புதன்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்
டிசம்பர் 15 வியாழக்கிழமை -ஆங்கிலம் இரண்டாம் தாள்
டிசம்பர் 17 சனிக்கிழமை - கணிதம்
டிசம்பர் 19 திங்கள்கிழமை -அறிவியல்
டிசம்பர் 21 புதன்கிழமை -விருப்ப மொழி
டிசம்பர் 23 வெள்ளிக்கிழமை - சமூக அறிவியல்.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar