Latest

latest

பணத்தட்டுப்பாடு பேராவூரணி முடங்கியது விவசாயத் தொழில்.

Peravurani Town :

/ by IT TEAM

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், பேராவூரணி உருவான பணத்தட்டுப்பாடு, விவசாயத் தொழிலை முற்றிலும் முடக்கி விட்டது. இதனால் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பு பேராவூரணி  நகர்ப்புற பகுதி மக்கள் மட்டுமில்லாமல் கிராமப்புற மக்களையும் கடும் பாதிப்புக்கு ஆளாக்கி உள்ளது.
இதற்கிடையே விவசாயத்தையே பேராவூரணி, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கிராமங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
எனினும் பருவமழை பொய்த்து விட்டதால் ஏற்கெனவே விவசாயிகள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
இதற்கிடையே ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் உரம் உளளிட்ட இடுபொருள்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
பணத்தட்டுப்பாட்டால் நெற்பயிர்களுக்கு தேவையான இடுபொருள்கள் கூட வாங்க முடியவில்லை. விவசாயக் கூலித்தொழிலாளர்களுக்கும் ஊதியம் தரமுடியவில்லை. விவசாயிகளின் முதுகெலும்பை முறியடிக்கும் வகையில் மத்திய அரசின் செயல் உள்ளது என்றார்.
சோரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த உர விற்பனையாளர் முருகன் கூறுகையில்: கடைகளில் உரம் இருப்பு இருந்தபோதிலும், சில்லறை தட்டுப்பாட்டால் அதை விற்க முடியவில்லை. இதனால் கடைகளை மூடும் நிலை உள்ளது என்றார். பொய்த்துப் போன மழை, சில்லறை பிரச்னையால் கிடைக்காத உரம், போன்றவற்றை தாண்டியும் விவசாயம் செய்ய முனைந்தால் வேலைக்கு வரும் தொழிலாளர்களுக்கு 100, 200 ரூபாய் கூலி கொடுக்க முடியாமல அவதியுறுவதாக விநாயகம்பட்டு விவசாயி சுப்பிரமணி வேதனை தெரிவித்தார்.
விவசாய வேலை கிடைக்காமல் வீட்டில் இருக்கும் ரேஷன் அரிசியை வைத்துக் கொண்டு சமாளித்து வருகிறோம் என கூலித்தொழிலாளி இருசம்மாள் தெரிவித்தார். ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு பேராவூரணி நகரில் மட்டுமில்லாமல் கிராமப்புறங்களிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar