Latest

latest

புதிய ரூபாய் நோட்டுகள் பெற முதலில் இது முக்கியம்.

Peravurani Town :

/ by IT TEAM

புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை பெற அனைத்து வங்களிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் இருந்து பணம் பெற்று வருகின்றனர்.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இரவு திடீரென அறிவித்தார். இந்த அறிவிப்பால் பொதுமக்கள், வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 2 நாட்கள் ஏடிஎம் செயல்படாது என்ற அறிவிப்பாலும் மக்கள் பணம் எடுக்க முடியாமல் கடும் சிரமத்தை சந்தித்தனர். அதிகாலையிலேயே மக்கள் கடைகளுக்கு 500 ரூபாய் நோட்டுகளுடன் படையெடுத்ததால் வியாபாரிகள் நிலைகுலைந்து போனார்கள். "செல்லாத பணத்தை நான் எப்படி வாங்குவது" என்று கூறி பொதுமக்களை திரும்பி அனுப்பினர் வியாபாரிகள். தெரிந்த கடைகளில் மக்கள் கடன் வைத்து பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் சென்றனர்.

இந்த நிலையில், நவம்பர் 10-ம் தேதி (இன்று) அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது. அதன்படி, பொதுமக்கள் இன்று பொதுத்துறை வங்கிகளில் குவிந்தனர். சென்னை அண்ணாசாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 3 கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. முதல் கவுன்ட்டரில் பணம் பெற்றுக் கொள்ளும் வசதியும், 2-வது கவுன்ட்டரில் காசோலை, டிடி கொடுக்கும் வசதியும், 3-வது கவுன்ட்டரில் பணம் டெபாசிட் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வங்கியில் நுழைந்தவுடன் ஊழியர் ஒருவர் விண்ணப்பத்துடன் காத்தி்ருக்கிறார். அவர்கள் நீங்கள் எதற்காக வந்தீர்கள் என்ற கேள்வியுடன், பொதுமக்கள் சொல்லும் பதிலைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கவுன்ட்டருக்கு செல்லுங்கள் என்று அனுப்பி வைக்கிறார். பணம் பெற வந்தவர்களுக்கு மட்டும் விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது. அந்த விண்ணப்பத்தில், உங்கள் வங்கியின் பெயர், ஆதார் அட்டை, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு, என்ஆர்இஜிஏ கார்டு உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒரு அடையாள அட்டை, உங்கள் செல்போன் நம்பர் மற்றும் பழைய 500, 1000 ரூபாய் விவரங்கள், கையெழுத்து உள்ளிட்டவை உள்ளன. இதனை பூர்த்தி செய்து பொதுமக்கள் பணத்தை பெற்றுச் செல்கின்றனர்.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar