அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

No comments

Peravurani Town :


நாளை முதல் ஏடிஎம்களில் இனி ரூ.4,500 எடுக்கலாம்: ரிசர்வ் வங்கி

No comments

கருப்பு பண ஒழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை கடந்த நவம்பர் 8–ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி அதிரடியாக ஒழித்தார். இதனால் கடும் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும் ஏ.டி.எம். மையங்களில் ஒரு நாளைக்கு ரூ.2,000 மட்டுமே எடுக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் அது ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் நாளை (1–ந்தேதி) முதல் ஏ.டி.எம்.மில் ஒரு நாளுக்கு ரூ.4,500 எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி இரவு திடீரென அறிவித்தது.  மேலும் ஏ.டி.எம்.மில் பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பேராவூரணி ஐயப்பன் பக்தர்கள் குரு பூஜை.

No comments

Peravurani Town :


பழைய பேராவூரணி TKR குரூப்ஸ் குரு பூஜை.

வாத்தலைக்காடு ஸ்ரீ ஹனுமன் ஜெயந்தி மஹா யாக விழா.

No comments

பேராவூரணி சாரல் மழை.

No comments

2017 கலண்டர்

No comments


பேராவூரணி அடுத்த மனோராவில் சலங்கை நாதம் 2016.

No comments

Peravurani Town :


அனைவருக்கும் கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

No comments

பேராவூரணி மின்சார வாரியம் அறிவிப்பு டிசம்பர் 26 மின் தடை.

No comments

பேராவூரணி மற்றும் சேதுபவசத்திரம், பெருமகளூர், திருச்சிற்றம்பலம், ஒட்டங்காடு அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் மின்வாரியம் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், திங்கள்கிழமை(டிசம்பர் . 26) மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

பேராவூரணி கூலி வழங்குவதில் தாமதம் கோட்டாட்சியரை முற்றுகையிட்ட நூறுநாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள்

No comments

Peravurani Town :


பேராவூரணி  அருகே காலகம் கிராமத்தில் நூறுநாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக கூலி வழங்கப்படவில்லை எனக்கூறி அம்மா திட்ட முகாமிற்கு வந்திருந்த பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.பேராவூரணியை அடுத்த காலகம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமையன்று அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, வட்டாட்சியர் தங்க.பிரபாகரன் மற்றும் பிரமுகர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கோட்டாட்சியர் காரில் ஏறும்போது, கோட்டாட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள், “காலகம் ஊராட்சியில் கடந்த பல மாதங்களாகவே நூறுநாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் ஒழுங்காக வழங்கப்படுவதில்லை. குறிப்பாக பஞ்சாமிர்தம், சிவபாக்கியம், அஞ்சலை, தங்கம், கனகம், மாணிக்கம் உள்ளிட்ட பலருக்கு கடந்த சில மாதங்களாகவே கணக்கில் ஊதியம் வழங்கப்படவில்லை எனவும், வங்கிப் புத்தகம் வழங்கப்படவில்லை எனவும், சட்டபூர்வமான கூலி வழங்கப்படாமல், கூலியாக ரூ.80, 90 மட்டுமே வழங்கப்படுவதாகவும், வேலையில்லை என பலரையும் திருப்பி அனுப்புவதாகவும், வேலை செய்த பணம் கணக்கில் ஏறுகிறதா என்றுகூட தெரியவில்லை என்று நூறுநாள் வேலைத்திட்ட பணியாளர்கள் சரமாரியாக புகார் செய்தனர். இதனை கேட்ட கோட்டாட்சியர், பொதுமக்கள் குறைகள் களையப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் குறைகள் குறித்து வங்கி முகவர்களை அழைத்துப் பேசி, உரிய நடவடிக்கை எடுக்க வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார். மேலும் தங்கள் குறைகளை தன்னிடம் கோட்டாட்சியர் அலுவலகம் வந்து மனுவாக தருமாறு கேட்டுக் கொண்டார்.
நன்றி  : தீக்கதிர் 

வரலாற்றில் இன்று 23.12.2016.

No comments

டிசம்பர் 23 கிரிகோரியன் ஆண்டின் 357 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 358 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் எட்டு நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1783 – ஜோர்ஜ் வாஷிங்டன் இராணுவத்தளபதி பதவியில் இருந்து விலகினார்.
1914 – முதலாம் உலகப் போர்: அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்துப் படைகள் கெய்ரோவில் தரையிறங்கினர்.
1916 – முதலாம் உலகப் போர்: எகிப்தின் சினாய்க் குடாவில் கூட்டுப் படைகள் துருக்கியப் படைகளுடன் இடம்பெற்ற சமரில் வெற்றி பெற்றனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய இராணுவம் வேக் தீவைக் கைப்பற்றியது.
1947 – முதலாவது டிரான்சிஸ்டர் பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
1948 – பிரதமர் டோஜோ உட்பட ஏழு ஜப்பானியப் போர்க் குற்றவாளிகளுக்கு டோக்கியோவின் சுகோமோ சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1954 – முதலாவது மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மேற்கொள்ளப்பட்டது.
1958 – டோக்கியோ கோபுரம், உலகின் மிகப்பெரிய இரும்பினாலான கோபுரம், திறக்கப்பட்டது.
1972 – நிக்கராகுவா நாட்டின் தலைநகர் மனாகுவாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000க்கு மேற்பட்டோர் இறந்தனர்.
1972 – தென்னமெரிக்காவில் ஆண்டீஸ் மலைத்தொடரில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிர் தப்பிய 16 பேர் 73 நாட்களுக்குப் பின்னர் காப்பாற்றப்பட்டனர்.
1979 – சோவியத் படையினர் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலைக் கைப்பற்றினர்.
1986 – எங்கும் தரையிறங்காமல் முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த வொயேஜர் விமானம், டிக் ரூட்டன், ஜீனா யேகர் ஆகிய விமானிகளுடன் கலிபோர்னியாவில் தரையிறங்கியது.
1990 – 88% சிலொவேனிய மக்கள் யூகொஸ்லாவியாவில் இருந்து பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
2004 – தெற்குப் பெருங்கடலில் உள்ள மக்குவாரி தீவில் 8.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
2005 – அசர்பைஜான் விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் பக்கூ நகரில் வீழ்ந்து நொருங்கியதில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
2005 – சாட் சூடானுடன் போரை அறிவித்தது.
பிறப்புக்கள்
1807 – அந்தோனி மரிய கிளாரட், ஸ்பானிய ரோமன் கத்தோலிக்க மறைப்போதகர் (இ. 1870)
1902 – சரண் சிங், இந்தியக் குடியரசின் 7வது பிரதமர் (இ. 1987)
1956 – பொன்னம்மான், விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் (இ. 1987)
இறப்புகள்
1907 – பியேர் ஜான்சென், பிரெஞ்சு வானியலாளர் (பி. 1824)
1972 – அந்திரே தூப்பொலியெவ், சோவியத் விமான வடிவமைப்பாளர் (பி. 1888)
1981 பி. கக்கன் இந்திய விடுதலை போராட்ட வீரர், (பி.1908)
2004 – பி. வி. நரசிம்மராவ் ஒன்பதாவது இந்தியப் பிரதமர் (பி. 1921)
2013 – மிக்கைல் கலாசுனிக்கோவ், ஏகே47 துப்பாக்கியை வடிவமைத்தவர் (பி. 1919)
2014 – கே. பாலச்சந்தர், திரைப்பட இயக்குனர் (பி. 1930)

பேராவூரணி அடுத்த வாத்தலைக்காடு ஸ்ரீ ஹனுமன் ஜெயந்தி மஹாயாகம் டிசம்பர் 28.

No comments

ஸ்ரீ ஹனுமன் ஜெயந்தி மஹாயாகம் அழைப்பிதழ்.

பேராவூரணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடலை சாகுபடி.

No comments
பேராவூரணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு தினங்கள் முன்பு கனமழை பெய்தது  இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பேராவூரணி கடைமடை பகுதியில் கனமழை கடலை சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி.

விவசாயிகள் தினம்.

No comments

விவசாயிகள் தினம்.

இந்தியா ஒரு விவசாய நாடு என்ற பழம்பெருமையைப் பறைசாற்றிக் கொள்ளும் அரசாங்கங்கள், விவசாயத்தை மேம்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் மூலமாக நாட்டை வீழ்ச்சியில்தான் தள்ளிக் கொண்டிருக்கின்றன. அரசாங்கத்தின் போதிய ஆதரவு இல்லாததால், பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை விட்டு விரக்தியோடு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். மற்றொரு பக்கம், 'விவசாயம் இனி இளைஞர்கள் கைகளில்’ என்ற 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வாரின் கூற்றை உண்மையாக்கும் வகையில் வருங்கால தலைமுறையின் கவனம் விவசாயத்தின் பக்கம் திரும்பி வருவது, ஆரோக்கிய மாற்றம்.

விவசாயம் பெருமதிப்புமிக்கதாக நாளாக மாற விவசாயத்தையும், விவசாயிகளுக்கும் இந்த சிறப்பு மிக்க நாளில் வாழ்த்துகளை பகிர்வோம்

பேராவூரணி ஆவணம் ரோடு முக்கம்.

No comments

Peravurani Town :


பேராவூரணி நகர்புற பகுதிகளில் மிதமான மழை.

No comments

Peravurani Town :


பேராவூரணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை. இதனால் பொதுமக்களும், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

பேராவூரணி முதல் பழனி பாதயாத்திரை பக்தர்கள் பயண விபரம்.

No comments

அன்னதான விபரம் பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு பேராவூரணி முதல் பழனி வரை.

நெடுந்தீவு அருகே கோட்டைபட்டிணம் மீனவர்கள் 7 பேர் கைது.

No comments


புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணம் சேர்ந்த மீனவர்கள் 7 பேர் இலங்கை அருகே நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். அவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்திய 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுவரை மீனவர்கள் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

பேராவூரணி ஐயப்பன் கோவில்.

No comments

Peravurani Town :


பாரம்பரிய நெல் விதைகள்.

No comments

உத்தரகாண்டில் திருவள்ளுவர் சிலை திறப்பு.

No comments

 


தஞ்சாவூர் ஸ்பெஷல் உலக புகழ்பெற்ற தலையாட்டி பொம்மைகள்.

No comments





இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டி : முச்சதம் விளாசி இந்திய வீரர் கருண் நாயர் சாதனை.

No comments

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு 5வது டெஸ்ட் போட்யில் இந்திய வீரர் கருண் நாயர் முச்சதம் விளாசினார். மேலும் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். அலி 146 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 477 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. ராகுலின் சதத்தாலும், கருண் நாயரின் இரட்டை சதத்தாலும் இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டது. பின்னர் அதிரடியாக விளையாடிய கருண் நாயர் முச்சதம் விளாசினார்.

இங்கிலாந்துக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கருண் நாயர் இரட்டை சதம்.

No comments

இன்றைய தங்கம் விலை நிலவரம்.

No comments

தங்கம் விலை இன்று குறைந்துள்ளது அதேநேரத்தில் வெள்ளியின் விலை சற்று உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் 4 ரூபாய் குறைந்து, 2 ஆயிரத்து 666 ரூபாயாக உள்ளது. சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து, 21 ஆயிரத்து 328 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் 4 ரூபாய் விலை குறைந்து 2 ஆயிரத்து 787 ரூபாயாக இருக்கிறது. வெள்ளி கிராமுக்கு 10 காசு உயர்ந்து, 42 ரூபாய் 20 காசாகவும், கிலோவுக்கு 130 ரூபாய் அதிகரித்து 39 ஆயிரத்து 435 ரூபாயாகவும் உள்ளது.

ரிசர்வ் வங்கி புது கட்டுப்பாடு.

No comments

Peravurani Town :


பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் டிசம்பர் 30 வரை வங்கிகளில் செலுத்த புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
1. ஒரு முறை மற்றுமே வங்கியில் செலுத்தலாம் .
2. ரூபாய் 5000க்கு மேல் டெபாசிட் ஒரு முறை தான் செலுத்த முடியும் .
3. 5000க்கு மேல் டெபாசிட் செய்ய புதிய விதிமுறைகளை பற்றி இன்று மாலை அறிவிக்கப்படும்.
4. கருப்பு பண திட்டத்தில் டெபாசிட் செய்ய இந்த விதிமுறை பொருந்தாது .

ரூ. 500, 1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்த மத்திய அரசை கண்டித்து தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பில் பேராவூரணி அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

No comments



ஏழை, எளிய, உழைக்கும் மக்களை வாட்டி வதைக்கும் வகையில் மத்திய அரசால், ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ந்தேதி அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் சிரமப்பட்டு வருவதால் மத்திய அரசை கண்டித்து தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பில் பேராவூரணி அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
பொதுச் செயலாளர் வி.சி.முருகையன் தலைமை வகித்தார். தலைவர் அரங்க.குணசேகரன், உழவர் உழைப்பாளர் இயக்க தலைவர் கோ.திருநாவுக்கரசு, ஆறு.நீலகண்டன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்டக்குழு உறுப்பினர் வி.கருப்பையா, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் பா.பாலசுந்தரம் மற்றும் த.ஜேம்ஸ், சித.திருவேங்கடம், நா.வெங்கடேசன், ச.அப்துல் சலாம், தா.கலைச்செல்வன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பிஎஸ்என்எல்-ல் புதிய திட்டங்கள் அறிமுகம்.

No comments

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் மொபைல் வாடிக்கையாளர்களுக்குப் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தஞ்சாவூர் பொது மேலாளர் ச.வி. வினோத் தெரிவித்திருப்பது:
பி.எஸ்.என்.எல். அரசுப் பொது நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் புதிய திட்டங்களை ஞாயிற்றுக்கிழமை (டிச.18) முதல் வருகிற 2017 ஆம் ஆண்டு மார்ச் 17-ம் தேதி வரை 90 நாள்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.
இதில், கோம்போ - 339 என்ற திட்டத்தின் மூலம் ரூ. 339 செலுத்தி 28 நாள்களுக்கு அகில இந்திய அளவில் அனைத்து மொபைல் எண்களுக்கும் அளவில்லா அழைப்புகள் பேசலாம். மேலும், இத்துடன் ஒரு ஜி.பி.
டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. 
கோம்போ - 139 என்ற திட்டத்தின் மூலம் ரூ. 139 செலுத்தி 28 நாள்களுக்கு அகில இந்திய அளவில் பி.எஸ்.என்.எல். எண்களுக்குள் மட்டும் அளவில்லா அழைப்புகள் பேசலாம். மேலும், இத்துடன் 300 எம்.பி. டேட்டா இலவசமாக வழங்கப்படும்.
இந்தச் சிறப்புக் கட்டணச் சேவையைத் தாங்களாகவே சி - டாப்அப் மூலமாகவும், வாடிக்கையாளர் சேவை மையம், பி.எஸ்.என்.எல். வெப் போர்டல் மூலமாகவும் பெறலாம்.

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு.

No comments

Peravurani Town :


பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.83, டீசல் விலை லிட்டருக்கு 2.18 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது..

நள்ளிரவு முதல் புதிய விலை அமலாகிறது..

பெட்ரோல் புதிய விலை : Rs. 68.41
டீசல் புதிய விலை :  Rs. 58.28


10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு.

No comments

மார்ச் 2ல்  12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2016 - 17ம் ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதேபோல் மார்ச் 8 ல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 12ம் வகுப்பு தேர்வு காலை 10 மணிக்கு ஆரம்பித்து மதியம் 1.15 மணிக்கு முடிகிறது. இதேபோல் 10ம் வகுப்பு தேர்வு காலை 9.15 மணிக்கு ஆரம்பித்து பகல் 12 மணிக்கு முடிகிறது.

12ம் வகுப்பு தேர்வு தேதி
மார்ச் 2 முதல் தாள் 


மார்ச் 3 இரண்டாம் தாள் 


மார்ச் 6 ஆங்கிலம் முதல்தாள்


மார்ச் 7 ஆங்கிலம் இரண்டாம்தாள் 


மார்ச் 10 வணிகம் / குடும்ப அறிவியல்/ புவியியல் 


மார்ச் 13 வேதியியல் / கணக்கு பதிவியல் 


மார்ச் 17 இந்திய கலாச்சாரம்/ கணினி அறிவியல் / உயிரி வேதியியல்/ சிறப்பு தமிழ் / சிறப்பு ஆங்கிலம் 


மார்ச் 21 இயற்பியல் / பொருளியல் 


மார்ச் 24 அரசியல் அறிவியல்/ நர்சிங்/ புள்ளியியல் 


மார்ச் 27 கணிதம்/ விலங்கியல் / நுண் உயிரியல் ஊட்டசத்து / உணவியல் 


மார்ச் 31 உயிரியல் / வணிக கணிதம் / வரலாறு / தாவரவியல்  


10ம் வகுப்பு தேர்வு தேதி


மார்ச் 8 தமிழ் முதல்தாள் 


மார்ச் 9 தமிழ் இரண்டாம்தாள் 


மார்ச் 14 ஆங்கிலம் முதல்தாள்


மார்ச் 16 ஆங்கிலம் இரண்டாம்தாள்


மார்ச் 20 கணிதம் 


மார்ச் 23 அறிவியல் 


மார்ச் 28 சமூகஅறிவியல்
Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar