Latest

latest

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் பெற நுண்ணூட்டச்சத்து கரைசல் விவசாயிகளுக்கு யோசனை.

Peravurani Town :

/ by IT TEAM
நிலக்கடலை பயிர் வளர்ச்சி பருவம், விழுது இறங்கும் பருவம், காய் பிடிக்கும் பருவம் என பல்வேறு நிலைகளில் உள்ளது. இத்தருணத்தில் நுண்ணூட்ட சத்து கரைசல் தெளிப்பது அவசியமாகிறது.

ஒரு ஏக்கருக்கு தேவையான டிஏபி ஒரு கிலோ, அம்மோனியம் சல்பேட் 400 கிராம், பொட்டாஷ் ஒரு கிலோ, பிளானோபிக்ஸ் 125 மில்லியை எடுத்து கொள்ள வேண்டும். இவற்றில் டிஏபி உரத்தை (1 கிலோ) நன்கு தூள் செய்து 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாளே ஊறவைக்க வேண்டும். மறுநாள் தெளிந்த கரைசலை மட்டும் எடுத்து கொண்டு மேற்கண்ட பிற பொருட்களையும் (பிளானோபிக்ஸ் தவிர்த்து) கலந்து 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கலவையாக்கி ஒரு ஏக்கர் பரப்பில் மாலை வேளையில் கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். பிளானோபிக்ஸ் பயிர் ஊக்கி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தனியாக தெளிக்க வேண்டும். இம்மாதிரியான கரைசலை விதைத்த 25வது நாள், 40வது நாள் தெளிக்க வேண்டும். மேலும் 45வது நாள் பூக்கும் தருணத்தில் களைக்கொத்தி மண் அணைக்கும் முன் ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சமிட்டு மண் அணைக்க வேண்டும். பிளானோபிக்ஸ் பயிர் ஊக்கி மருந்து தெளிப்பதால் பூக்கள் உதிர்வது தடுக்கப்பட்டு விழுதுகளாக மாறுகிறது.

நுண்சத்து கரைசல் தெளிப்பு மற்றும் ஜிப்சமிடுவதால் அனைத்து பேரூட்டம் மற்றும் நுண்ணூட்ட சத்துகளை பயிர்கள் நேரடியாக எடுத்து கொண்டு உருவாகும் விழுதுகள் அனைத்தும் காய்களாக மாறி பொக்கற்ற திரட்சியான நல்ல எடையுடன் கூடிய தரமான கடலை பருப்புகள் உருவாகிறது. இதனால் ஒரு ஏக்கரில் 25 முதல் 30 சதம் வரை கூடுதலாக மகசூல் கிடைக்கிறது. நிலக்கடலை சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் இந்த குறைந்த செலவு தொழில்நுட்பங்களை கடைபிடித்து அதிக லாபம் பெறலாம்.
நன்றி : தினகரன் 

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar