Latest

latest

பேராவூரணி அடுத்த நெடுவாசலில் 7வது நாளாக நேற்று ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக வாயில் கருப்பு துணி கட்டி பேரணியாக சென்றனர்.

Peravurani Town :

/ by IT TEAM



புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த மாதம் 15-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு உட்பட அப்பகுதியில் உள்ள பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக திமுக செயல்தலைவர் முக.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினரும், திரைப்படதுறையினர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த 9-ம் தேதி நெடுவாசல் போராட்டகாரர்கள் போராட்டத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக போராட்ட குழுவினர் அறிவித்தனர். ஆனால் நல்லாண்டார்கொல்லை மற்றும் வடகாட்டில் போராட்டம் தொடர்ந்தது.
இதனைதொடர்ந்து நல்லாண்டார்கொல்லை மற்றும் வடகாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தியும், இறுதிசடங்கு செய்தும், 8-ம் நாள் சடங்கு செய்தும், மொட்டையடித்தும், நாயிடம் மனு கொடுத்தும், மாட்டிடம் மனு கொடுப்பது, தூக்குபோட்டுக்கொள்வது, ஆதிவாசி வேடம் போன்ற பல்வேறு வகையான தூதன போராட்டங்களை போராட்ட குழுவினர் நடத்தினர்.
மேலும் இந்த ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்ந்தால் குடிநீர் மாசுபடும், விவசாய நிலங்கள் பாலைவனமாக மாறும், இங்கு மனிதர்கள் வாழமுடியாது என்பதை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் ஆடு, மாடுகளுடன் ஊரைக்காலி செய்து அகதிகளாக செல்லும் போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கணேஷ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.
ஆனால் மத்திய பெட்ரோலியதுறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த கர்னாடகாவை சேர்ந்த ஜெம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார். இதனால் அதிர்சியடைந்த அப்பகுதி பெண்கள் மற்றும் இளைஞர்கள் நேற்று நடந்த ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான 7 வது நாள் போராட்டத்தில் வாயில் கருப்பு துணி கட்டி பேரணியாக சென்றனர்.
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி போராட்டம் தொடங்கிய நாள் முதல் 22 நாட்களுக்கு தினமும் சமைத்து கொடுக்கப்பட்டது. பிறகு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட போராட்டம் மீண்டும் கடந்த 12ம் தேதி தொடங்கியது. ஆனால் அங்கு சமையல் செய்யப்படவில்லை. இந்நிலையில் நேற்று முதல் மீண்டும் சமையல் தொடங்கி உள்ளது.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar