Latest

latest

செங்குத்தான சாலையால் ஏற்படும் சிரமங்கள் ரயில்வே, நெடுஞ்சாலை நிர்வாகம் கவனிக்குமா.

Peravurani Town :

/ by IT TEAM

பேராவூரணி - அறந்தா ங்கி சாலையில் ஆதனூர் வழியாக ரெட்டவயல் செல்லும் இணைப்பு சாலை யில், பேராவூரணி காவல்நி லையம் பின்புறம் பேராவூ ரணி - காரைக்குடி ரயில் பாதை செல்கிறது. இதை அகல ரயில்பா தையாக மாற்றுவதற்கான பணிகள் நடந்து கொண்டி ருக்கின்றன. புதிதாக அமைக்கப்பட்டு வரும் ரயில் பாதை சாலையில் இருந்து மிகவும் உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இப்போது பேருந்துகள், பொதுமக்கள் சென்று கொண்டிருக்கும் தார்சாலை யிலிருந்து 10 அடி உய ரத்தில் செங்குத்தாக உள்ளது.கூப்புளிக்காடு, கருப்ப மனை, ஆதனூர், பாங்கி ரான்கொல்லை, கழனி வாசல், கொரட்டூர், மணக்காடு என 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பேராவூரணியிலிருந்து ரெட்டவயல் செல்லும் இச்சாலையைக் கடந்துதான் பேராவூரணி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
மேலும் இதன் அருகில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஏராள மான மாணவ, மாணவி யர்கள் சென்று வருகின்ற னர்.பள்ளிக்கு செல்லும் மாணவ - மாணவியர்களின் நிலை மிகவும் மோசம். வெள்ளைச் சட்டை சீருடை அணிந்து செல்லும் மாண வர்கள் இந்த இடத்தை கடக்கும் போது தடுமாறி கீழே விழுந்தால் வெள்ளை ச்சட்டை காவி நிறமாக மாறி விடுகிறது.ஒரு பக்கத்திலிருந்து இரு சக்கர வாகனமோ, நான்கு சக்கர வாகனமோ மறுபுறத்திற்கு ஏறி இறங்கும் போது ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு அதிக விபத்துகள் ஏற்படு கின்றன. காரணம் சாலை செங்குத்தாக இருப்பதால் மறு புறத்திலிருந்து வரும்வாகனம் எதிரே வருப வர்களுக்கு தெரிவதில்லை.இது குறித்து இப்பகு தியைச் சேர்ந்த ஏ.டி.எஸ்.குமரேசன் கூறுகையில், “இங்கு ஒரு நாளைக்கு 10 க்கும் மேற்பட்ட விபத்துகள், கீழே தடு மாறி விழுதல் போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடை பெறுகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதே நிலை தான் டாக்டர் ஜமால் மருத்துவமனை செ ல்லும் வழியிலும், நாட்டா ணிக் கோட்டை செல்லும்சாலையிலும் காணப்ப டுகிறது.ரயில்வே ஒப்பந்தகா ரர்களோ அல்லது நெடு ஞ்சாலை துறையினரோ இந்த செங்குத்தான பாதை யை மாற்றி, எதிரே வரும் வாகனம் ஓட்டுநர்களுக்கு தெரியுமளவிற்கு சாலை யை சரி செய்து கொடுத்தால் மட்டுமே நடக்கவிருக்கும் விபத்துக்களை தடுக்க முடியும்” என்றார்.ரயில்வே துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் பிர ச்சனைக்குரிய சாலைகளை பார்வையிட்டு உரிய ஏற்பா டுகளை செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.


நன்றி; தீக்கதிர், மெய்சுடர்

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar