உடையநாடு CRESCENT GUYS நண்பர்களால் நடத்தப்படும் சுழற்கோப்பைகான கைப்பந்து போட்டி 27,28-05-2017.

No comments

Peravurani Town :

பேராவூரணி அடுத்த உடையநாடு CRESCENT GUYS நண்பர்களால் நடத்தப்படும் சுழற்கோப்பைகான கைப்பந்து போட்டி 27.28-05-2017 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த போட்டி இரவு 07 மணியளவில் தொடங்கி நடைபெறவுள்ள கைப்பந்து போட்டி
முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹25,000 பரிசும்,
இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹20,000 பரிசும்,
மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹15,000 பரிசும்,
நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹10,000 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹800 நுழைவுகட்டணமா வசூலிக்கப்படும்.

பேராவூரணி ரெட்டவயல் சாலையை சரி செய்யகோரிக்கை.

No comments

பேராவூரணி – ரெட்டவயல் மெயின் சாலையின் குறுக்கே ரயில்வே சாலையில் செங்குத்தான பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்து தருமாறு

பேராவூரணி மகாத்மா காந்திஜி இளைஞர் நற்பணி மன்ற தலைவர் வேத .குஞ்சருளன் மாவட்ட ஆட்சியருக்கு மனுஅனுப்பியுள்ளார்.

அவ் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது,
பேராவூரணி காவல் நிலையம் அருகே ஆதனூர் வழியாக நெல்லடிக்காடு, ரெட்ட வயல் வழியாக ஆவுடையார் கோவில் செல்லும் மெயின் சாலையில் காவல் நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் ரயில்வே சாலை மெயின் சாலையின் குறுக்கே செல்கிறது. ரயில்வே துறையினர் அகல ரயில் பாதை அமைப்பதற்கான பணிகளை செய்து வரும்போது மெயின் சாலையை விட ரயில்வே சாலை சுமார் 10 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இதனால் ரயில்வே சாலையை கடக்கும் இடம் செங்குத்தான நிலையில் ஏறி இறங்க வேண்டிய சூழ்நிலையில்  25க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் இந்த வழியாக தான் பேராவூரணி நகருக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர் . மேலும் ஒரு பக்கத்திலிருந்து வாகனம் ஏறும் போது எதிரே வரும் வாகனம் தெரியாமல் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் அபாயம் உள்ளது. இல்லை என்றால் பின்னால் வாகனத்தை எடுக்கும் போது பிரேக் பிடிக்க முடியாமல் பின்னால் செல்லும் வாகனங்களில் ஏறி சேதங்கள் அதிகம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

ஒரு நாளைக்கு குறைந்தது 10 வாகனத்தில் செல்பவர்களாவது விழுந்து எழும் சூழ்நிலையில் உள்ளனர்.மேலும் விவசாயிகள் விவசாயம் செய்த காய்கறி, மற்றும் நவதானியங்களை விற்பனை செய்ய கொண்டு செல்லும்போது செங்குத்தான பாதையில் ஏறி செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும் விவசாயிகள் சைக்கிள் மூலம் விளைப்பொருட்களை கொண்டுச் செல்ல சம்பளத்திற்கு ஆள் கூட்டிச் செல்லும் சூழ்நிலையில் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர் எனவே தாங்கள் இந்த மனுவை ஏற்று சாலையை அகலப்படுத்தியும், எதிரே வரும் வாகனம் தெரியும் அளவிற்கு மெயின் சாலையை உயர்த்தியும் தந்து பொது மக்களின் கஷ்டம் போக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

வரலாற்றில் இன்று மே 25.

No comments

மே 25  கிரிகோரியன் ஆண்டின் 145 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 146 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 220 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1659 – ரிச்சார்ட் குரொம்வெல் இங்கிலாந்தின் “ஆட்சிக் காவலர் பெருமகன்” (Lord Protector) பதவியைத் துறந்தார். பொதுநலவாய இங்கிலாந்தின் இரண்டாவது குறுகிய கால அரசு ஆரம்பமானது.
1810 – ஆர்ஜெண்டீனாவில் இடம்பெற்ற புரட்சியின் போது ஆயுதம் தரித்த பியூனஸ் அயரஸ் மக்கள் ஸ்பெயின் ஆளுனரை வெளியேற்றினார்கள்.
1812 – இங்கிலாந்தில் ஜரோ என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க வெடி விபத்தில் 96 பேர் கொல்லப்பட்டனர்.
1837 – கியூபெக்கில் பிரித்தானியாவின் ஆட்சிக்கெதிராக நாட்டுப்பற்றாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள்.
1865 – அலபாமாவில் “மொபைல்” என்ற இடத்தில் தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
1895 – போர்மோசா குடியரசு அமைக்கப்பட்டது.
1953 – நெவாடாவில் ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவதும் கடைசியுமான அணு ஆற்றலினாலான பீரங்கியைச் சோதித்தது.
1955 – ஐக்கிய அமெரிக்காவில் கன்சாஸ் மாநிலத்தில் “உடால்” என்ற சிறு நகரை இரவு நேர சூறாவளி தாக்கியதில் 80 பேர் கொல்லப்பட்டனர்.
1961 – அப்பல்லோ திட்டம்: பத்தாண்டுகளின் இறுதிக்குள் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஐக்கிய அமெரிக்காவின் திட்டத்தை அதிபர் ஜோன் எஃப். கென்னடி அமெரிக்கக் காங்கிரசில் அறிவித்தார்.
1963 – அடிஸ் அபாபாவில் ஆபிரிக்க ஒன்றியம் உருவானது.
1966 – எக்ஸ்புளோரர் 32 விண்வெளிக்கு ஏவப்பட்டது.
1977 – ஸ்டார் வோர்ஸ் திரைப்படம் வெளிவந்தது.
1979 – ஐக்கிய அமெரிக்காவின் ட்சி-10 விமானம் ஒன்று சிக்காகோவில் விபத்துக்குள்லாகியதில் அதில் பயணித்த 271 பேரும் தரையில் இருவரும் கொல்லப்பட்டனர்.
1982 – போக்லாந்து போரில் கவெண்ட்ரி என்ற ஆங்கிலக் கப்பல் மூழ்கியது.
1985 – வங்காள தேசத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1997 – சியேரா லியோனியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் அகமது கப்பா பதவியில் இருந்து ஆகற்றப்பட்டார்.
2000 – லெபனானில் 22 ஆண்டுகளாக நிலை கொண்டிருந்த இஸ்ரேல் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறினர்.
2001 – அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயது எரிக் வைஹன்மாயர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது கண் பார்வை இழந்த மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.
2002 – சீன விமானம் ஒன்று தாய்வானில் நடுவானில் வெடித்துச் சிதறியதில் 225 பேர் கொல்லப்பட்டனர்.
2002 – மொசாம்பிக்கில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 197 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1458 – மஹ்மூத் பேகடா, குஜராத் சுல்தான் (இ. 1511)
1865 – பீட்டர் சீமன், நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (இ. 1943)
1866 – மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, தமிழறிஞர் (இ. 1947)
1878 – சோமசுந்தரப் புலவர், ஈழத்துப் புலவர் (இ. 1953)
1918 – நா. முத்தையா, ஆத்மஜோதி இதழாசிரியர் (இ. 1995)
1933 – அநு. வை. நாகராஜன், ஈழத்து எழுத்தாளர்
1954 – முரளி, மலையாள நடிகர் (இ. 2009)

இறப்புகள்

  19?? – சி. வைத்திலிங்கம், ஈழத்து சிறுகதை முன்னோடிகளுள் ஒருவர்.
1988 – ஏர்ணஸ்ட் ருஸ்கா, ஜெர்மனிய இயற்பியலாளர் (பி. 1906)
2005 – சுனில் தத், இந்திய நடிகர், அரசியல்வாதி (இ. 1929)
   2013 – டி. எம். சௌந்தரராஜன் தமிழ்த் திரைப்படப் பாடகர், (பி. 1923)

சிறப்பு நாள்

சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்.
ஆர்ஜென்டீனா – மே புரட்சி நாள்
சாட், லைபீரியா, மாலி, மவ்ரித்தானியா, நமீபியா, சாம்பியா, சிம்பாப்வே – ஆபிரிக்க விடுதலை நாள்
லெபனான் – விடுதலை நாள் (2000)

பேராவூரணி அருகே மதுக்கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்.

No comments

Peravurani Town :

பேராவூரணி- அறந்தாங்கி சாலையில் படப்பனார்வயல் கிராமத்தில் அரசு மதுக்கடை கடந்த சில வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த கடை அருகே பஸ் நிறுத்தம், பள்ளிக்கூடம், அம்மாவாரச்சந்தை, அரவைமில் மற்றும் கடைவீதி உள்ளது. இந்த மதுக்கடையில் மது அருந்துபவர்கள் பெண்களை கேலி செய்வது, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நின்று தகராறு செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே இந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இது குறித்து பல முறை அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால் அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பேச்சுவார்த்தை
நேற்று காலை மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த வேணிகலா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கோட்ட கலால் அலுவலர் புண்ணியமூர்த்தி, திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், பேராவூரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இந்த மதுக் கடையை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது அதிகாரிகள் மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற ஒரு மாதம் கால அவகாசம் தேவை என்றும், வருகிற 30-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தை கூட்டத்தில் இது குறித்து பேசி தீர்வு காணலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.

தஞ்சை பெரியகோவில் பிரதோஷம் புகைப்படம்.

No comments

தஞ்சை பெரியகோவில் பிரதோஷம் புகைப்படம். 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெருமகளூரில் முறையீடு மனு அளித்தல் ஆர்ப்பாட்டம்.

No comments

சேதுபாவாசத்திரம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பெருமகளூர் பேரூராட்சி அலுவலம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பெருமகளூர் பேரூராட்சி அலுவலகம் முன்பாக நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் முறையீடு, மனு அளித்தல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளை செயலாளர் வீரப்பெருமாள் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் கருப்பையா, ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான பழனிவேலு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பெருமகளூர் பேரூராட்சி பகுதிகளில் 100 நாள் வேலைத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்திடவேண்டும் . 24 மணி நேரமும் மருத்துவமனையாக செயல்படுத்த வேண்டும். அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். பெருமகளூர்-ரெட்டவயல் சாலையை சீரமைத்து, கடைவீதியில் உள்ள மதுக்கடை, ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். ஒன்றியத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரிட வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நன்றி : தினகரன்

பேராவூரணி அடுத்த உடையநாடு நாளை சுழற்கோப்பைகான கைப்பந்து போட்டி.

No comments

Peravurani Town :

உடையநாடு ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் சுழற்கோப்பைகான கைப்பந்து போட்டி நாளை 25.26-05-2017 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த போட்டி இரவு07 மணியளவில் தொடங்கி நடைபெறவுள்ள கைப்பந்து போட்டி
முதலிடம்பிடிக்கும் அணிக்கு ₹20,000 பரிசும்,
இரண்டாம்இடம் பிடிக்கும் அணிக்கு ₹15,000 பரிசும்,
மூன்றாம்இடம் பிடிக்கும் அணிக்கு ₹10,000 பரிசும்,
நான்காம்இடம் பிடிக்கும் அணிக்கு ₹5,000 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹800 நுழைவுகட்டணமா வசூலிக்கப்படும்.

மேலும்தொடர்புக்கு :

+91 8012999489,+91 7397196649,+91 9003707190

வரலாற்றில் இன்று மே 24.

No comments

மே 24 கிரிகோரியன் ஆண்டின் 144 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 145 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 221 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1738 – மெதடிஸ்த இயக்கம் ஜோன் உவெஸ்லியால் ஆரம்பிக்கப்பட்டது.
1798 – அயர்லாந்தில் பிரித்தானிய ஆக்கிரமிப்புக்கெதிராக ஐரியர்களின் எழுச்சி ஆரம்பமாயிற்று.
1844 – முதலாவது மின்னியல் தந்திச் செய்தி சாமுவேல் மோர்ஸ் என்பவரால் வாஷிங்டன் டிசியில் இருந்து மேரிலாந்துக்கு அனுப்பப்பட்டது. அனுப்பப்பட்ட செய்தி: What hath God wrought.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் வேர்ஜீனியாவின் அலெக்சாண்டிரியா நகரைக் கைப்பற்றினர்.
1883 – நியூ யோர்க்கில் புரூக்ளின் பாலம் திறந்து விடப்பட்டது.
1901 – தெற்கு வேல்சில் இடம்பெற்ற விபத்தில் 78 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் “பிஸ்மார்க்” என்ற ஜெர்மன் போர்க்கப்பல் “ஹூட்” என்ற பிரித்தானியக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
1956 – சுவிட்ஸர்லாந்தில் முதலாவது யூரோவிஷன் பாடல் போட்டி இடம்பெற்றது.
1962 – அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்கொட் கார்ப்பென்டர் அவ்ரோரா 7 விண்ணூர்தியில் மூன்று முறை பூமியைச் சுற்றி வந்தார்.
1991 – எத்தியோப்பியாவில் இருந்து யூதர்களை இஸ்ரவேலுக்குக் கொண்டு வரும் சொலமன் நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்தது.
1993 – எதியோப்பியாவிடம் இருந்து எரித்திரியா விடுதலை அடைந்தது.
2000 – 22 வருட முற்றுகைக்குப் பின்னர் இஸ்ரேலியப் படையினர் லெபனான்னில் இருந்து வெளியேறினர்.
2000 – இலங்கையில் நோர்வேத் தூதரகம் மீது குண்டு வீசப்பட்டது.
2001 – எவரெஸ்ட் சிகரத்தை 15 வயது ஷெர்ப்பா டெம்பா ஷேரி எட்டினார். அச்சிகரத்தின் உச்சியை எட்டிய வயதில் குறைந்தவர் இவாரே.
2002 – ரஷ்யாவும் ஐக்கிய அமெரிக்காவும் மொஸ்கோ உடன்பாட்டை எட்டின.
2006 – விக்கிமேப்பியா ஆரம்பிக்கப்பட்டது.
2007 – ஈழப்போர்: யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவில் இலங்கைக் கடற்படைத்தளத்தைக் கடற்புலிகள் தாக்கியளித்தனர்.
2007 – ஈழப்போர்: கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்து நால்வர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

1686 – கப்ரியேல் பரன்ஹைட், ஜெர்மனிய இயற்பியலாளர் (இ. 1736)
1819 – விக்டோரியா மகாராணி, ஐக்கிய அமெரிக்காவின் அரசி (இ. 1901)
1905 – மிகயில் ஷோலகவ், நோபல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர் (இ. 1984)
1921 – சு. வேலுப்பிள்ளை, ஈழத்து நாடகாசிரியர், எழுத்தாளர்
1979 – ட்ரேசி மெக்ரேடி, அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1543 – நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், வானியலாளர் (பி. 1473)
1981 – சி. பா. ஆதித்தனார் தினத்தந்தி நாளிதழ் நிறுவனர் (பி. 1905)

சிறப்பு நாள்

எரித்திரியா: விடுதலை நாள் (1993)

இன்று 24.05.2017 பேராவூரணி மின் தடை.

No comments

பேராவூரணி மற்றும் சேதுபவசத்திரம், பெருமகளூர், திருச்சிற்றம்பலம், ஒட்டங்காடு அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் மின்வாரியம் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், புதன் கிழமை( 24.05.2017) மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 பாட திட்டத்தில் மாற்றம்.

No comments

பாடங்களுக்கான மதிப்பெண் 200-ல் இருந்து 100 ஆக குறைகிறது: பிளஸ்-2 பொதுத் தேர்வு முறையில் மாற்றம் - தேர்வு நேரத்தை குறைக்கவும் பள்ளிக்கல்வித் துறை திட்டம்

பிளஸ் 2 தேர்வு முறையில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவர பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. சிபிஎஸ்இ போல பிளஸ் 2 பொதுத்தேர்வில் பாடங்க ளுக்கான மதிப்பெண்ணை 200-ல் இருந்து 100 ஆக குறைக்கவும், தேர்வு நேரத்தை 3 மணியில் இருந்து இரண்டரை மணி நேரமாக குறைக்கவும் திட்டமிட்டு வருகிறது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பள்ளிக் கல்வித் துறையில் பெரிய அளவி லான மாற்றங்கள் நிகழ்ந்து வரு கின்றன. கல்வித் துறையை சீரமைப்பது தொடர்பாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் த.உதயச் சந்திரன் ஆகியோர் ஆசிரியர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி அவர் களின் கருத்துகளையும் யோசனை களையும் கேட்டு வருகின்றனர்.

மாணவர்கள், பள்ளிகள் இடையே ஆரோக்கியமற்ற போட்டிச்சூழலை உருவாக்கும் ரேங்க் பட்டியல் முறை இந்த ஆண்டில் இருந்து கைவிடப் பட்டுள்ளது. அண்மையில் வெளி யிடப்பட்ட பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுகளில் மாநில, மாவட்ட வாரியான ரேங்க் பட்டியல் வெளியிடப்படவில்லை. இந்த முடிவை பெற்றோர்களும் மாணவர்களும் வரவேற்றுள்ளனர்.

பிளஸ் 1-க்கு பொதுத் தேர்வு

அடுத்த கட்டமாக, பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுத் தேர்வாக இல்லாததால் மாணவர்களும், ஆசிரியர்களும் பிளஸ் 1 வகுப்பை கண்டுகொள்வ தில்லை. பெரும்பாலான பள்ளி களில் பிளஸ் 1 வகுப்பில் பிளஸ் 2 பாடங்களே நடத்தப்படுகின்றன.

பிளஸ் 1 பாடங்களை படிக்காமல் நேரடியாக பிளஸ் 2 பாடங்களை படிப்பதால் போதிய அடிப்படை பாட அறிவை மாணவர்கள் பெற முடியாமல் போகிறது. இதன் காரணமாக, மிகச் சிறந்த தொழிற்கல்வி கல்லூரி களில் சேர்ந்தாலும்கூட அங்கு பாடங் களை படிக்க மிகவும் சிரமப்படு கின்றனர். பலர் செமஸ்டர் தேர்வு களில் தோல்வி அடைகின்றனர்.

மேல்நிலைக் கல்வியில் அடிப் படை பாட அறிவு இல்லாததால் ஐஐடி, ‘நீட்’ போன்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. சமீபத்தில் நடந்த ‘நீட்’ தேர்வில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக பிளஸ் 1 பாடங்களில் இருந்தே கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதையெல்லாம் கருத்தில்கொண்டு கல்வித் தரத்தை மேம்படுத்தவும், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு களுக்கு மாணவர்களை தயார் படுத்தவும் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

3 வண்ண சீருடைகள்

தமிழகத்தில் 10 ஆண்டுக ளுக்கு மேலாக பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. எனவே, தற்போதைய கல்விச்சூழ லுக்கு ஏற்ப மேல்நிலைக் கல்வி பாடத்திட்டத்தை தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு, மேல்நிலைக் கல்வி பாடத்திட்ட மாற்றம் தொடர்பாக வெகுவிரைவில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, வரும் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் சீருடையும் மாற்றப்பட உள்ளது. ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை, 6 முதல் 10-ம் வகுப்பு வரை, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என 3 விதமான வண்ணங் களில் மாணவ, மாணவிகளின் சீருடைகள் அமைந்திருக்கும். மேலும், வரும் ஆண்டில் இருந்து பள்ளிகளில் யோகா வகுப்பும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வல்லுநர் குழு பரிந்துரை

இந்நிலையில், மூத்த ஆசிரி யர்கள், கல்வியாளர்கள், முன்னாள் துணைவேந்தர்கள், கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட வல்லுநர் குழு, பள்ளிக் கல்வித் துறையை சீரமைப்பது தொடர்பாக பல்வேறு பரிந்துரை களை வழங்கியுள்ளது. அந்த பரிந் துரையின் அடிப்படையில், பிளஸ் 2 தேர்வில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது பிளஸ் 2 தேர்வில் ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 200 மதிப்பெண் வீதம் 6 பாடங் களுக்கு மொத்தம் 1,200 மதிப்பெண் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பாடத்துக்கான மதிப் பெண்ணை 200-லிருந்து 100 ஆக குறைக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. (தற்போது சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண்களே வழங்கப்படுகிறது). எனவே, பிளஸ் 2 தேர்வில் மொத்த மதிப்பெண் 1,200-லிருந்து 600 ஆக குறையும்.

கேள்வி முறையில் மாற்றம்

மேலும், மாணவர்களை அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வண்ணம் பிளஸ் 2 தேர்வில் கேள்வி முறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி, மொத்தமுள்ள 100 மதிப்பெண்ணில் 90 மதிப்பெண்தான் பாடப்புத்தகங் களில் இருந்து கேட்கப்படும். மீதமுள்ள 10 மதிப்பெண்களுக்கு குறிப்பிட்ட பாடம் தொடர்பான பொது அறிவுக் கேள்விகளாக, புரிந்துகொள்ளும் திறனை ஆய்வு செய்யும் கேள்விகளாக இருக்கும்.

பாடத்துக்கான மதிப்பெண் குறைக்கப்பட்டதைப் போன்று தேர்வு நேரத்தையும் 3 மணியில் இருந்து இரண்டரை மணி நேரமாக குறைக்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டு இறுதியாக 6 செமஸ்டர் தேர்வுகளின் மதிப் பெண்களையும் சேர்த்து ஒருங் கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்குவார்கள். அதேபோன்று பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளுக்கும் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான் றிதழ் வழங்கலாமா என்பது குறித்தும் பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

வல்லுநர் குழு அளித்துள்ள பரிந்துரைகளில் அரசு ஏற்றுக் கொண்ட பரிந்துரைகளை நிறை வேற்றும் வகையில் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டு ஓரிரு நாளில் உரிய அரசாணைகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேராவூரணி மின்சார வாரியம் அறிவிப்பு நாளை 24.05.2017 மின் தடை.

No comments

பேராவூரணி மற்றும் சேதுபவசத்திரம், பெருமகளூர், திருச்சிற்றம்பலம், ஒட்டங்காடு அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் மின்வாரியம் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், புதன் கிழமை( 24.05.2017) மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக 41-ஆவது நாள் போராட்டம்.

No comments

Peravurani Town :

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக 41-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.

வரலாற்றில் இன்று மே 23.

No comments

மே 23  கிரிகோரியன் ஆண்டின் 143 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 144 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 222 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1430 – ஜோன் ஒஃப் ஆர்க் பிரான்சில் பேர்கண்டியரினால் கைது செய்யப்பட்டாள்.
1568 – நெதர்லாந்து ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1805 – நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியின் மன்னனாக முடி சூடினான்.
1813 – தென்னமெரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் சிமோன் பொலிவார் வெனிசுவேலாவின் முற்றுகைக்குத் தலைமை வகித்துச் சென்று “விடுவிப்பாளர்” எனத தன்னை அறிவித்தார்.
1846 – மெக்சிக்கோ ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தது.
1865 – வாஷிங்டன், டிசியில் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுற்றமை கொண்டாடப்பட்டது.
1915 – முதலாம் உலகப் போர்: இத்தாலி ஆஸ்திரியா-ஹங்கேரி மீது போரை அறிவித்தது.
1929 – மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூன் “கார்னிவல் கிட்” வெளி வந்தது.
1949 – ஜெர்மன் கூட்டாட்சி குடியரசு அமைக்கப்பட்டது.
1951 – திபெத்தின் விடுதலைக்கான 17 அம்ச உடன்பாட்டில் திபெத்தியர்கள் கட்டாயமாகக் கைச்சாத்திட வைக்கப்பட்டார்கள்.
1958 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்மதி எக்ஸ்புளோரர் 1 தனது பூமியுடனான தொடர்பை இழந்தது.
1998 – புனித வெள்ளி உடன்பாட்டிற்கு ஆதரவாக வட அயர்லாந்து மக்களின் 71 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.

பிறப்புகள்

1707 – கரோலஸ் லின்னேயஸ், தற்கால வாழ்சூழலியலின் முன்னோடி (இ. 1778)
1920 – காயத்திரி தேவி, ஜெய்ப்பூர் மகாராணி (இ. 2009)
1922 – பாலா தம்பு, இலங்கை இடதுசாரித் தொழிற்சங்கவாதி (இ. 2014)
1951 – அனத்தோலி கார்ப்பொவ், ரஷ்ய சதுரங்க வீரர்.

இறப்புகள்

1906 – ஹென்ரிக் இப்சன், நவீன நாடக இலக்கியத்தின் தந்தை (பி. 1828)
1997 – அல்பிரட் ஹேர்ஷ்லி, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1908)
1981 – உடுமலை நாராயணகவி தமிழ்த்திரைப்பட பாடலாசிரியர் (பி. 1899)

அணவயல் தாணான்டியம்மன் கோயிலில் தேர் திருவிழா.

No comments

அணவயல் தாணான்டியம்மன் கோயிலில் தேர் திருவிழா.

தஞ்சைக்கு ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயிலில் 3,600 டன் புழுங்கல் அரிசி வந்தது

No comments

மத்திய தொகுப்பில் இருந்து பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. இவைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

இதைப்போல தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களுக்கு வழங்குவதற்காக மத்திய தொகுப்பில் இருந்து வரும் அரிசி, கோதுமை மூட்டைகள் தஞ்சையில் உள்ள மத்திய சேமிப்புக்கிடங்கிலும், தமிழக அரசுக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கிலும் இருப்பு வைக்கப்பட்டு பின்னர் லாரிகள் மூலம் எடுத்துச்செல்லப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.

3,600 டன் புழுங்கல் அரிசி

இந்த நிலையில் நேற்று ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயிலில் 58 வேகன்களில் 3,600 டன் புழுங்கல் அரிசி தஞ்சை வந்தது. இந்த அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சையில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டன. பின்னர் அங்கிருந்து லாரிகளில் எடுத்துச்செல்லப்பட்டு பொது வினியோகத்திட்டத்தின் மூலம் வினியோகிக்கப்பட உள்ளன.
நன்றி : தினத்தந்தி

பேராவூரணியில் மே 26-இல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்.

No comments

Peravurani Town :

பேராவூரணி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் எரிவாயு இணைப்பு நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மே 26-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை மேலும் தெரிவித்திருப்பது:
பேராவூரணி வட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகிக்கிறார்.
பேராவூரணி வட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை நிரப்பப் பதிவு செய்வதில் சிரமங்கள், எரிவாயு உருளை வழங்குவதில் கால தாமதம், அரசு மானியம் வங்கிக் கணக்கில் வரவு வைத்தல் போன்ற குறைபாடுகள் குறித்து வரப்பெறும் புகார்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுத்து, எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உள்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தைச் சீர்படுத்த இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
எனவே, எரிவாயு இணைப்பு குறித்த தங்களது குறைகளைத் தெரிவிக்க விரும்பும் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் இக்கூட்டத்தில் மனுக்கள் மூலமும், நேரிலும் தெரிவிக்கலாம்.
நன்றி: தினமணி

பேராவூரணியில் மே 26 மாபெரும் ஆர்ப்பாட்டம்.

No comments

பேராவூரணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்.

உடையநாடு ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் சுழற்கோப்பைகான கைப்பந்து போட்டி.

No comments

உடையநாடு ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் சுழற்கோப்பைகான கைப்பந்து போட்டி வருகின்ற 25,26/05/2017 (வியாழன், வெள்ளி) ஆகிய இரு தினங்களில் நடைபெறும்.

வரலாற்றில் இன்று மே 22.

No comments

மே 22 கிரிகோரியன் ஆண்டின் 142 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 143 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 223 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

கிமு 334 – மகா அலெக்சாண்டர் தலைமையில் கிரேக்க இராணுவம் பேர்சியாவின் மூன்றாம் டாரியஸ் மன்னனைத் தோற்கடித்தனர்.
1809 – வியென்னாவுக்கு அருகில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் முதற்தடவையாக தோற்கடிக்கப்பட்டன.
1834 – இலங்கையில் சட்டசபையின் முதலாவது கூட்டம் கொழும்பில் இடம்பெற்றது.
1840 – நியூ சவுத் வேல்சுக்கு பிரித்தானியக் குற்றவாளிகளை நாடுகடத்துதல் நிறுத்தப்பட்டது.
1844 – பாரசீக மதகுரு பாப் தனது பாபிசம் என்ற தனது மதக்கொள்கையை வெளியிட்டார். இவரே பஹாய் சமயத்த்தைத் தோற்றுவித்த பகாவுல்லாவின் முன்னோடி எனக் கருதப்படுகிறது.
1906 – ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்.
1915 – ஐக்கிய அமெரிக்காவில் லாசன் முனை வெடித்தது.
1915 – ஸ்கொட்லாந்தில் ஐந்து தொடருந்துகள் ஒன்றோடொன்று மோதியதில் 227 பேர் கொல்லப்பட்டனர். 246 பேர் காயமடைந்தனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: மெக்சிக்கோ நேச நாடுகள் தரப்பில் போரில் குதித்தது.
1958- இலங்கை இனக்கலவரம் – இலங்கையில் ஏற்பட்ட கலவரங்களில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
1960 – தெற்கு சிலியில் நிகழ்ந்த 9.5 அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையினால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதுவே இதுவரையில் பதியப்பட்ட அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஆகும்.
1967 – பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் கடைத் தொகுதி ஒன்று தீப்பிடித்ததில் 323 பேர் கொல்லப்பட்டு 150 பேர் காயமடைந்தனர்.
1968 – அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஸ்கோர்ப்பியன் மூழ்கியதில் 99 பேர் கொல்லப்பட்டனர்.
1972 – இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்து குடியரசு ஆகியது. . சிலோன், ஸ்ரீலங்கா எனப் பெயர் மாற்றம் பெற்றது. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கத்துவம் பெற்றது.
1990 – வடக்கு யேமன் மற்றும் தெற்கு யேமன் ஆகியன இணைந்து யேமன் குடியரசு ஆகியது.
1990 – விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது.
2004 – நெப்ராஸ்காவில் இடம்பெற்ற சூறாவளியினால் ஹலாம் நகரம் முற்றிலும் அழிந்தது.

பிறப்புகள்

1859 – சேர் ஆர்தர் கொனன் டொயில், துப்பறியும் எழுத்தாளர் (இ. 1930)
1867 – உமையாள்புரம் சுவாமிநாத ஐயர், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1946)
1944 – வை.கோபாலசாமி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தலைவர்.
1926 – தமிழ்வாணன் தமிழக எழுத்தாளர், இதழாசிரியர் (இ.1977)

இறப்புகள்

1885 – விக்டர் ஹியூகோ, பிரெஞ்சு எழுத்தாளர் (பி. 1802)

சிறப்பு நாள்

சர்வதேச பல்லுயிர் பெருக்க தினம்
யேமன் – தேசிய நாள்
இலங்கை – தேசிய வீரர்கள் நாள், குடியரசு நாள் (1972)

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் புனே அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து மும்பை இந்தியன்ஸ் அணி 3-வது முறையாக மகுடம் சூடியது.

No comments

10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், நேற்றிரவு இறுதிப்போட்டி அரங்கேறியது. ஐதராபாத்தில் நடந்த மகுடத்துக்கான இந்த ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சும், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணியும் மோதின. இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
‘டாஸ்’ ஜெயித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். நடப்பு தொடரில் இங்கு முதலில் பேட் செய்த அணிகளே அதிகமான வெற்றி பெற்றிருப்பதால் இந்த முடிவுக்கு அவர் வந்தார்.

பந்து வீச்சில் மிரட்டல்

இதன்படி விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேலும், லென்டில் சிமோன்சும் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். இறுதிப்போட்டிக்கே உரிய பதற்றம் அவர்கள் ஆடிய விதத்தில் காணமுடிந்தது. அதை சாதகமாக பயன்படுத்தி புனே பவுலர்கள் கடுமையான நெருக்கடி கொடுத்தனர். வேகப்பந்து வீச்சாளர் உனட்கட் வீசிய ஆட்டத்தின் 3-வது ஓவரில் பார்த்தீவ் பட்டேல் (4 ரன்) கேட்ச் ஆனார். அதே ஓவரில் சிமோன்சும் (3) வீழ்ந்தார். சிமோன்ஸ் கொடுத்த கேட்ச் வாய்ப்பை பந்து வீசிய உனட்கட் ஒற்றைக்கையால் சூப்பராக பிடித்து மெய்சிலிர்க்க வைத்தார்.

அடுத்து கேப்டன் ரோகித் சர்மாவும், அம்பத்தி ராயுடுவும் ஜோடி சேர்ந்தனர். வேகம் குறைந்த இந்த ஆடுகளத்தில் பந்து பெரிய அளவில் எழும்பவில்லை. முதல் 5 ஓவர்களில் மும்பை அணி 2 விக்கெட்டுக்கு 16 ரன்களுடன் பரிதவித்தது. 6-வது ஓவர் தான் அந்த அணிக்கு ஆறுதலாக அமைந்தது. லோக்கி பெர்குசன் வீசிய அந்த ஓவரில் மும்பை கேப்டன் ரோகித் சர்மா 4 பவுண்டரி விரட்டினார். இருப்பினும் அந்த மகிழ்ச்சியும் நெடு நேரம் நிலைக்கவில்லை. ராயுடு 12 ரன்னில், ஸ்டீவன் சுமித்தால் ரன்-அவுட் செய்யப்பட்டார்.

இதன் பின்னர் ரோகித் சர்மா (24 ரன், 22 பந்து, 4 பவுண்டரி), அடுத்து வந்த கீரன் பொல்லார்ட் (7 ரன்) இருவரின் விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா கபளகரம் செய்ய மும்பை அணி நிலைகுலைந்து போனது.

மும்பை 129 ரன்

பந்து வீச்சு மட்டுமின்றி பீல்டிங்கிலும் புனே அணியினர் ஆக்ரோஷமாக செயல்பட்டனர். இதனால் மும்பை பேட்ஸ்மேன்களால் எளிதில் ரன் எடுக்க இயலவில்லை. ஹர்திக் பாண்ட்யா (10 ரன்), கரண் ஷர்மாவும் (1 ரன்) சொற்ப ரன்னில் நடையை கட்டினர்.

79 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை (14.1 ஓவர்) தாரைவார்த்து விழிபிதுங்கிய மும்பை அணிக்கு குணால் பாண்ட்யாவும், மிட்செல் ஜான்சனும் உயிர் கொடுத்தனர். இவர்கள் தாக்குப்பிடித்து ஆடியதுடன், கடைசி கட்டத்தில் கொஞ்சம் அதிரடி காட்டியதால் ஸ்கோர் கவுரவமான நிலைக்கு உயர்ந்தது. இரண்டு சிக்சர்களை பறக்க விட்ட குணால் பாண்ட்யா (47 ரன், 38 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. ஜான்சன் 13 ரன்களுடன் களத்தில் இருந்தார். கடைசி 3 ஓவர்களில் மட்டும் அந்த அணி 37 ரன்கள் சேகரித்தது. புனே தரப்பில் உனட்கட், ஆடம் ஜம்பா, டேனியல் கிறிஸ்டியன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

டோனி ஏமாற்றம்

அடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி புனே அணி ஆடியது. இலக்கு குறைவு என்பதால் புனே வீரர்கள் நிதானமாக ஆடினர். அதுவே ஒருகட்டத்தில் நெருக்கடியாக மாறியது. ராகுல் திரிபாதி 3 ரன்னிலும், ரஹானே 44 ரன்னிலும் (38 பந்து, 5 பவுண்டரி), டோனி 10 ரன்னிலும் (13 பந்து, ஒரு பவுண்டரி) வெளியேறினர். மிடில் ஓவர்களில் மும்பை பந்து வீச்சாளர்கள் பிடியை இறுக்கியதால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஒரு முனையில் கேப்டன் ஸ்டீவன் சுமித் மட்டும் மனம் தளராமல் போராடினார்.

கடைசி 2 ஓவர்களில் புனேயின் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்டன. 19-வது ஓவரை வீசிய பும்ராவின் பந்து வீச்சில் சுமித் ஒரு சிக்சர் அடிக்க அந்த ஓவரில் 12 ரன்கள் வந்தது.

ஒரு ரன்னில் முடிவு

இதையடுத்து கடைசி ஓவரில் புனேக்கு 11 ரன்கள் தேவையாக இருந்தது. களத்தில் உச்சக்கட்ட டென்ஷன் நிலவியது. ஸ்டீவன் சுமித்தும், மனோஜ் திவாரியும் களத்தில் நின்றனர். 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட திவாரி பந்தை பவுண்டரிக்கு ஓட விட்டார். 2-வது பந்தில் திவாரி (7 ரன்) பொல்லார்ட்டிடம் கேட்ச் ஆனார். 

3-வது பந்தை சந்தித்த கேப்டன் ஸ்டீவன் சுமித் (51 ரன், 50 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) தூக்கியடித்த போது அவரும் கேட்ச் ஆகிப்போனார். 4-வது பந்தில் ஒரு ரன் வந்தது. 5-வது பந்தை எதிர்கொண்ட டேனியல் கிறிஸ்டியன் 2 ரன் எடுத்தார். கடைசி பந்தில் புனேயின் வெற்றிக்கு 4 ரன் தேவைப்பட்டன. திக்...திக்... நிறைந்த இறுதி பந்தில் டேனியல் கிறிஸ்டியன் 2 ரன் எடுத்து விட்டு 3-வது ரன்னுக்காக ஓடிய போது ரன்-அவுட் செய்யப்பட்டார்.

புனே அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 128 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை ருசித்தது. இவ்வளவு குறைந்த ஸ்கோருடன் ஒரு அணி கோப்பையை வெல்வது இதுவே முதல் முறையாகும். மும்பை அணி ஏற்கனவே 2013, 2015-ம் ஆண்டுகளிலும் பட்டம் வென்று இருந்தது. இதன் மூலம் மூன்று முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற முதல் அணி என்ற மகத்தான சாதனையை அந்த அணி நிகழ்த்தியது.

ஸ்கோர் போர்டு

மும்பை இந்தியன்ஸ்
சிமோன்ஸ் (சி) அண்ட்
(பி) உனட்கட் 3
பார்த்தீவ் பட்டேல் (சி)
தாகுர் (பி) உனட்கட் 4
அம்பத்தி ராயுடு(ரன்-அவுட்) 12
ரோகித் சர்மா (சி) தாகுர்
(பி) ஜம்பா 24
குணால் பாண்ட்யா (சி)
ரஹானே (பி) கிறிஸ்டியன் 47
பொல்லார்ட் (சி) திவாரி
(பி) ஜம்பா 7
ஹர்திக் பாண்ட்யா எல்.பி.டபிள்யூ
(பி) கிறிஸ்டியன் 10
கரண் ஷர்மா (ரன்-அவுட்) 1
மிட்செல் ஜான்சன்(நாட்-அவுட்) 13
எக்ஸ்டிரா 8

மொத்தம் (20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு) 129
விக்கெட் வீழ்ச்சி: 1-7, 2-8, 3-41, 4-56, 5-65, 6-78, 7-79, 8-129

பந்து வீச்சு விவரம்

உனட்கட் 4-0-19-2
வாஷிங்டன் சுந்தர் 4-0-13-0
ஷர்துல் தாகுர் 2-0-7-0
லோக்கி பெர்குசன் 2-0-21-0
ஆடம் ஜாம்பா 4-0-32-2
டேனியல் கிறிஸ்டியன் 4-0-34-2
புனே சூப்பர் ஜெயன்ட்
ரஹானே (சி) பொல்லார்ட்
(பி) ஜான்சன் 44
திரிபாதி எல்.பி.டபிள்யூ
(பி) பும்ரா 3
ஸ்டீவன் சுமித் (சி) ராயுடு
(பி) ஜான்சன் 51
டோனி (சி)பட்டேல்(பி)பும்ரா 10
மனோஜ் திவாரி (சி)
பொல்லார்ட் (பி) ஜான்சன் 7
டேனியல் கிறிஸ்டியன்
(ரன்-அவுட்) 4
வாஷிங்டன் சுந்தர்
(நாட்-அவுட்) 0
எக்ஸ்டிரா 9

மொத்தம் (20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு) 128
விக்கெட் வீழ்ச்சி: 1-17, 2-71, 3-98, 4-123, 5-123, 6-128

பந்து வீச்சு விவரம்
குணால் பாண்ட்யா 4-0-31-0
ஜான்சன் 4-0-23-3
பும்ரா 4-0-26-2
மலிங்கா 4-0-21-0
கரண் ஷர்மா 4-0-18-0

இறுதிப்போட்டியில் குறைந்த ஸ்கோர்

* மும்பை எடுத்த 129 ரன்களே, ஐ.பி.எல். வரலாற்றில் இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த ஒரு அணியின் குறைந்த ஸ்கோராகும். இதற்கு முன்பு 2009-ம்ஆண்டு இறுதி ஆட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 143 ரன்கள் எடுத்ததே இந்த வகையில் குறைந்த பட்சமாகும்.

* ஐ.பி.எல். இறுதி ஆட்டத்தில் பங்கேற்ற இளம் வீரர் என்ற பெருமைக்குரிய 17 வயதான புனே சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சிக்கனத்தை காட்டினார். இவர் சென்னையைச் சேர்ந்தவர்.

* இந்த ஆட்டத்தில் மும்பை வீரர் பொல்லார்ட் ஒரு சிக்சர் அடித்தார். அது இந்த சீசனின் 700-வது சிக்சராக அமைந்தது.

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar