Latest

latest

கத்திரி வெயில் இன்று தொடக்கம் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்.

Peravurani Town :

/ by IT TEAM

கத்திரி வெயில் வியாழனன்று (மே 3) தொடங்கி 25நாட்கள் நீடிக்கும். இதனால், வெயில் கடுமையாகஅதிகரிக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்தாண்டு கோடை காலத்தில் வழக்கமான வெப்ப நிலையைவிட 5 டிகிரி செல்சியஸ் அளவில் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.தமிழகத்தில் இந்தாண்டு பிப்ரவரி மாதத் தொடக் கத்தில் இருந்தே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. அனல் காற்றும் வீசி வருகிறது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது: தற்போது தமிழகத்தின் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் தெற்கு மற்றும் தென் கிழக்கு திசையில் இருந்து காற்று வீசுகிறது. உள் மாவட்டங்களில் இருந்து மேற்கு நோக்கி வீசும் காற்று குறைந்துள் ளது. இதன் காரணமாக கடற்கரை பகுதிகளில் இயல்பை விட சற்று வெப்பம் குறையும். உள் மாவட்டங்களில் 1 முதல் 2 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும். 3 நாட்களுக்கு இந்த நிலை தொடரும்.தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக பேச்சிப்பாறை, செங்கோட்டையில் தலா 6 செ.மீ. மழை பெய்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் செவ் வாய்க்கிழமை அதிகபட்சமாக 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது. மதுரையில் 40, வேலூர், திருப்பத்தூரில் 38 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னையில் 36 டிகிரி வெப்பம் பதிவானது. சென்னையைப் பொறுத்த வரை வறண்ட வானிலையே நிலவும். மழைக் கான வாய்ப்பு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar