Latest

latest

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு நெடுவாசலில் மாட்டுவண்டிகளுடன் மக்கள் போராட்டம்.

Peravurani Town :

/ by IT TEAM

பேராவூரணி அருகே நெடுவாசலில் ஹைட்ரோகார் பன் திட்டத்திற்கு எதிராக அப்பகுதி பொதுமக்கள் மாட்டு வண்டியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஹைட்ரோகார்பன் திட்டத்தை நெடுவாசலில் அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி இரண்டாம் கட்டமாக 26 ஆவது நாளாகஞாயிறன்றும் தொடரும் போராட்டத்தில் அப்பகுதிசிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் மாட்டுவண்டிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஞாயிறன்று நடந்த போராட்டத்தில் நெடுவாசல் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்து சிறுவர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும்பொதுமக்கள் மாட்டு வண்டியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அப் பகுதி சிறுவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மத்திய, மாநில அரசுகளை கண் டித்து கோஷங்களை எழுப் பினர்.ஆற்றுக்குள் இறங்கி போராட்டம்ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக் கோட்டை மாவட்டம் நெடுவாசலில் விவசாயிகள் ஆற்றுக்குள் இறங்கி சனிக்கிழமையன்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் உள்ளூர் விவசாயிகள் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் எனஏராளமானோர் பங்கேற்றனர். இவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் மோடி அரசைக் கண்டித்து முழக்கமிட்டபடி ஊர்வலமாகச் சென்றனர்.பின்னர் அருகில் உள்ள காவிரி பாயும் கல்லணைக் கால்வாயில் இறங்கி ஹைட்ரோகார்பன் திட்டத் திற்கு எதிர்ப்புத் தெரிவித்து முழக்கமிட்டனர். இந்தத்திட்டம் செயல்படுத்தப்பட் டால் காவிரி ஆறும் அதன்பாசனப் பகுதிகளும் பாழடைந்து பாலைவனமாகிவிடும் என்பதை உணர்த் தவே இந்தப் போராட்டம் எனவும் மத்திய அரசு உடனடியாக திட்டத்தைக் கைவிடுவதாக அறிவிக்காவிட்டால் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த இருப்பதாகவும் போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தப்போராட்டம் அப்பகுதியினரின் கவனத்தை ஈர்த்தது.ஆலங்குடி அருகே நெடுவாசலில் ஹைட்ரோகார் பன் திட்டத்திற்கு எதிராக அப்பகுதி பொதுமக்கள் மாட்டு வண்டியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஹைட்ரோகார்பன் திட்டத்தை நெடுவாசலில் அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி இரண்டாம் கட்டமாக 26 ஆவது நாளாகஞாயிறன்றும் தொடரும் போராட்டத்தில் அப்பகுதிசிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் மாட்டுவண்டிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஞாயிறன்று நடந்த போராட்டத்தில் நெடுவாசல் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்து சிறுவர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும்பொதுமக்கள் மாட்டு வண்டியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அப் பகுதி சிறுவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மத்திய, மாநில அரசுகளை கண் டித்து கோஷங்களை எழுப் பினர்.ஆற்றுக்குள் இறங்கி போராட்டம்ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக் கோட்டை மாவட்டம் நெடுவாசலில் விவசாயிகள் ஆற்றுக்குள் இறங்கி சனிக்கிழமையன்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் உள்ளூர் விவசாயிகள் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் எனஏராளமானோர் பங்கேற்றனர். இவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் மோடி அரசைக் கண்டித்து முழக்கமிட்டபடி ஊர்வலமாகச் சென்றனர்.பின்னர் அருகில் உள்ள காவிரி பாயும் கல்லணைக் கால்வாயில் இறங்கி ஹைட்ரோகார்பன் திட்டத் திற்கு எதிர்ப்புத் தெரிவித்து முழக்கமிட்டனர். இந்தத்திட்டம் செயல்படுத்தப்பட் டால் காவிரி ஆறும் அதன்பாசனப் பகுதிகளும் பாழடைந்து பாலைவனமாகிவிடும் என்பதை உணர்த் தவே இந்தப் போராட்டம் எனவும் மத்திய அரசு உடனடியாக திட்டத்தைக் கைவிடுவதாக அறிவிக்காவிட்டால் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த இருப்பதாகவும் போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தப்போராட்டம் அப்பகுதியினரின் கவனத்தை ஈர்த்தது.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar