பழைய பேராவூரணியில் மாபெரும் சுழற்கோப்பைக்கான கபாடி போட்டி.

No comments

Peravurani Town :




பழைய பேராவூரணி இளைஞர்கள் மற்றும் கிராமத்தார்கள் M.நீலகண்டன்(108) நினைவாக  நடத்தப்படும் மாபெரும் சுழற்கோப்பைக்கான கபாடி திருவிழாஎதிர்வரும் 21-01-2017 ஆம் தேதி நடைபெறுகிறது.

பேராவூரணி பழைய பேராவூரணியில்  21-01-2017 தேதியில் இரவு 10 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ள கபாடி போட்டியில்
முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹25,000 பரிசும், 
இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹20,000 பரிசும், 
மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹15,000 பரிசும், 
நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹10,000 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது. 

மேலும் இப்போட்டியில் பங்கேற்க 52+3 கிலோ எடைகொண்ட சிறுவர் அணிகளுக்கு மட்டுமே அனுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹500 நுழைவுகட்டணமா வசூலிக்கப்படும்.

மேலும் தொடர்புக்கு :
+91 8883774772,+91 9524840768,+91 97158800228,+91 9965361054,+91 9578331773

பேராவூரணி சாலை பாதுகாப்பு வார விழா.

No comments

பேராவூரணி காவல்துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு வார விழாவை யொட்டி விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேராவூரணி நீலகண்ட பிள்ளையார்கோவிலில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக பூக்கொல்லை வரை சென்று அண்ணாசிலை அருகே நிறைவடைந்தது. பேரணியில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசமும், நான்கு சக்கர வாகனத்தில் செல்வோர் இருக்கை பட்டையும் அணிய வேண்டும். சாலை விதிகளைப் பின்பற்ற வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பேரணியில் காவல் ஆய்வாளர் ஜனார்த்தனன், திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் சரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நன்றி : தினமணி 

உங்கள் இ-மெயில் அக்கவுண்ட் ஹேக் செய்யப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.

No comments

Peravurani Town :


மின்னஞ்சல் சேவைகள் இன்று எந்த அளவு பயன்படுகிறதோ அதே அளவு, அதன் மூலம் நமக்கு பாதிப்புகளும் ஏற்படுகின்றது. நாம் சேமித்து வைத்திருக்கும் பல்வேறு முக்கிய தகவல்களும் சில நொடிகளில் ஹேக் (திருடப்படுவது) செய்யப்பட்டு விடுகிறது. இவ்வாறு திருடப்படும் தகவல்கள் விற்பனை செய்வதோடு வைரஸ் அல்லது மால்வேர் மூலம் நம் கணினி அல்லது ஸ்மார்ட்போன் சாதனத்தையும் பாழாக்கி விடும்.   

எதுவும் நடந்த பின் மாற்ற முடியாது. அதே போல் தான் ஹேக் செய்யப்பட்ட பின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்து, ஹேக் செய்யப்படும் முன் உங்களது தகவல்களை பாதுகாத்து கொள்ளுங்கள். அவ்வாறு மின்னஞ்சல் முகவரியை  பாதுகாக்க சில வழிமுறைகளை பற்றி இங்கு பார்ப்போம்.. 

கடினமான கடவுச்சொல்:

உங்களது மின்னஞ்சல் முகவரியினை யாரும் ஹேக் செய்யாமல் இருக்க நீங்கள் மேற்கொள்ள வேண்டிய முதல் நடவடிக்கை இது தான். உங்களது மின்னஞ்சல் முகவரியின் கடவுச்சொல் (பாஸ்வேர்டு) மிகவும் கடினமானதாக தேர்வு செய்ய வேண்டும். 

குறிப்பாக நீங்கள் தேர்வு செய்யும் கடவுச்சொல் - எழுத்து, எண் மற்றும் சிறப்பு குறியீடு (word, nos, special characters) உள்ளிட்டவை இடம் பெற வேண்டும். இவ்வாறு இருக்கும் போது யாராலும் உங்களது மின்னஞ்சல் முகவரியை ஹேக் செய்ய முடியாது. 

அக்கவுண்ட் ரிக்கவரி ஆப்ஷன்:
 
மின்னஞ்சல் முகவரியின் கணக்கை மீட்க கோரும் கேள்வியை செட் செய்வது நல்லது. மேலும் இந்த கேள்விகளை அவ்வப்போது மாற்ற வேண்டும். பொதுவாக இந்த பகுதியில் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை சேர்ந்த கேள்விகள் கேட்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கணினியில் அதிக பாதுகாப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரியினை எந்த கணினியில் பயன்படுத்தினாலும், பயன்படுத்தி முடித்ததும் உங்களின் கணக்கை லாக் அவுட் செய்ய மறக்காதீர்கள். மற்றவர்களின் கணினியை பயன்படுத்தும் போது மின்னஞ்சல் முகவரியை லாக் அவுட் செய்வதன் மூலம் உங்களின் தரவுகளை மற்றவர்கள் பயன்படுத்துவதை தடுக்க முடியும். 

இரண்டடுக்கு சரிபார்ப்பு முறை: 

அனைத்து ஆன்லைன் அக்கவுண்ட்களிலும் கூடுதலாக டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் முறையை பயன்படுத்துவது நல்லது. இதனால் உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு கடவுச்சொல் மற்றும் கூடுதலாக அனுப்பப்படும் கோடினை பதிவு செய்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். இவ்வாறு செய்வதால் உங்களின் முகவரிக்கு இரண்டு அடுக்கு பாதுகாப்பு கிடைக்கும். 

அக்கவுண்ட் சைன் இன் நடவடிக்கை:

ஒவ்வொரு முறையும் உங்களின் மின்னஞ்சல் முகவரி லாக் இன் செய்யப்படும் நடவடிக்கையை கவனிக்க வேண்டும். லாக் இன் செய்யப்படும் நேரம், இடம் உள்ளிட்டவற்றை கவனிப்பதன் மூலம் மற்றவர்கள் உங்களின் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தினால் அப்பட்டமாக தெரிந்து விடும்.

பொங்கல் பரிசுப் பொருட்கள் சனிக்கிழமை முதல் கிடைக்கும்.

No comments

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை ஏழை-எளிய மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சார்பில் கடந்த சில வருடங்களாக பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இவற்றுடன் 2 அடி கரும்பு மற்றும் ரொக்கம் ரூ.100 ஆகியவை கடந்த ஆண்டு வழங்கப்பட்டன.

இந்த வருடம் பொங்கல் பரிசு அரசு சார்பில் வழங்கப்படுமா என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டு வந்த நிலையில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு கோடியே 80 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

பச்சரிசி, சர்க்கரை, 2 அடி கரும்பு துண்டு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

தற்போது ரூபாய் நோட்டு பிரச்சனை நீடித்து வருவதால் ரொக்கம் ரூ.100 தருவதற்கு பதிலாக பொங்கல் செய்வதற்கு வசதியாக முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றை வழங்குகிறார்கள்.

பொங்கல்பரிசு அனைத்து ரே‌ஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உணவு வழங்கல் துறையும், சிவில் சப்ளை துறையும் செய்து வருகின்றன.

பொங்கல் பரிசு கொடுப்பதில் இடம் பெற்றுள்ள பச்சரிசி, சர்க்கரை போதுமான அளவு தயாராக இருக்கின்றன. முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் கரும்பு ஆகியவை உடனடியாக கொள்முதல் செய்து வினியோகிக்க அதிகாரிகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ரே‌ஷன் கடை ஊழியர்களுக்கு முதல் மற்றும் 2-வது வெள்ளிக்கிழமை விடுமுறையாகும். இதனால் வரும் 6-ந்தேதி மற்றும் 13-ந்தேதி ரே‌ஷன் கடைகள் செயல்படாது. 2 நாட்களுக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டியுள்ளது.

அதனால் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு 7-ந்தேதி (சனிக்கிழமை) முதல் வழங்கப்பட உள்ளன. தொடர்ந்து 6 நாட்கள் வினியோகிக்கப்படும். அதாவது 12-ந்தேதி வரை ரே‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் பொங்கல் பரிசு அரிசி பெறக்கூடிய பச்சை நிற ரே‌ஷன் கார்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும். சர்க்கரை பெறக்கூடிய வெள்ளை நிற கார்டுகளுக்கு கிடையாது.

இதுகுறித்து சிவில் சப்ளை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதற்கான பச்சரிசி, சர்க்கரை தயாராக இருக்கின்றன. மற்ற பொருட்கள் உடனடியாக கொள்முதல் செய்து வழங்க அனைத்து பணிகளும் தொடங்கி விட்டன.

வருகிற 7-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை 6 நாட்கள் தொடர்ந்து பொங்கல் பரிசு ரே‌ஷன் கடைகளில் வழங்கப்படும். முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை சேர்த்து 50 கிராம் ஒரு பாக்கெட்டில் அடைத்து வினியோகிக்கப்படும்.

சர்க்கரை, பச்சரிசி வாங்குவதற்கு பொதுமக்கள் பை கொண்டு வர வேண்டும். ரே‌ஷன் கடைகளில் பை வழங்கப்படமாட்டாது.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினாலும் ரே‌ஷன் கார்டுகளில் உள்தாள் ஒட்டும் பணி தடைபடாது. அதுவும் நடைபெறும் பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் தங்களுக்கு வசதியான நேரத்தில் உள்தாள்களை இணைத்து கொள்ளலாம். உள்தாள் இணைப்பதற்கு காலக்கெடு எதுவும் கிடையாது.

வரலாற்றில் இன்று 02.01.2017

No comments

Peravurani Town :


இந்திய-அமெரிக்கக் கணிதவியலாளர் சாத்தமங்கலம் ரங்க ஐயங்கார் ஸ்ரீனிவாச வரதன் 1940ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் பிறந்தார்.

இவருடைய கணக்கு ஆசிரியர் கணிதத்தை விளையாட்டுபோல கற்றுத்தந்தார். அதன் மூலம் இவர் கணக்கைப் பார்த்து பயந்து ஓட அவசியம் இல்லை என்பதை உணர்ந்தார். 

கணித அடிப்படையிலான நிகழ்தகவு குறித்து ஆய்வு செய்துகொண்டிருந்த சில நண்பர்களை சந்தித்து, அவர்களுடன் இணைந்து ஆய்வுகளில் ஈடுபட்டார். கல்கத்தா இந்தியப் புள்ளியியல் கழகத்தில் சிறந்த புள்ளியியலாளரான சி.ஆர்.ராவ் தலைமையில் ஆய்வு செய்து, 1963-ல் முனைவர் பட்டம் பெற்றார்.
இவர் கணிதம், புள்ளியியலில் நிகழ்தகவு, பெரிய விளக்கங்கள் கோட்பாடுகளை (வுhநழசல ழக டுயசபந னுநஎயைவழைளெ) உருவாக்கினார். வகையீட்டு சமன்பாடுகள் (னுகைகநசநவெயைட நஙரயவழைளெ) குறித்த கோட்பாடுகளை கண்டறிந்தார். இவரது 'ஸ்டொகாஸ்டிக் பிராஸசஸ்" என்ற நு}ல் கணித உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

நிகழ்தகவு கோட்பாட்டில் அடிப்படை பங்களிப்புகளுக்காக 'ஏபெல்" பரிசு (2007), பத்மபு ஷண் விருது (2008), அமெரிக்காவின் தேசிய அறிவியல் பதக்கம், இன்ஃபோசிஸ் பரிசு உள்ளிட்ட பல பரிசுகள், பதக்கங்கள், கௌரவங்களைப் பெற்றுள்ளார்.

இவர் நண்பர்கள், சக பேராசிரியர்களால் எஸ்ஆர்எஸ் வரதன், ரகு என்று அன்போடு அழைக்கப்படுகிறார். மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் ஆசிரியர் என்று பாரட்டப்பட்ட இவர் தன்னுடைய 76வது வயதை இன்று நிறைவு செய்கிறார். 

அமெரிக்க அறிவியல் புனைக்கதை எழுத்தாளர்களின் முன்னோடியான ஐசக் அசிமோவ் 1920ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி ரஷ்யாவில் பிறந்தார்.
இவர் தன்னுடைய 11 வயதில் கதை எழுத தொடங்கினார். பின்பு 1948-ல் உயிர் வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்றார். 1950-ல் இவரது கதைத் தொகுப்பான ஐஇ சுழடிழவ வெளிவந்தது. அடுத்த ஆண்டே இவருடைய பவுண்டேஷன் நாவல் வெளிவந்தது. படைப்பாற்றல் மிக்க இவரது கதைகள் உலகம் முழுவதும் பிரபலமாயின.

இவர் வானவியல், உயிரியல், கணிதம், மதம், இலக்கியம் போன்ற துறைகளில், ஏறக்குறைய 500 புத்தகங்கள் படைத்துள்ளார். மேலும் 90 ஆயிரம் கடிதங்கள் எழுதியுள்ளார்.

அமெரிக்க மனிதநேய சங்கத்தின் கௌரவ முதல்வராகவும் பதவி வகித்தார். பல பட்டங்கள், விருதுகளைப் பெற்றுள்ளார். உலக அறிவியல் புனைக்கதை எழுத்தாளர்களில் முக்கியமானவராகக் கருதப்பட்ட இவர் 72-வது வயதில் (1992) மறைந்தார்.
    முக்கிய நிகழ்வுகள்
      1954ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி பத்மஸ்ரீ, பத்மபு ஷண், பத்மவிபு ஷன் விருதுகள் இந்திய அரசினால் ஏற்படுத்தப்பட்டது.
        959ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி முதலாவது செயற்கைச் செய்மதி, லு}னா 1, சோவியத் ஒன்றியத்தால் விண்ணுக்கு ஏவப்பட்டது.
          2004ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி ஸ்டார்டஸ்ட் விண்கலம் வைல்டு 2 என்ற வால்வெள்ளியை வெற்றிகரமாகத் தாண்டியது.
            1876ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி தமிழறிஞர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை காலமானார்.
              1960ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி தமிழக வரலாற்று அறிஞர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார் காலமானார்.

              பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு: நள்ளிரவு முதல் அமல்.

              No comments


              பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.29 ம், டீசல் விலை லிட்டருக்கு 97 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது, பெட்ரோல், டீசல் விலைகளை மாற்றம் செய்து அறிவிக்கின்றன.அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.29 ம், டீசல் விலை லிட்டருக்கு 97 காசுகளும் உயர்த்தி உள்ளன. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
              Don't Miss

              News Ticker

              © all rights reserved
              Developed by Arun Kumar