Latest

latest

தஞ்சை மாவட்டத்தில் 3 இடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நாளை தொடங்கப்பட உள்ளது என்று கலெக்டர் சுப்பையன் தெரிவித்தார்.

Peravurani Town :

/ by IT TEAM

தென்னை விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் கொப்பரை தேங்காய் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் மாவட்டங்களில் ஒன்றான தஞ்சை மாவட்டத்தில் கொப்பரை தேங்காயை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் தென்னை விவசாயிகளிடம் இருந்து கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வது குறித்து கலந்தாய்வு கூட்டம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பையன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பட்டுக்கோட்டை வெண்டாக்கோட்டை ரோடு வளவன்புரத்தில் உள்ள தென்னை வணிக வளாகத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் வாரத்தில் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய கிழமைகளில் செயல்படும். பேராவூரணி அருகே பள்ளத்தூரில் உள்ள வேளாண்மை வணிக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளிலும், ஒரத்தநாடு சி.எம்.எஸ். வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய கிழமைகளிலும் செயல்படும். கொள்முதல் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.
கொள்முதல் காலை 9 மணி முதல் மாலை 6 மணி முதல் நடைபெறும். எனவே வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை அலுவலர்களை தென்னை விவசாயிகள் அணுகி உரிய அடையாள அட்டை பெற்று தங்களிடம் உள்ள கொப்பரை தேங்காய்களை விற்பனை செய்து பயன் பெறலாம். மேலும் இது பற்றிய விவரங்களை ஒரத்தநாடு பகுதி விவசாயிகள் 04372-233231 என்ற எண்ணிலும், பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதி விவசாயிகள் 04373-235045 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar