காவிரி நீரும் கண்கவர் பெரிய கோவிலும்!

No comments

Peravurani Town :


 காவிரியில் ஓடி வரும் நீரும் இருபுறமும் மரங்களும் கண்களை கவரும் அழகின் பின்னணியில் கம்பீரமாக காட்சியளிக்கும் தஞ்சாவூர்.

பேராவூரணி ஆனந்தவள்ளி வாய்க்காலின் அவல நிலை!

No comments





மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டு இன்று தான் 30.09.2016 மதிய அளவில் குப்பைகள் நிறைந்த ஆனந்தவள்ளி வாய்க்காலில் நீர் தவழ்ந்து வந்தும் குப்பைகளை எதிர்த்து போட்டியிடுகிறது தன்னுடைய இலக்கை அடைவதற்கு.
நமது முன்னோர்கள் வழிபட்ட பஞ்ச பூதங்களில் ஒன்றான  நீருக்கு அதனுடைய இலக்கை சென்றடைய வழிவகை செய்யுமா? பேராவூரணி பேரூராட்சியும்,  பொதுபணித்துறையும்.


நீர் வருவதற்கு சற்று முன் எடுக்கப்பட்ட புகைப்படம்.


பெருமகளூர் பேரூராட்சி அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.

No comments


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-17,19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் பெருமகளூர் பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-19 அன்று நடைபெற உள்ளது.

அதிமுக சார்பில் போட்டியிடும் நகராட்சி, பேரூராட்சி வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டன. இதில் பெருமகளூர் பேரூராட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 12 வார்டுகளின் வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதன் விவரங்கள் பின்வருமாறு:


பேராவூரணி பேரூராட்சி அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.

No comments

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-17,19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் பேராவூரணி பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-19 அன்று நடைபெற உள்ளது.

அதிமுக சார்பில் போட்டியிடும் நகராட்சி, பேரூராட்சி வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டன. இதில் பேராவூரணி பேரூராட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 18 வார்டுகளின் வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதன் விவரங்கள் பின்வருமாறு:




பேராவூரணி டெங்கு விழிப்புணர்வு பேரணி.

No comments

Peravurani Town :




பேராவூரணியை அடுத்த குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் வீ.மனோகரன் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ். திட்ட தொடர்பு அலுவலர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் (பொ) பி.சேகர் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். மாணவ, மாணவிகள் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, முழக்கமிட்டவாறு பேரணியாக சென்றனர்.

பட்டுக்கோட்டை நகராட்சி அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.

No comments

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-17,19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் பட்டுக்கோட்டை நகராட்சி தேர்தல் வரும் அக்-19 அன்று நடைபெற உள்ளது.


அதிமுக சார்பில் போட்டியிடும் நகராட்சி, பேரூராட்சி வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டன. இதில் பட்டுக்கோட்டை நகராட்சி தேர்தலில் போட்டியிடும் 33 வார்டுகளின் வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

தஞ்சை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் ஆய்வு.

No comments


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் 2016, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ், அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, அவர்கள் (29.09.2016) இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தல் தொடர்பான பயிற்சி குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், தஞ்சாவூர் மாநகராட்சிக்கு  வாக்கு எண்ணிக்கை ராஜா சரபோஜி அரசினர் கலைகல்லூரியிலும், தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு ராஜாஸ் மேல் நிலைப்பள்ளியில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பயிற்சியும், தூய அந்தோணியார் மேல் நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் :
தஞ்சாவூர்  தூய அந்தோணியார் மேல் நிலைப்பள்ளியிலும், பூதலூர் ஸ்ரீசிவசாமி அய்யர் மேல் நிலைப்பள்ளியிலும், திருவையாறு சீனிவாசராவ் மேல் நிலைப் பள்ளியிலும், ஒரத்தநாடு  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவோணம் அரசினர் மேல் நிலைப்பள்ளியிலும், கும்பகோணம் அரசினர் பெண்கள் மகளிர் கல்லூரியிலும், திருவிடைமருதூர் டி.ஏ.மேல் நிலைப்பள்ளயிலும், திருப்பனந்தாள் குமரகுருபர மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியிலும், பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியிலும், அம்மாப்பேட்டை பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியிலும், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மதுக்கூர் வடக்கு அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியிலும்,  பேராவூரணி புனவாசல் தூய ஆரோக்கிய அன்னை மேல் நிலைப் பள்ளியிலும், சேதுபாவாசத்திரம் பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சி பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள்:
வல்லம், ஒரத்தநாடு, திருவையாறு, திருக்காட்;டுப்பள்ளி, மேலதிருப்பந்துருத்தி, மதுக்கூர், அய்யம்பேட்டை, மெலட்டூர், அம்மாப்பேட்டை,  ஆகிய 9 பேரூராட்சிகளுக்கு தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும்,

பேராவூரணி, பெருமகளுர், அதிராம்பட்டிணம், ஆகிய 3 பேரூராட்சிகளுக்கு பேராவூரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஆடுதுறை, திருபுவனம், திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், திருப்பனந்தாள், வேப்பத்தூர், சோழபுரம், சுவாமிமலை, தாராசுரம், பாபநாசம் ஆகிய 10 பேரூராட்சிகளுக்கும் கும்பகோணம் சிறுமலர் மேல் நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

தஞ்சாவூர் மாநகராட்சி ராஜா சரபோஜி கலைகல்லூரியிலும்,   பட்டுக்கோட்டை நகராட்சி பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியிலும், கும்பகோணம் நகராட்சி கும்பகோணம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பாதுகாப்பாக வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்படும் அறையில் போதிய இட வசதி உள்ளதா என்றும், மின் இணைப்பு, மின்விசிறி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் உள்ளதா என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, அவர்கள்  ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரி முதல்வர் திருமதி.ஜி.நிர்மலா, வட்டாட்சியர் குருமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

பேராவூரணி அருகே உள்ள பனஞ்சேரி கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்.

No comments



பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பாமெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் பேராவூரணி  அருகே  உள்ள  பனஞ்சேரி  கிராமத்தில்  நடைபெற்றது.

பேராவூரணி அரசுப் பள்ளியில் நாட்டு நலப் பணித்திட்ட விழா.

No comments

Peravurani Town :


பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட தொடக்க விழா நடைபெற்றது.

பேராவூரணி மாணவர்கள் கராத்தே போட்டியில் சாதனை .

No comments

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில், பேராவூரணி தாய் புடோகான் கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்கள் பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளனர்.கராத்தே பள்ளி மாணவர்கள் எஸ்.எம்.ஹரிஷ் இரண்டு தங்கப் பதக்கங்களையும், எஸ்.எம்.ஹரிஷா, ஸ்பர்சன் ராஜ், எஸ்.வி.சிவபாலன் ஆகியோர் தலா 1 வெள்ளிப் பதக்கங்களையும், என்.நவீன்குமார், பி.மணிமேகலை, கே. விக்னேஷ் ஆகியோர் தலா 1 வெண்கலப் பதக்கங்களையும் வென்று சாதனை படைத்தனர்.


தாய் புடோகான் கராத்தே பயிற்சி பள்ளி நிறுவனர் மாஸ்டர் கே.பாண்டியன் பஞ்சாபின் வீரக் கலையான ‘‘கட்கா” தற்காப்பு கலை 2 மாதகால சிறப்பு பயிற்சியினை முடித்து சான்றிதழ் பெற்றார்.திருச்சி ஓ.ஏ. எஃப்.டி மகாலில் தமிழக அளவில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 450 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களை கராத்தே தலைமை பயிற்சியாளர்கள் சென்சாய் சரவணன், ரென்சி குப்பன் ஆகியோர் பாராட்டி பதக்கங்களை அணிவித்தனர்.

பேராவூரணி பேரூராட்சியில் தீவிர காய்ச்சல் கண்டுபிடிப்பு பணி.

No comments



பேராவூரணி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளில் தீவிர காய்ச்சல் கண்டுபிடிப்பு பணி நேற்று நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தர்ராஜன் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் சிவகாமிநாதன் முன்னிலை வகித்தார். இதைதொடர்ந்து பொன்காடு தேவதாஸ் ரோடு, மணிக்கட்டி ரோடு, ஆனந்தவள்ளி வாய்க்கால், மாவடுகுறிச்சி ஆகிய பகுதிகளில் கொசுப்புழு ஒழிப்பு பணி, புகை மருந்து அடித்தல், நிலவேம்பு கசாயம் வழங்குதல் பணிகள் நடந்தது. பின்னர் பொன்காடு அரசு நடுநிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் நடந்தது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார செவிலியர்கள், மருத்துவமல்லா மேற்பார்வையாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் என்எஸ்எஸ் முகாம்.

No comments

பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடக்க விழா நேற்று நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் கஜானாதேவி தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் காளீஸ்வரி முன்னிலை வகித்தார். முகாமை எம்எல்ஏ கோவிந்தராசு துவக்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் நீலகண்டன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளி வளாகத்தை மாணவிகள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை அருகே கிராம மக்களே பாசன வாய்க்காலை தூர்வாரினர்.

No comments

Peravurani Town :



புதுக்கோட்டை பல முறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் பாசன வாய்க்காலை தூர்வாராததால் புதுக்கோட்டை அருகே கிராம மக்களே தூர்வாரும் பணியில் இறங்கினர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ளது முனசந்தைக் கிராமம். இக்கிராமத்தில் பொன்னாச்சி, மேலக்கண்மாய், கோவிஞ்சம்பட்டி கண்மாய் என மூன்று பாசனக் குளங்கள் உள்ளன. இங்கிருந்து 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிர்சாகுபடி செய்யப்படுகிறது.இக்குளங்களுக்கானவரத்துவாரிகளையும், பாசன வாய்க்கால்களையும் தூர்வார வேண்டுமென வருவாய்த்துறையினரிடம் பலமுறை வலியுறுத்தியும் கடந்த பல வருடங்களாக தூர்வாரப்படவில்லையாம். தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்திலும் இப்பணி நடைபெறவில்லை.
இதனால், முறையாக தண்ணீர் வினியோகம் செய்ய முடியாமல் பாசனப்பரப்பு பாதியாக சுருங்கிவிட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.அரசாங்கத்தை நம்பி காத்திருந்து வெறுத்துப்போன கிராம மக்கள் திங்கள் கிழமையன்று தாங்களே நேரடியாக களத்தில் இறங்கினர். நூற்றுக்கும் மேற்பட்ட பாசன விவசாயிகள் திரண்டு பொன்னாச்சி கண்மாயிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை உள்ள பாசன வாய்க்காலை தூர்வாரியுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி கூறுகையில், ஏரி, குளங்களை மராமத்து செய்வதும், வரத்து வாய்க்காலையும், பாசன வாய்க்காலையும் தூர்வாரி நீராதாரத்தையும், விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டியதும் அரசாங்கத்தின் கடமை.
அரசாங்கமோ மக்களின் வரிப்பணத்தை தேவையில்லாத பல திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்து ஆளுங்கட்சியினர், அரசு அதிகாரிகள், ஒப்பந்தகாரர்கள் என கூட்டாக கொள்ளையடிப்பதற்கே வழிவகுக்கின்றது. முனசந்தை போன்று வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல கிராமங்கள் உள்ளன. இனிமேலாவது வருவாய்த்துறையினர் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளைத் திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்றார்.

ஊள்ளாட்சித் தேர்தல் புகார் மையம் இலவச தொலைபேசி எண்.

No comments


ஊள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க புகார் மையம் அமைக்கப்பட்டு இலவச தொலைபேசி எண்களை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வருகின்ற ஊள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்க தமிழ்நாடு தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தின் தரை தளத்தில் தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க 24 மணி நேரமும் செயல்படும் புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு இலவச தொலைபேசி எண்கள் நிறுவப்பட்டுள்ளன.

இலவச எண்கள்:
1. 1800 425 7072
2. 1800 425 7073
3. 1800 425 7074

வரவேற்பு எண்கள்:
1. 044-2363 5011
2. 044-2363 5010

நிகரி எண்கள்:
1. 044-2363 1014
2. 044-2363 1024
3. 044-2363 1074

மேற்கண்ட இணைப்புகளை பொதுமக்கள் பயன்படுத்தி புகார்களை பதிவு செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தஞ்சையில் நடைபெற்ற உலக சுற்றுலா தின கொண்டாட்டம் .

No comments

உலக நாடுகளிடையே சுற்றுலா கொள்கையை வகுக்கின்ற வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 27 ஆம் நாள் உலக சுற்றுலா தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.செவ்வாயன்று தஞ்சாவூருக்கு வருகை தந்த அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளை சுற்றுலா சிறப்பிடங்களான தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் திருக்கோயில், அரண்மனை வளாகம் ஆகிய இடங்களில் மலர் மாலை அணிவித்து பாரம்பரிய முறையில் வரவேற்கப்பட்டனர்.கல்லூரி மாணவ, மாணவியர்களைக்கொண்டு பெரிய கோவிலை சுற்றியுள்ள. நடைவலப்பாதையினை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான சுற்றுலா கருத்தரங்கமும், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கிடையே சுற்றுலா தொடர்பான ஓவியப்போட்டியும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாவட்ட ஆட்சியரக அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக அருங்காட்சியக வளாகத்தில் உலக சுற்றுலா தின நிறைவுவிழாவையொட்டி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. உலக சுற்றுலா தினவிழாவினையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பேராவூரணி பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் தேர்தல் இரண்டாம் கட்டமாக நடைபெறுகிறது.

No comments


தஞ்சை மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக வரும் 19ம் தேதி தேர்தல் நடக்கும் இடங்கள் விபரங்கள் வருமாறு:தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை நகராட்சியில் 33 வார்டுகளில் 27,749 ஆண், 29,214 பெண், 3ம் பாலினம் 18 வாக்காளர் என்று 56,981 பேர் வாக்களிக்கவுள்ளனர். அதிராம்பட்டினம், அம்மாபேட்டை, மதுக்கூர், மெலட்டூர், ஒரத்தநாடு, பேராவூரணி, பெருமகளூர் ஆகிய 7 பேரூராட்சிகளிலும் வாக்குப்பதிவு நடக்கிறது. அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 333 வார்டுகளில் உள்ள 182 வாக்குச்சாவடிகளில் 37,663 ஆண், 37,907 பெண், 3ம் பாலினம் 2 வாக்காளர் என 75,572 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் 231 வார்டுகளில் உள்ள 128 வாக்குச்சாவடிகளில் 26,137 ஆண், 28,230 பெண், 3ம் பாலினம் 1 வாக்காளர் என்று 54,358 பேர் வாக்களிக்கவுள்ளனர். 

ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்தில் 447 வார்டுகளில் உள்ள 259 வாக்குச்சாவடிகளில் 65,611 ஆண், 68,174 பெண் என்று 1,33,785 பேர் வாக்களிக்கவுள்ளனர். பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 336 வார்டுகளில் உள்ள 186 வாக்குச்சாவடிகளில் 41,625 ஆண், 46,101 பெண், 3ம் பாலினம் 4 வாக்காளர் என்று 87,730 பேர் வாக்களிக்கவுள்ளனர். 


பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் 219 வார்டுகளில் உள்ள 150 வாக்குச்சாவடிகளில் 34,243 ஆண், 35,142 பெண் என்று 69,385 பேர் வாக்களிக்கவுள்ளனர். 

சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் 282 வார்டுகளில் உள்ள 152 வாக்குச்சாவடிகளில் 35,683 ஆண், 36,424 பெண் வாக்காளர், 3ம் பாலினம் 1 என்று 72,108 பேர் வாக்களிக்கவுள்ளனர். திருவோணம் ஊராட்சி ஒன்றியத்தில் 237 வார்டுகளில் உள்ள 135 வாக்குச்சாவடிகளில் 34,31 ஆண், 34,115 பெண் என்று 68 146 பேர் வாக்களிக்கவுள்ளனர். ஆக மொத்தம் 2,085 வார்டுகளில் 1,192 வாக்குச்சாவடிகளில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 993 ஆண், 2 லட்சத்து 86 ஆயிரத்து 93 பெண், 3ம் பாலினம் 8 என 5 லட்சத்து 61 ஆயிரத்து 94 பேர் வாக்களிக்க உள்ளனர். 337 இடங்களில் வாக்குப்பதிவு

தஞ்சை மாவட்டத்தில் இரண்டு கட்டமாக நடக்கும் தேர்தலில் 4,569 வார்டுகளுக்கு 2,679 வாக்குச்வாடிகளில் 6 லட்சத்து 43 ஆயிரத்து 89 ஆண், 6 லட்சத்து 60 ஆயிரத்து 96 பெண், 3ம் பாலினம் 32 என்று 13 லட்சத்து 3 ஆயிரத்து 217 பேர் வாக்களிக்கவுள்ளனர். 1 மாநகராட்சி 2 நகராட்சி என்று 129 வார்டுகளுக்கு 337 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. 22 பேரூராட்சிகளில் 336 வார்டுகளுக்கு 368 வாக்குச்சாவடிகளில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 873 ஆண் , 1 லட்சத்து 19 ஆயிரத்து 912 பெண், 3ம் பாலினம் 1 வாக்காளரும் என்று 2லட்சத்து 35 ஆயிரத்து 786 பேர் வாக்களிக்க உள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் மாநகராட்சி, ஒரு நகராட்சிக்கு 17ம் தேதி முதற்கட்ட தேர்தல்.

No comments

Peravurani Town :


தஞ்சை மாவட்டத்தில் முதல் கட்டமாக மாநகராட்சிக்கும், ஒரு நகராட்சிக்கும் தேர்தல் நடக்கும் என்று கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சை மாவட்டத்தில் வரும் 17, 19ம் தேதி என்று இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. இந்த இரண்டு கட்ட தேர்தலுக்கும் வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கி வரும் 3ம் தேதி வரை நடக்கிறது. தினந்தோறும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம். வரும் 4ம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடக்கிறது. 6ம் தேதி மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம்.


தேர்தல் முடிந்த பின்னர் வரும் 21ம் தேதி காலை 8.30 மணி முதல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்குகிறது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு முதல் கூட்டம் வரும் 28ம் தேதி நடக்கிறது. நவம்பர் மாதம் 2ம் தேதி ஒன்றியக்குழு தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி துணைத் தலைவர் ஆகியோர் தேர்வு செய்யப்படுவர்.

தஞ்சை மாவட்டத்தில் முதற்கட்ட தேர்தல் 7 ஊராட்சி ஒன்றியங்களில் நடக்கிறது. பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 309 வார்டுகளில் உள்ள 166 வாக்குச்சாவடிகளில் 34,678 ஆண் வாக்காளர், 35,999 பெண் வாக்காளர் என்று 70,677 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் 408 வார்டுகளில் உள்ள 263 வாக்குச்சாவடிகளில் 70,719 ஆண் வாக்காளர், 71,022 பெண் வாக்காளர், மூன்றாம் பாலினம் 1 பேர் என்று 1 லட்சத்து 41 ஆயிரத்து 742 பேர் வாக்களிக்க உள்ளனர்.

பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் 285 வார்டுகளில் உள்ள 168 வாக்குச்சாவடிகளில் 45,289 ஆண் வாக்காளர், 46,380 பெண் வாக்காளர், மூன்றாம் பாலினம் 7 பேர் என்று 91,676 பேர் வாக்களிக்க உள்ளனர்.தஞ்சை ஊராட்சி ஒன்றியத்தில் 477 வார்டுகளில் உள்ள 328 வாக்குச்சாவடிகளில் 88,432 ஆண் வாக்காளர், 92,216 பெண் வாக்காளர், மூன்றாம் பாலினம் 14 பேர் என்று 1 லட்சத்து 80 ஆயிரத்து 662 பேர் வாக்களிக்கவுள்ளனர்.

திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்தில் 327 வார்டுகளில் உள்ள 175 வாக்குச்சாவடிகளில் 39,50 ஆண் வாக்காளர், 38,418 பெண் வாக்காளர் என்று 77,468 பேர் வாக்களிக்கவுள்ளனர். திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தில் 303 வார்டுகளில் உள்ள 165 வாக்குச்சாவடிகளில் 38,396 ஆண் வாக்காளர், 39,506 பெண் வாக்காளர் என்று 77,902 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் 375 வார்டுகளில் உள்ள 222 வாக்குச்சாவடிகளில் 51,532 ஆண் வாக்காளர், 50,462 பெண் வாக்காளர், மூன்றாம் பாலினம் 2 பேர் என்று 1லட்சத்து ஒரு ஆயிரத்து 996 பேர் வாக்களிக்கவுள்ளனர். ஆக மொத்தம் 7 ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்ட தேர்தலுக்கு 2 ஆயிரத்து 484 வார்டுகளில் உள்ள ஆயிரத்து 487 வாக்குச்சாவடிகளில் 3 லட்சத்து 68 ஆயிரத்து 96 ஆண் வாக்காளர், 3 லட்சத்து 74 ஆயிரத்து 5 பெண் வாக்காளர், மூன்றாம் பாலினம் 24 பேர் என்று மொத்தம் 7 லட்சத்து 42 ஆயிரத்து 123 பேர் வாக்களிக்க உள்ளனர்.

தஞ்சை மாநகராட்சி, கும்பகோணம் நகராட்சிக்கு முதல் கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில் 51 வார்டுகளில் 91,552 ஆண் வாக்காளர், 97,243 பெண் வாக்காளர், மூன்றாம் பாலினம் 4பேர் என்று 1 லட்சத்து 88 ஆயிரத்து 799 பேர் வாக்களிக்க உள்ளனர். கும்பகோணம் நகராட்சியில் 45 வார்டுகளில் 51,848 ஆண் வாக்காளர், 53,862 பெண் வாக்காளர் என்று 1 லட்சத்து 5 ஆயிரத்து 710 பேர் வாக்களிக்க உள்ளனர்.

மேலும் ஆடுதுறை, அய்யம்பேட்டை, தாராசுரம், மேலதிருப்பூந்துருத்தி, பாபநாசம், சோழபுரம், சுவாமிமலை, திருக்காட்டுப்பள்ளி, திருநாகேஸ்வரம், திருப்பனந்தாள், திருவையாறு, திருவிடைமருதூர், திருபுவனம், வல்லம், வேப்பத்தூர் ஆகிய 15 பேரூராட்சிகளிலும் முதல் கட்டமாக வாக்குப்பதிவு வரும் 17ம் தேதி நடக்கிறது என்று கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 12.44 லட்சம் வாக்காளர்கள்.

No comments


புதுக்கோட்டை மாவட்டத்தில்  நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலில் 12 லட்சத்து 44 ஆயிரத்து 769 பேர் வாக்களிக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் திங்கள்கிழமையன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:புதுக்கோட்டை மாவட்டத்தில் 22 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 225 ஊராட்சி ஒன்றியக்குழு வார்டுகள், 497 கிராம ஊராட்சித் தலைவர்கள், 3807 கிராம ஊராட்சி வார்டுகள், 69 நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் 120 பேரூராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. ஆண்கள் 6,19,884, பெண்கள் 6,24,867, இதரர் 18 என மொத்தமாக 12 லட்சத்து 44 ஆயிரத்து 769 வாக்காளர்கள் உள்ளனர்.ஊரகப் பகுதிகளுக்கு 2253, நகராட்சிப் பகுதிக்கு 152, பேரூராட்சிப் பகுதிக்கு 121 என வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
39 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 680 தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் மற்றும் 17495 வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அன்னவாசல், கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, குன்றாண்டார்கோவில், புதுக்கோட்டை, விராலிமலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கும், அன்னவாசல், இலுப்பூர், கறம்பக்குடி, கீரனூர் ஆகிய பேரூராட்சிகள், புதுக்கோட்டை நகராட்சி ஆகிய பகுதிகளுக்கு 17.10.2016 அன்றும், அறந்தாங்கி, அரிமளம், ஆவுடையார்கோவில், பொன்னமராவதி, மணமேல்குடி, திருமயம், திருவரங்குளம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள், அரிமளம், ஆலங்குடி, கீரமங்கலம் ஆகிய பேரூராட்சிகள், அறந்தாங்கி நகராட்சி ஆகிய பகுதிகளுக்கு 19.10.2016 அன்றும் வாக்குப்பதிவு நடைபெறும் என்றார்.

அக்டோபரில் வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை: பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கும்.

No comments

அக்டோபர் மாதம் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால், வங்கி பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் 10-ம் தேதி திங்கள்கிழமை ஆயுதபூஜை பண்டிகையும், 11-ம் தேதி விஜயதசமியும், 12-ம் தேதி மொகரம் பண்டிகையும் கொண் டாடப்படுகிறது. இதனால் 3 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 8-ம் தேதி இரண்டாவது சனிக் கிழமை என்பதாலும், மறுநாள் 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் வங்கிகளுக்கு விடுமுறை தினமாகும். இதனால் வங்கிகளுக்கு தொடர்ந்து 5 நாள் தொடர் விடுமுறை வருகிறது.

இதனால் வங்கிப் பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஏடிஎம் மையங்களிலும் பணத்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்படும்.

இதுகுறித்து, வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வங்கிகளுக்கு ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் மொகரம் பண்டிகைக்கு 3 நாள்தான் விடுமுறை. ஆனால், அதற்கு முன்பாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை வருவதால் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், விடுமுறை நாட்களில் வாடிக்கை யாளர்கள் பாதிக்காத வகையில் அனைத்து ஏடிஎம் மையங்களிலும் போதிய அளவு பணம் இருப்பில் வைக்கப்படும்.

மேலும், தற்போது பெரும் பாலான வங்கிகளின் வெளியே பணம் செலுத்துவதற்கும், பாஸ் புத்தகத்தை பதிவு செய்வதற்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் எளிதாக பணத்தை செலுத்தலாம். அத்துடன், வங்கி விடுமுறை நாட்களில் ஆன்-லைன் சேவை செயல்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

உள்ளாட்சி தேர்தல் 2016: பதற்றமான வாக்குச்சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை.

No comments


தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில் உள்ளாட்சி தேர்தல் 2016 பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, அவர்கள் இன்று (26.10.2016) தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, அவர்கள் தெரிவித்ததாவது, மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் 2016 அறிவித்துள்ளது.  அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.  மாவட்டத்தில் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற காவல் துறையின் மூலம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்.

பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முன்னேற்பாடுகள் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டத்தில் 362 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் என கண்டறியப்பட்டுள்ளது.  22 வாக்குச்சாவடி மையங்கள் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடி மையம் என கண்டறியப்பட்டுள்ளது.   இந்த வாக்குச்சாவடி மையங்களில் காவல் துறை, நுண்ணிய பார்வையாளர்கள், வீடியோ ஒளிப்பதிவாளர்கள், வெப் கேமிரா  மூலமாகவும் வாக்குப்பதிவை கண்காணிக்கப்படவுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர் பிரசாரத்திற்கு மூன்று வாகனங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்யும் பொழுது 5 நபர்கள் மட்டுமே  தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.  வேட்பாளர்கள்  வாக்கு சேகரிக்க காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பிரச்சாரம் செய்யலாம்.  வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள இடத்திலிருந்து 200 மீட்டர் தூரத்திற்குள் வாகனம் அனுமதி கிடையாது.  வாக்குச்சாவடி அமைந்துள்ள இடத்திலிருந்து 100 மீட்டருக்குள் வாக்கு சேகரிக்க செய்யக் கூடாது.  இந்த விதிமுறைகளை காவல் துறையினர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று  இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, அவர்கள் தெரிவித்தார்.

அழிந்து போன சுவடுகள். அழியாத நினைவுகள் பூச்சிகள்!

No comments

Peravurani Town :









நம் ஊரில் சிலவருடங்களுக்கு முன்புவரை அடிக்கடி தென்பட்ட சில
பூச்சி வகைகளை இப்போது அதிகம் காண முடியவில்லை .

1 - பட்டு பூச்சி ,சிவப்பு பூச்சி ,வெல்வெட் பூச்சி என்று பல பெயர்களால் அழைக்கப்படும்  சுவாரஸ்யமான ஒரு வகை பூச்சி .சிவப்பு நிறத்தில் மெத்தென்று இருக்கும் .கைகளில் விட்டால் வேகமாக நடக்கும்.மழைகாலங்களில் அதிகம் தென்படும் .நம் ஊரில் குழந்தைகள் இதை இயேசுவின் துப்பல் என்று அழைப்பர் .சென்ற வருடம் ஏழு விளை பற்றில் இரண்டு பூச்சிகள் கண்டேன் .

2 -மின்மினி பூச்சி .ஆங்கிலத்தில் FIREFLY  என்று அழைக்கப்படும் .இரவில் ஒளிரும் அற்புத பூச்சி ,இதன் ஒளிரும் தன்மை இன்றும் அதிசயமே .

3 -சில்வண்டு, இது மரத்தில் ஒட்டி கொண்டு  அழகாய் ரீங்காரமிடும் .இதன் இசை அற்புதமானது .
4 ) பொன்வண்டு -அழகான பூச்சி ,கண்ணை கவரும் மினுமினுப்பு தோற்றம் உடையது .

இந்த பூச்சிகளை பிடித்து தீ பெட்டியில் வளர்ப்பது சிறுவர்களின் விளையாட்டு .

5 )தட்டாம் பூச்சி , பட்டாம் பூச்சி - அதிக அளவில் காணப்பட்டது ,இதை பிடித்து நூல் கட்டி சிறுவர்கள் விளையாடுவர் .

இப்போது இவை அழிந்துவிட்டன அல்லது குறைந்து விட்டது .என சொல்லலாம்.

உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர் செலவு உச்ச வரம்பு.

No comments


உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களின் டெபாசிட் தொகை.
தேர்தலுக்கான பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த 1995ம் ஆண்டு அரசாணைப்படி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களின் டெபாசிட் தொகை பெறப்பட்டு வருகிறது. அதன்படி, ஊராட்சி உறுப்பினர் 200, தலைவர் 600, ஒன்றிய உறுப்பினர் 600, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 1,000, பேரூராட்சி, நகராட்சி (3ம் நிலை) உறுப்பினர்கள் 500, நகராட்சி உறுப்பினர் 1,000, மாநகராட்சி உறுப்பினர் 2,000 என டெபாசிட் கட்ட வேண்டு–்ம். எஸ்சி., எஸ்டி பிரிவினராக இருந்தால் இதில் 50 சதவீத தொகை கட்டினால் போதும். இவற்றை நடப்பு தேர்தலில் உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 


உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர் செலவு உச்ச வரம்பை மாநிலத் தேர்தல் ஆணையம் மாற்றி அமைத்துள்ளது.  

அதன்படி சென்னையைத் தவிர பிற மாநகராட்சிகளின் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கான செலவு உச்ச வரம்பு ரூ.33,750-இல் இருந்து ரூ.85,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர் வேட்பாளர்களுக்கான உச்ச வரம்பு ரூ.56,250-இல் இருந்து ரூ.90,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.தேர்வு மற்றும் சிறப்பு நிலை நகராட்சிகளில் வார்டு உறுப்பினர் வேட்பாளர்களுக்கான செலவு உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டு ரூ.85,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் மற்றும் முதல் நிலை நகராட்சிகளில் இந்த தொகை ரூ.34,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.பேரூராட்சி மற்றும் மூன்றாம் நிலை நகராட்சி கவுன்சிலர் தேர்தலுக்கு ரூ.17,000-ஆக செலவுத் தொகை உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சி வார்டு தேர்தலுக்கு ரூ.9,000-ஆகவும், கிராம ஊராட்சித் தலைவர் தேர்தலுக்கு ரூ.34,000-ஆகவும் வேட்பாளர் செலவு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்  தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான செலவு உச்சவரம்பு ரூ.85,000 ஆகும். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் வேட்பாளர்களுக்கான செலவுத் தொகை உச்சவரம்பு ரூ.1.70 லட்சம் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

பேராவூரணி திருக்குறள் பேரவைக்கு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு.

No comments

பேராவூரணி திருக்குறள் பேரவையின் நிர்வாகக் குழு கூட்டம் தமிழ்ப்பல்க​லைக்கழக ​மையம் -பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேரவைக்கு புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்னர். தலைவராக பாவலர் மு.தங்கவேலனார் அவர்களும், செயலாளராக பேராசிரியர் கி.புவனேசுவரி அவர்களும், பொருளாளராக ஆயர் த.ஜேம்ஸ் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர். பேராவூரணி திருக்குறள் பேரவை விதிகளின் படி இரண்டாண்டுகளுக்கு இவர்கள் இந்த பொறுப்பினை வகி்ப்பார்கள். முன்னதாக திருக்குறள் பேரவை மாநாட்டினை இவ்வாண்டு நவம்பர் 12 இல் நடத்துவது என்றும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலைப் போட்டிகள் நடத்துவது என்றும் தீர்மானிக்ப்பட்டது.
நிகழ்வில் ஆறு. நீலகண்டன், சித.திருவேங்கடம், கொன்றை சண்முகம், மெய்ச்சுடர் நா.வெங்ஙகடேசன், தா.கலைச்செல்வன் உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பேராவூரணி மாயம்பெருமாள் கோவில் சமையல் பந்தலில் தீ விபத்து.

1 comment


பேராவூரணி அருகே உள்ள ஏனாதிகரம்பையில் உள்ள மாயம்பெருமாள் கோவிலில், வருடந்தோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் அன்னதானம் வழங்கப்படுகிறது. சனிக்கிழமையன்று ஏனாதிகரம்பை கிராமத்தினர் சமையல் செய்வதற்காக தென்னங்கீற்றுகளால் தட்டுப்பந்தல் அமைத்து இருந்தனர். சமையல் வேலைகள் முடிந்து, அன்னதானமும் நடைபெற்றது. சமையலுக்கு பயன்படுத்திய விறகுகளில் சில எரியாமல் இருந்ததாகவும் அதனை முழுமையாக அணைக்காமல் சமையலில் ஈடுபட்டவர்கள் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

சனிக்கிழமை மாலை 4 மணியளவில் காற்று பலமாக வீசியதால் அருகில் இருந்த வைக்கோலில் பற்றிய தீ சமையல் பந்தலில் பரவி பந்தல் முழுமையும் எரிந்து நாசமானது.இது இயற்கையாக நடந்தது அல்ல. மாற்று தரப்பினர் செய்த சதிச்செயல் எனக் கூறி ஏனாதிகரம்பை பேருந்து நிறுத்தத்தில் மற்றொரு தரப்பினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திருச்சிற்றம்பலம் காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமரன், உதவி ஆய்வாளர் தருமராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சாலை மறியலை கைவிடச் செய்தனர்.

இதனால், பேராவூரணி புதுக்கோட்டை வழித்தடங்களில் சனிக்கிழமையன்று மாலை 1 மணி நேரம் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டது. மேலும், சமையல் பந்தலில் தீ விபத்து நடந்தது எப்படி என்பது பற்றி திருச்சிற்றம்பலம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

பேராவூரணியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரம் .

No comments

பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள 26 ஊராட்சிகளிலும் காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. வட்டார மருத்துவ அலுவலர் சௌந்தரராஜன் மேற்பார்வையில் நடைபெற்று வரும் இப் பணியில், கிராம சுகாதார செவிலியர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவ அலுவலர்கள், தனியார் மருத்துவமனைகள் ஆகியவை ஈடுபட்டுள்ளன. கிராம ஊராட்சிகளில் ஒட்டு மொத்த தூய்மைப் பணிகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், ஊராட்சிகளில் உள்ள அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும் சுத்தம் செய்யப்பட்டு குளோரினேசன் செய்யப்பட்டுள்ளன. தேவைப்பட்ட ஊராட்சிகளில் புகை மருந்து தெளிப்பான்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், கிராமங்கள் தோறும் மருத்துவ முகாம்கள், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள், செருவாவிடுதி, காலகம், குறிச்சி, பின்னவாசல் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் தினமும் நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17, 19-ல் நடைபெறும்: தேர்தல் ஆணையர் சீத்தாராமன் அறிவிப்பு.

No comments


தமிழகத்தில் வரும் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 21-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இத்தகவலை சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன் அறிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, மூன்றாம் நிலை நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான நேரடித் தேர்தல்கள் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும்.

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 91,098 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனுக்கள் நாளை (26.09.2016) முதல் பெறப்படும். நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும்.

வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் அக்டோபர் 3-ம் தேதி. தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் அக்டோபர் 4-ம் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற அக்டோபர் 6-ம் தேதியே கடைசி.

வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21-ல் காலை 8 மணிக்கு தொடங்குகிறது. உள்ளாட்சித் தேர்தலில் 4 விதமான வாக்குச்சீட்டுகளை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நேரடி தேர்தல் அனைத்தையும் அக்டோபர் 26-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 5.8 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

தேர்தல் பணிகளை பார்வையிட 37 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

நேரடித் தேர்தலுக்குப் பின்னர் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் என 13,362 பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 2-ம் தேதி மேயர் தேர்தல் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேராவூரணி பேரூராட்சி வார்டுகள் ஒதுக்கீடு அறிவிப்பு விவரங்கள் !

No comments

Peravurani Town :


உள்ளாட்சித் தேர்தலையொட்டி பேராவூரணி உள்ளிட்ட தஞ்சாவூர் மாவட்ட பேரூராட்சிகளில் வார்டுகள் ஒதுக்கீடு விவரங்கள் வெளியீடப்பட்டுள்ளது. 
இதில் பேராவூரணி பேரூராட்சியில் ஆதிதிராவிடர் பெண்ணுக்கு ( SC ) 11-வது வார்டு, பெண்கள் ( பொது ) 1,3,4,5,8,10,17,18 ஆகிய வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஆண்கள் ( பொது ) வார்டுகள் 2,6,7,9,12,13,14,15,16 பேரூராட்சி தலைவர் பதவிக்கு பெண் ஆவார்.

பேராவூரணி பேரூராட்சி வார்டு ஒதுக்கீடு விவரங்கள்: 

SC(பெண்)வார்டு: 11 
பொது பெண்கள் வார்டு: 1,3,4,5,8,10,17,18 
பொது ஆண்கள் வார்டு: 2,6,7,9,12,13,14,15,16 
பேரூராட்சி தலைவர்: பதவி பெண் 

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகளில் வார்டுகள் ஒதுக்கீடு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

வல்லம் பேரூராட்சியில் ஆதிதிராவிடர் பெண்ணுக்கு முதல் வார்டு, பெண்களுக்கு 2, 8, 9, 10, 12, 13, 14 ஆகிய வார்டுகள். ஒரத்தநாடு பேரூராட்சியில் ஆதிதிராவிடர் பெண்ணுக்கு 15-வது வார்டு, பெண்களுக்கு 4, 5, 7, 10, 12, 13, 14 ஆகிய வார்டுகள். திருவையாறு பேரூராட்சியில் ஆதிதிராவிடருக்கு 9-வது வார்டு, ஆதிதிராவிடர் பெண்களுக்கு 1, 15-வது வார்டுகள், பெண்களுக்கு 2, 5, 10, 11, 12, 13 ஆகிய வார்டுகள். 

திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் ஆதிதிதிராவிடருக்கு 14-வது வார்டு, ஆதிதிராவிடர் பெண்ணுக்கு 13-வது வார்டு, பெண்களுக்கு 2, 4, 5, 6, 7, 8, 11 ஆகிய வார்டுகள்.

மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சியில் ஆதிதிராவிடருக்கு முதல் வார்டு, ஆதிதிராவிடர் பெண்ணுக்கு 4, 5-வது வார்டுகள், பெண்களுக்கு 2, 7, 9, 12, 13, 15 ஆகிய வார்டுகள். 

பேராவூரணி பேரூராட்சியில் ஆதிதிராவிடர் பெண்ணுக்கு 11-வது வார்டு, பெண்களுக்கு 1, 3, 4, 5, 8, 10, 17, 18 ஆகிய வார்டுகள். 

அதிராம்பட்டினம் பேரூராட்சியில் ஆதிதிராவிடர் பெண்ணுக்கு 20-வது வார்டு, பெண்களுக்கு 1, 7, 10, 11, 13, 15, 16, 17, 19, 21 ஆகிய வார்டுகள். 

மதுக்கூர் பேரூராட்சியில் ஆதிதிராவிடர் பெண்ணுக்கு 3-வது வார்டு, பெண்களுக்கு 1, 4, 8, 9, 10, 11, 12 ஆகிய வார்டுகள். ஆடுதுறை பேரூராட்சியில் ஆதிதிராவிடருக்கு 6-வது வார்டு, ஆதிதிராவிடர் பெண்ணுக்கு 10-வது வார்டு, பெண்களுக்கு 2, 3, 4, 11, 13, 14, 15 ஆகிய வார்டுகள். 

திருபுவனம் பேரூராட்சியில் ஆதிதிராவிடருக்கு 6-வது வார்டு, ஆதிதிராவிடர் பெண்ணுக்கு 12-வது வார்டு, பெண்களுக்கு 1, 2, 3, 7, 10, 11, 15 ஆகிய வார்டுகள். 

திருவிடைமருதூர் பேரூராட்சியில் ஆதிதிராவிடருக்கு 7-வது வார்டு, ஆதிதிராவிடர் பெண்ணுக்கு 3-வது வார்டு, பெண்களுக்கு 2, 4, 5, 10, 12, 13, 15 ஆகிய வார்டுகள். திருநாகேசுவரம் பேரூராட்சியில் ஆதிதிராவிடர் பெண்ணுக்கு 7-வது வார்டு, பெண்களுக்கு 1, 2, 6, 9, 10, 13, 14. ஆகிய வார்டுகள். 

திருப்பனந்தாள் பேரூராட்சியில் ஆதிதிராவிடருக்கு 2, 12-வது வார்டுகள், ஆதிதிராவிடர் பெண்களுக்கு 5, 7, 15-வது வார்டுகள், பெண்களுக்கு 1, 6, 8, 11, 13 ஆகிய வார்டுகள். வேப்பத்தூர் பேரூராட்சியில் ஆதிதிராவிடருக்கு 4, 7-வது வார்டுகள், ஆதிதிராவிடர் பெண்களுக்கு 1, 3, 14-வது வார்டுகள், பெண்களுக்கு 2, 6, 8, 9, 11 ஆகிய வார்டுகள். 

சோழபுரம் பேரூராட்சியில் ஆதிதிராவிடருக்கு 10-வது வார்டு, ஆதிதிராவிடர் பெண்களுக்கு 9, 15-வது வார்டுகள், பெண்களுக்கு 1, 3, 7, 8, 12, 13 ஆகிய வார்டுகள். சுவாமிமலை பேரூராட்சியில் ஆதிதிராவிடர் பெண்களுக்கு 4-வது வார்டு, பெண்களுக்கு 3, 5, 6, 7, 10, 11, 14. தாராசுரம் பேரூராட்சியில் ஆதிதிராவிடர் பெண்ணுக்கு 3-வது வார்டு, பெண்களுக்கு 4, 6, 8, 9, 12, 14, 15 ஆகிய வார்டுகள். 

பாபநாசம் பேரூராட்சியில் ஆதிதிராவிடர் பெண்ணுக்கு 4-வது வார்டு, பெண்களுக்கு 1, 5, 6, 8, 10, 11, 12 ஆகிய வார்டுகள். அய்யம்பேட்டை பேரூராட்சியில் ஆதிதிராவிடர் பெண்ணுக்கு 4-வது வார்டு, பெண்களுக்கு 1, 2, 3, 6, 8, 9, 10 வார்டுகள். மெலட்டூர் பேரூராட்சியில் ஆதிதிராவிடருக்கு 1, 3, 4-வது வார்டுகள், ஆதிதிராவிடர் பெண்களுக்கு 11, 12, 15-வது வார்டுகள், பெண்களுக்கு 6, 8, 10, 13, 14 வார்டுகள். 

அம்மாபேட்டை பேரூராட்சியில் ஆதிதிராவிடருக்கு 2-வது வார்டு, ஆதிதிராவிடர் பெண்ணுக்கு 8-வது வார்டுகள், பெண்களுக்கு 3, 4, 5, 6, 11, 12, 13 வார்டுகள். இவற்றைத் தவிர 22 பேரூராட்சிகளிலும் மற்றவை பொது வார்டுகள். 

கும்பகோணம் நகராட்சியில்.

 உள்ளாட்சித் தேர்தலில் கும்பகோணம் நகராட்சியில் பெண்களுக்கு 23 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் நகராட்சியில் மொத்தம் 45 வார்டுகள் உள்ளன. இதில், ஆதிதிராவிடருக்கு 23-வது வார்டு, ஆதிதிராவிடர் பெண்களுக்கு 27, 30-வது வார்டுகள். பெண்களுக்கு 2, 3, 4, 5, 8, 9, 21, 22, 26, 28, 31, 35, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45. மற்றவை பொது வார்டுகள். 

பட்டுக்கோட்டை நகராட்சியில்.

பட்டுக்கோட்டை நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இவற்றில் ஆதிதிராவிடருக்கு 29-வது வார்டு, ஆதிதிராவிடர் பெண்ணுக்கு 33-வது வார்டு, பெண்களுக்கு 1, 2, 5, 7, 10, 11, 12, 14, 15, 17, 20, 21, 23, 24, 26, 32 ஆகிய வார்டுகள். மற்றவை பொதுவானவை.

சீத்தாப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.

No comments

நமக்கு வரும் நோய்களில் பெரும்பாலானவற்றை தீர்க்க இயற்கையிலேயே பல வழிமுறைகள் உள்ளன. மூலிகைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்வதன் மூலம் மனிதனுக்கு மரணத்தைத் தரும் நோய்களைக் கூட விரட்டு முடியும் என்பது உண்மை. அந்த வகையில் மனிதனுக்கு மரணவாயிலை திறக்கும் நோய்களில் ஒன்றாக சர்க்கரை நோயும் உள்ளது. சர்க்கரை அளவை முறையாக பராமரிக்க இயற்கையான வழிமுறைகள் சில உள்ளன. மருந்துகளை சாப்பிடுவது முக்கியமானதாக இருந்தாலும், இயற்கை வழிமுறைகளில் சர்க்கரை நோயை விலக்கி வைத்திருப்பது எளிதான செயலாகும்.

உங்களுடைய உடலின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நீங்கள் ஒரு சர்க்கரை நோயாளியாக இருந்தால் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில், அது தொடர்பான வேறு சில பிரச்சனைகளுக்கும் ஆளாகிட நேரிடும். சாப்பிடும் உணவு மற்றும் தொடர்ந்த உடற்பயிற்சி ஆகியவை இரண்டும் நீரிழிவு நோயாளிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள நம்ப வேண்டிய இரண்டு வழிமுறைகளாகும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை முழுமையாகத் தவிர்த்து விட்டு, இயற்கையான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டியதும் அவசியமாகும்.

இயற்கையான உணவுகளைக் கொண்டு நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும் என்று பேசும் போது, சீத்தாப்பழம் அந்த உணவுப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும். உண்மையில், சீத்தாப்பழத்திற்கு பல்வேறு ஆரோக்கிய பலன்கள் உள்ளன. எண்ணற்ற விதைகளை கொண்டுள்ள இந்த ஆப்பிளுக்கு இணையான பலன்கள் வேறெங்கும் இல்லையென்றும் சொல்ல முடியும். புற்றுநோயை எதிர்க்கும் அக்சிடோஜெனின்களை பெருமளவு கொண்டிருக்கும் உணவாக உள்ளது சீத்தாப்பழம்.
சர்க்கரை நோய்க்கு எதிரான குணங்கள்
சீத்தாப்பழத்தில் சர்க்கரை நோய்க்கு எதிரான குணங்கள் உள்ளன. இந்த குறிப்பிட்ட குணம் குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தி, தசைகளுக்கு குளுக்கோஸ் சென்றடையும் வழிகளை மேம்படுத்துகிறது. உடலில் குளுக்கோஸ் பயன்படும் செயல்பாட்டை இந்த குணம் தான் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே, சீத்தாப்பழத்தை தினமும் சிறிய அளவுகளில் சாப்பிடும் போது, அது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.
அதிக அளவு வைட்டமின் சி
உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த விரும்பினால், உடலிலுள்ள வைட்டமின் சி சத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இதன் மூலம் இன்சுலின் தேவையை கட்டுப்படுத்த முடியும். சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி நிறைய உள்ளதால், இதை சாப்பிடுவதால், மருந்துகளை சாப்பிடுவதை விட அதிகமான பலன் கிடைக்கும். இதன் மூலம் மிகவும் எளிதாக, இயற்கையான வழிமுறையில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும், விரட்டிடவும் முடியும்.
மக்னீசியம்
உடலுக்குத் தேவையான மிக முக்கியமான தாதுக்களில் மூன்றாவது இடத்தை மக்னீசியம் பிடிக்கிறது. குறைவான அளவு மக்னீயம் உடலில் இருந்தால், நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகமாக வைத்திருக்கவும், குளுக்கோஸை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே, மக்னீசியம் நிறைந்திருக்கும் சீத்தாப்பழத்தை சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்து என்றால் அது தவறில்லை.
பொட்டாசியம்
குறைவான அளவு பொட்டாசியம் இருந்தால், சர்க்கரை நோய்க்கான கதவு வேகமாக திறக்கப்படும். முறையான வழிமுறையில் பொட்டாசியத்தை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். அதிகளவு மக்னீசியமும், பொட்டாசியமும் நிறைந்திருப்பது தான் சீத்தாப்பழத்தின் ஆரோக்கிய பலன்களில் குறிப்பிடத் தக்கவையாக உள்ளன. பொதுவாகவே பொட்டாசியமானது செல்லுலர் செயல்பாடுகளை கவனிக்க உதவும், ஆனால் சீத்தாப்பழத்தில் உள்ள பொட்டாசியம் உடலில் உள்ள இன்சுலின் அளவை கட்டுப்படுத்தும்.
இரும்பு
மிகவும் அதிகமான இரும்புச்சத்தை கொண்டிருப்பதும் சீத்தாப்பழத்தின் ஆரோக்கிய பலன்களில் ஒன்றாகும். இரத்த சோகைக்கு எதிராகப் போராடவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் இந்த சத்து உதவுகிறது. எனினும், சர்க்கரை நோயாளியின் உடலில் அளவுக்கு அதிகமாக இரும்புச்சத்து இருந்தால், அது வேறு சில பிரச்சனைகளை வரவழைக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, மிதமான அளவிற்கு சீத்தாப்பழத்தை சாப்பிட்டு சர்க்கரையை கட்டுப்படுத்தவும். இரும்புச்சத்து இருந்தால் இதயத்திற்கு பலனளிக்கும் வகையில் இரத்தத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பது தெரியுமா?

சர்க்கரை நோய் சிகிச்சையில் சீத்தாப்பழத்தின் பங்கைப் பற்றி இப்பொழுது தெரிந்து கொண்டீர்களா?
Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar