Latest

latest

பேராவூரணி பகுதி நினைவு சின்னம் 'மனோரா' சிறப்பு ...

Peravurani Town :

/ by IT TEAM

பேராவூரணி இருந்த சுமார் 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மனோரா. அதிகம் அறியப்படாத சுற்றுலாத் தலமான மனோராவின் சிறப்பு இங்கு வருகை தரும் பார்வையாளர்களிடம் ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

இந்நினைவுச்சின்னம் 2ம் சரபோஜி மன்னரால் கி.பி 1814ல் கட்டப்பட்டது. இவர் ஆங்கிலேயரின் நண்பராக விளங்கினார். இதனால் பிரான்ஸ் நாட்டினை சேர்ந்த மாவீரன் நெப்போலியனை ஆங்கிலேயர் “வாட்டர் லூ” என்ற இடத்தில் தோற்கடித்தனர். இதன் நினைவாக ஆங்கிலேயரின் வெற்றியினை பாராட்டும் வகையில் இந்த ஒப்பற்ற நினைவுச்சின்னத்தை அமைத்துள்ளார். இது ‘மனோரா’ என்றும் அழைக்கப்படுகிறது. இப்பெயர் பற்றிய சிலரின் கருத்து, மனதை கவரும் இடம், மனோகரமான இடம், மராட்டிய மன்னர் உபயோகப்படுத்திய இடம்.

இச்சின்னம் பிரிவு அடுக்காக உயர்ந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டது. 9 அடுக்குகளை கொண்டு, சுற்றிலும் அகழியுடன் காணப்படும் மனோரா, மொகலாயர் கலை பாணியுடன் கட்டப்பட்டுள்ளது.

மராட்டியர்களின் கட்டட கலைக்குச் சிறந்த சான்றாக அமைந்துள்ளது. 22-30 மீ உயரம் கொண்ட மனோராவினுள் செல்வதற்கு இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளன. வாயிலினுள் செல்லும்போதே துப்பாக்கி வைப்பதற்கான அறைகள், போர்க்கருவிகள் வைப்பதற்கான அறைகள், வெடி மருந்து கிடங்குகள், வீரர்கள் தங்குவதற்கான அறைகள் முதலியன உள்ளன. சில சமயங்களில் மன்னர் சரபோஜி தனது குடும்பத்துடன் இங்கு வந்து தங்கியுள்ளார். மனோராவை கலங்கரை விளக்கமாகவும் பயன்படுத்தியிருக்கின்றனர். இங்கு ‘உப்பரிகை’ கட்டப்பட்ட பின்னர், ‘சரபேந்திரராசன் பட்டணம்’ என்றும் அழைக்கப்பட்டது. ‘சரபேந்திரராசன் புரம்’ என்றும் சிலரால் வழங்கப்பட்டது.

இந்த நினைவுச்சின்னத்திலேயே கட்டப்பட்ட காலம், கட்டியதற்கான காரணம், கட்டியவரின் பெயர் ஆகியவற்றை குறிக்கும் கல்வெட்டுகள் தமிழ், மராட்டி, பெர்சியன், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில் பொறிக்கப்பட்டு தனித்தனியே பதிக்கப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டுகளில் இந்நினைவுச்சின்னத்தின் பெயர் பொருள் தமிழில் ‘உப்பரிகை’ என்றும், பெர்சியனில் ‘முனராட்’ என்றும், தெலுங்கில் ‘வ்வஜசௌதம்’ என்றும், ஆங்கிலத்தில் ‘COULMN’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வடமொழியை அடிப்படையாக கொண்ட மராட்டிய மொழியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் பெயரினை அறியும் முக்கிய வார்த்தைகள்  சிதைக்கப்பட்டுவிட்டன. 

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar