Latest

latest

தமிழகத்தில் நாளை 'பந்த்' போராட்டம் விவசாயிகள் முயற்சிக்கு பெருகும் ஆதரவு

Peravurani Town :

/ by IT TEAM


விவசாயிகள் நாளை அறிவித்துள்ள, 'பந்த்' போராட்டத்திற்கு, அரசியல் கட்சிகள், வணிகர் கள் என பல தரப்பிலும், ஆதரவு பெருகி வருகிறது.காவிரி பிரச்னையில், கர்நாடகாவில், தமிழர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இதில், தமிழர்கள் தாக்கப்பட்டனர்; அவர்களது உடமைகள் சேதப்படுத்தப்பட்டன.இதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழகத்தில், நாளை, 'பந்த்' போராட்டத்திற்கு, விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு, தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள் பலவும் ஆதரவு அளித்துள் ளன. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்கமும் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.இதனால், மாநிலம் முழுவதும் மளிகை கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் நாளை இயங்குவது சந்தேகம்.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கமும், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், பால் விற்பனை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.சென்னை,கோயம்பேடு காய்கறி மற்றும் பழங்கள் மொத்த விற்பனை மார்க்கெட் வியா பாரிகளும், 'பந்த்' போராட்டத்தில் பங்கேற்கின் றனர். ஆளுங்கட்சியான அ.தி.மு.க.,வும், @nextcolumn@ மறை முகமாக ஆதரவளிக்கும் என்பதால், முழு அள வில் தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடக்கும் என, விவசாய சங்கங்கள் கூறின.ஆசிரியர்கள் இன்று முடிவு: ஆசிரியர் சங்கத்தினர் இன்று சென்னையில் கூடி, விவசாயிகள் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து, முடிவு எடுக்க உள்ளனர்.புதுச்சேரியிலும் 'பந்த்'தமிழகத்தைப் போலவே, புதுச்சேரியிலும் நாளை, முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 'பந்த் நாளில், புதுச்சேரியில் பஸ்கள் ஓடாது; அனைத்து கடைகளும் மூடி இருக்கும்' என, புதுச் சேரி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.ஓரணியில் திரள வேண்டும்!கர்நாடக அரசைக் கண்டித்து, தமிழகத்தில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் முழு அடைப்பில், கொங்கு ஜனநாயக கட்சி பங்கேற்கும்.தி.மு.க., 'பந்த்'திற்கு ஆதரவளித் துள்ள நிலையில், அ.தி.மு.க.,வும் பங்கேற்க வேண்டும். அனைத்து தமிழக கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்.நாகராஜ் நிறுவன தலைவர், கொங்குநாடு ஜனநாயக கட்சிரயில் மறியல் போராட்டம்!கர்நாடகாவில், தமிழர்களுக்கு எதிரான வன் முறை வெறியாட்டத்திற்கு, மத்திய அரசே பொறுப்பு.

ஏதோ தமிழகத்திற்கும், கர்நாடகாவிற் கும் இடையிலான தனிப்பட்ட பிரச்னைஎன்பதை போல், மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. இந்த மெத்தனப் போக்கை கண்டித்து, நாளை, சென்னை யில் என் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடக்கிறது.தி.மு.க., - அ.தி.மு.க., மற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து, ஒருமித்த @nextcolumn@கருத்தோடு காவிரி பிரச்னையை அணுகி இருக்க வேண்டும். தமிழக முதல்வர், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, பிரதமரு க்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.திருமாவளவன் தலைவர், விடுதலை சிறுத்தைகள்ஓட்டல்கள் பங்கேற்காது!கடையடைப்பு போராட்டங்களில் ஈடுபடுவது, தமிழக அரசின் சட்ட ரீதியிலான முயற்சிகளை வலுவிழக்கச் செய்து விடும். கடையடைப்பு போராட்டத்தில் ஓட்டல்கள் சங்கம் பங்கேற் காது.வெங்கடசுப்பு, சீனிவாசன், கே.எல்.குமார் நிர்வாகிகள், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம்மருந்து கடைகள் திறப்புகடையடைப்பு போராட்டத்துக்கு, தமிழக மருந்து வணிகர்கள் சங்கம் ஆதரவு தெரிவிக் கிறது.

அதே நேரத்தில், உயிர் காக்கும் மருந்து களை விற்பனை செய்வதால், நோயாளிகளின் நலன் கருதி, நாளை ஒரு நாள் மட்டும் காலை, 11:00 மணிக்கு மேல், மருந்து கடைகள் திறக்கப் படும்.செல்வம் செயலர், தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம்

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar