Latest

latest

கல்லணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு !

Peravurani Town :

/ by IT TEAM

தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையிலிருந்து, காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.கே.எஸ்.பழனிச்சாமி அவர்கள், நாகப்பட்டிணம் மாவட்ட ஆட்சித் தலைவர் சூ.பழனிச்சாமி அவர்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் இல.நிர்மல்ராஜ், அவர்கள் மாநிலங்களவை உறுப்பினர் .ஆர்.வைத்திலிங்கம் அவர்கள்,  ஆகியோர் முன்னிலையில், உணவு மற்றும் உணவுப்பொருள் துறை அமைச்சர் இரா.காமராஜ் அவர்கள்,  கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அவர்கள்,  வேளாண்மைத்துறை அமைச்சர் .இரா.துரைக்கண்ணு அவர்கள், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன்  அவர்கள், பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்  திருமதி.எஸ்.வளர்மதி அவர்கள் ஆகியோர் கல்லணையில் காவிரி பாசனத்திற்காக இன்று (24.09.2016) தண்ணீர் திறந்து விட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி 2,62,500 ஏக்கரில் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு 2200 ஏக்கரில் நாற்று விடப்பட்டுள்ளது.  தாளடி பருவத்தில் 67,500 ஏக்கரில் நடவு செய்ய திட்டமிடப்பட்டு விதைப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் சம்பா சிறப்பு தொகுப்பு திட்டத்தில் ரூ.10.83கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் பயனாக 63,500 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டு பருவ மழையினால் முளைத்து, நல்ல நிலையில் உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி பருவத்திற்கு தேவையான விதைகள், வேளாண்மை விரிவாக்க மையத்தில் 1233 மெ.டன் மற்றும் கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்களில் 1753 மெ.டன் இருப்பு வைக்கப்பட்டு, இது வரை 963 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான சான்று பெற்ற விதைகள் தேவையான அளவு இருப்பில் உள்ளது.

சம்பா பட்டத்திற்கு தேவையான இராசாயன உரங்கள் யூரியா 7350 மெ.டன், டிஏபி 4475 மெ.டன், பொட்டாஷ் 3050 மெ.டன், காமப்ளக்கஸ் 4470 மெ.டன், தனியார் மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கம் மூலம் இருப்பு வைக்கப்பட்டு தடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

வேளாண்மைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை மூலம் விவசாய சாகுபடியை தீவிரப்படுத்தி உணவு உற்பத்தியை பெருக்குவதற்காக இன்று  கல்லணையிலிருந்து பிரிந்து செல்லும் வெண்ணாற்றில் வினாடிக்கு 3600 கன அடியும், கல்லணைக் கால்வாயில் வினாடிக்கு 1000 கன அடியும், கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 800 கன அடியும், மேல காவேரி ஆற்றில் வினாடிக்கு 3600 கன அடியும் தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

காவிரி பாசன பகுதி ஆறுகளில் தண்ணீர் கடைமடை சென்றடைந்த பின், காரைக்கால் பாசனத்திற்கு உரிய நீர் பங்கீடு செய்து அளிக்கப்படும்.  காவிரி டெல்டா விவசாய பெருங்குடி மக்கள் பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி உடனடியாக விவசாயப் பணியில் ஈடுபட்டு உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும்.

திருவாரூர் மாவட்டத்தில் 3,00,440 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்படவுள்ளது. இதில் 2,23,600 ஏக்கர் நேரடி நெல் விதைப்பு மூலமும், 76,840 ஏக்கரில் பரப்பளவு  நடவு மூலமும் சாகுபடி செய்ய விவசாய பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபடவுள்ளனர்.

நாகப்பட்டிணம் மாவட்டத்தில் இந்த ஆண்டு 3,36,250 ஏக்கர் பரப்பில் சம்பா, தாளடி நெல் சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.  இதில் 1,25,000 ஏக்கர் பரப்பில் சம்பா நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ள திட்டமிடப்பட்டு 95,565 ஏக்கர் பரப்பில் உழவு பணி முடிவடைந்து, இது வரை 39,140 ஏக்கர் பரப்பில் விதைப்பு பணி முடிவடைந்துள்ளது.  மீதமுள்ள பரப்பில் நேரடி நெல் விதைப்பு பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 1,30,000 ஏக்கர் பரப்பில் சம்பா நடவு மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இது வரை 1625 ஏக்கர் பரப்பில் நடவு முடிவடைந்துள்ளது.

மேலும், 567.5 ஏக்கர் பரப்பில் நாற்றங்கால் ஆழ்குழாய் கிணறு நீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு காவிரி நீரை பயன்படுத்தி 21,508 ஏக்கரில் நடவு செய்ய தயார் நிலையில் உள்ளது.

81,250 ஏக்கர் பரப்பில் காவிரி நீரை பயன்படுத்தி நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நாகப்பட்டிணம் மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவத்தில் 3,36,250 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar