Latest

latest

பேராவூரணி இடியுடன் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி.

Peravurani Town :

/ by IT TEAM

மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த கியான்ட் புயல் முழுவதுமாக வலு இழந்தது. தற்போது அது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த பெரும்பாலான இடங்களில் மிதமான மழை, ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு தஞ்சை, நாகை உள்பட டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டியது. தஞ்சை மாவட்டத்தில் திருவையாறில் இன்று அதிகாலை 2 மணி முதல் 4 வரை இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. சாலைகளில், தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சையில் இன்று காலை அதிக பனி பொழிவுடன் மேகமூட்டம் காணப்பட்டது.
இதேபோல் திருப்பூந்துருத்தி, கண்டியூர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. தஞ்சை நகர் பகுதியில் நள்ளிரவு மழை பெய்தது. திருக்காட்டுப்பள்ளி, குடவாசல், அணைக்கரை, மஞ்சலாறு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஈசன்விடுதி, வெட்டிக்காடு, ஒரத்தநாடு, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நள்ளிரவு ஒரு மணி நேரத்துக்கு மேல் பலத்த மழை கொட்டியது. இந்த மழை சம்பா நேரடி நெல்விதைப்பு, நடவு செய்த வயலுக்கு ஏற்றதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

பல இடங்களில் மின்சாரம் தடை செய்யப்பட்டது. பேராவூரணி  மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar