Latest

latest

உயர்நீதிமன்றம் திட்டவட்டம் விளை நிலத்தை வீட்டு மனையாக பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது :

Peravurani Town :

/ by IT TEAM

விளை நிலத்தை வீட்டு மனையாக பத்திரப்பதிவு செய்ய விதி்க்கப்பட்ட தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தடையை நீக்க மறுத்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் பத்திரப்பதிவை முழுமையாக தடை செய்ய்யவில்லை என்றும்,  அங்கீகாரம் இல்லாத மனைகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் மனைகளை அங்கீகரிப்பது தொடர்பாக திட்டம் வகுக்கவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் விளைநிலங்களை வீட்டு மனையாக மாற்றும் விவகாரத்தில் அரசின் கொள்கை என்ன என்று வினவியுள்ள நீதிமன்றம், ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் அரசு தரப்பு கோரிக்கைகளை நிராகரித்தது. முன்னதாக அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. தடையை நீக்க கூடாது என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வாதிட்டார். விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக வாதிட்டார். ஆனால் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனையை பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு அரசு தரப்பு வாதிட்டது. பத்திரப்பதிவு தடையால் கோடிக்கணக்கில் முதலீடு பாதிக்கப்பட்டுள்ளதாக ரியல் எஸ்டேட் தரப்பு வாதிட்டது. கடத்தல் மூலம் பல கோடி கிடைக்கும். அதற்காக கடத்தலை அனுமதிக்க முடியுமா என நீதிபதி வினவினார். இறுதியில் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை மாற்றியமைக்க முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது. பின்னர் வழக்கு விசாரணையை நவம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar