Latest

latest

பேராவூரணி பகுதியில் தீபாவளி பண்டிகையையொட்டி வீடுகளில் பலகாரங்கள் செய்ய மாவு அரைக்கும் பணி தீவிரம்.

Peravurani Town :

/ by IT TEAM

தீபாவளி பண்டிகையையொட்டி வீடுகளில் பலகாரங்கள் செய்ய அரவை மில்லுக்கு சென்று மாவு அரைக்கும் பணியில் பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்பண்டிகையில் முக்கிய பங்கு வகிப்பது விதவிதமான பலகாரங்கள், பட்டாசு, புதிய ஆடைகள். தீபாவளி பண்டிகையன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை உடுத்தி பட்டாசுகளை வெடித்து பொதுமக்கள் மகிழ்வர். இதைதொடர்ந்து அனைத்து இல்லங்களிலும் தயாரிக்கப்பட்ட முருக்கு, அதிரசம் உள்ளிட்ட விதவிதமான பலகாரங்களை உண்டு மகிழ்வர்.

மேலும் உறவினர்கள், நண்பர்களுக்கு பலகாரங்களை கொடுத்து கொண்டாடி மகிழ்வர்.
அதேபோல் புதுமண தம்பதியர்களுக்கு பெண்ணின் வீட்டில் பல்வேறு பலகாரங்களை தயாரித்து கொடுத்து வருவது காலம்தொட்டு வரும் பழக்கமாக உள்ளது. அந்த வகையில் தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களே உள்ளதால் வீடுகள்தோறும் முருக்கு, எள் அடை, அதிரசம், சீடை, பயறு உருண்டை, ரவா உருண்டை, மைசூர்பாகு, சுழியன், உள்ளிட்ட விதவிதமான பலகாரங்களை தயார் செய்ய துவங்கியுள்ளனர்.

அதற்கான அரிசி மாவு, ஊற வைத்த அரிசி மாவு, சீனி, ரவை, பயறு உள்ளிட்ட தானியங்களின் மாவுகளை அரைப்பதற்கு மாவுமில்லில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதுதொடர்பாக மாவுமில்லை சேர்ந்தோர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுக்கு முன்பெல்லாம் தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே மாவு அரைக்க துவங்கிவிடுவர். ஒரு வாரத்துக்கு இரவு, பகல் என்று தொடர்ந்து மாவு அைரக்கும் பணி இருக்கும். மாவு அரைக்க வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வரிசைப்படி அரைத்து கொடுப்போம்.

ஆனால் தற்போது பண்டிகையின் 10 நாட்களுக்கு மட்டுமே வேலை உள்ளது. நாகரீகத்தின் காரணமாக நமது பாரம்பரிய கலாசார பண்புகளை மறந்து ஸ்வீட் கடைகளில் பலகாரங்களை வாங்கி வருகின்றனர். சென்றாண்டு முதல் சற்று கூடுதலாக பலகார மாவுகளை அரைக்க துவங்கியுள்ளனர் என்றார்.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar