Latest

latest

பேராவூரணியில் திருக்குறள் மாநாடு புகைப்படம் தொகுப்பு.

Peravurani Town :

/ by IT TEAM









பேராவூரணியில் திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் மாநாடு- 2047 வெள்ளியன்று பேருந்து நிலையம் அருகில் எம்.எஸ்.விழா அரங்கில் திருக்குறள் பேரவை தலைவர் திருக்குறள் சித்தர் மு.தங்கவேலனார் தலைமையில் நடைபெற்றது.

தொடக்க நிகழ்வாக பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து சுமார் 1000 மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற ' திருக்குறள் பரப்புரை பேரணி'யை வட்டாட்சியர் தங்க.பிரபாகரன் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

விழா அரங்கில் மருத்துவர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவர்  டாக்டர் ஏ.காந்தி, வட்டார மருத்துவ அலுவலர்  டாக்டர் வி.சௌந்தரராஜன் ஆகியோர் முன்னிலையில் குருதிக் கொடை முகாமை வள்ளலார் சங்கங்களின் பொறுப்பாளர் ஏ.வீ.ஏகாம்பரம் தொடங்கி வைத்தார். இதில் 60 பேர் குருதிக் கொடை செய்தனர். தானமாக பெறப்பட்ட இரத்த யூனிட்கள்  பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை இரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து பள்ளத்தூர் நாவலரசன் தலைமையில் கலைமாமணி புதுகை சுகந்தி குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

 கல்வித்துறையில் சாதனையாளருக்கான விருது கொன்றைக்காடு அரசு நடுநிலைப்பள்ளிக்கு,  திருக்குறள் பேரவை செயற்குழு உறுப்பினர் எச்.சம்சுதீன் தலைமையில், கல்வியாளர் காந்தி லெனின் வழங்க கொன்றைக்காடு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் எஸ்.கே.இராமமூர்த்தி பெற்றுக் கொண்டனர்.

பொதுக்கல்விக்கான மாநில மேடை தலைவர் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு சிறப்பு சொற்பொழிவாற்றினார். மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. கடந்த மாதம் திருக்குறள் பேரவை சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

முன்னதாக திருக்குறள் பேரவை செயலாளர் பேரா கி.புவனேஸ்வரி அனைவரையும் வரவேற்றார்.

விழாவில்  வர்த்தக சங்க தலைவர் பி.எஸ்.அப்துல்லா, பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் வி.என்.பக்கிரிசாமி, தமபுக பொதுச்செயலாளர் அரங்க.குணசேகரன், வெங்கடேசுவரா கல்லூரி முதல்வர்,  தலைமையாசிரியர்கள் வீ.மனோகரன், என்.பன்னீர்செல்வம், சி.கஜானாதேவி மற்றும் குழ.செ.அருள்நம்பி, ஆர்.பி.ராஜேந்திரன், கே.வி.கிருஷ்ணன்,  சித.திருவேங்கடம், ஆறு.நீலகண்டன், மெய்ச்சுடர் நா. வெங்கடேசன்,  தா.கலைச்செல்வன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக

பேரவை பொருளாளர் ஆயர் த.ஜேம்ஸ் நன்றி கூறினார்.

நன்றி : மெய்ச்சுடர்


No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar