Latest

latest

தமிழகத்தை மிரட்ட அடுத்து உருவாகிறது 'அஸ்ரி' புயல்.

Peravurani Town :

/ by IT TEAM

அந்தமானுக்கு கிழக்கே மீண்டும் காற்றழுத்தம் மண்டலம் உருவாகி வருகிறது. இது புயலாக மாறும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வாரம் தென்கிழக்கு வங்கக் கடலில் தெற்கு அந்தமான் மற்றும் வடக்கு சுமத்ரா தீவுக்கு இடையே வளி மண்டல மேலடுக்கில் உருவான காற்று சுழற்சி வர்தா புயலாக மாறி, சென்னையில் கரையை கடந்தது.
இந்த புயலின் தாக்கத்தில் இருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில் மீண்டும் ஒரு புயல் உருவாகி வருவதாக வானிலை மையம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து, வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது,
பருவமழை தாமதமாகத் தொடங்கியிருப்பதால் இந்த ஆண்டு மழை தாமதமாகத்தான் முடியும்.
எனவே வர்தா புயலோடு மழை முடிவுக்கு வந்து விடாது. இன்னும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையோ அல்லது புயலோ வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வர்தா புயலின் தாக்கத்தால் வளி மண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டு தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னையில் மழை பெய்யாவிட்டாலும் அதிகபட்சமாக குன்னூரில் நேற்று 10 செமீ மழை பெய்துள்ளது. நீலகிரி 7 செ.மீ, தாராபுரம் 5 செ.மீ பீளமேடு, போளூர், கோவை 1 செ.மீ மழை பெய்துள்ளது.
இந்நிலையில், வளி மண்டல மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் அந்தமானுக்கு கிழக்கே மீண்டும் ஒரு காற்றழுத்தம் நேற்று மாலை உருவாகியுள்ளது.
இது வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த நான்கு நாட்களில் தமிழக கடலோரப்பகுதிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காற்றழுத்தம் வலுப்பெற்று புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது புயலாக மாறும் பட்சத்தில் இதற்கு அஸ்ரிஎன பெயர் சூட்டப்பட்டுள்ளது.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar