வைரிவயல் நடைபெற்ற மாபெரும் குதிரை எல்கைப் பந்தயம் புகைப்படம் தொகுப்பு.

No comments

Peravurani Town :







அறந்தாங்கி அருகே உள்ள வைரிவயல் குதிரை எல்கைப் பந்தயம். சிறப்பாக நடைபெற்றது.

வைரிவயல் நடைபெற்ற மாபெரும் மாடுவண்டி எல்கைப் பந்தயம் புகைப்படம் தொகுப்பு.

No comments






அறந்தாங்கி அருகே உள்ள வைரிவயல் மாட்டுவண்டி எல்கைப் பந்தயம். சிறப்பாக நடைபெற்றது.

காளியம்மன் கோவில் முன்பு முழங்காலிட்டு வணங்கும் காளை.

No comments

ரொம்ப நாளாக நடந்த ஜல்லிக்கட்டு பிரச்சினை ஒருவழியாக முடிவுக்கு வந்தாச்சு, இனிமே களத்துல இறங்கி நம்மள பிடிக்க வருவோரை பந்தாடவேண்டியதுதான். தடை நீங்கியதற்கு சாமிக்கு நன்றி என முழங்காலிட்டு நன்றி தெரிவிக்கின்றதோ. இந்த காளை. திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியை சேர்ந்த நாகராஜ் என்பவர் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளை, காளியம்மன் கோவில் முன்பு முழங்காலிட்டு வணங்கும் காட்சியை படத்தில் காணலாம்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை உடனே அகற்ற வேண்டும் தஞ்சை கலெக்டர் உத்தரவு

No comments

தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி தஞ்சை மாநகரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. இதே போல் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமைக்கருவேலமரங்களும் அகற்றப்பட்டன. தனியாருக்கு சொந்தமான இடங்களில் இன்னும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படாமல் உள்ளன. இது குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை உள்ள இடத்தின் உரிமையாளர்கள் தாங்களே முன்வந்து அகற்ற வேண்டும். அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் அகற்றப்படாவிட்டால் தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் உள்ளாட்சித்துறையால் உடனடியாக அகற்றப்படும். அவ்வாறு சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவதற்கு செலவிடப்படும் செலவுத்தொகையுடன் அபராத தொகையும் சேர்த்து தொடர்புடைய இடத்தின் உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும்.

பிப்ரவரி 1 முதல் ஏடிஎம்-மில் பணம் எடுக்க வரம்பு இல்லை.

No comments

Peravurani Town :


பிப்ரவரி 1 முதல் ஏடிஎம்-மில் பணம் எடுக்க வரம்பு இல்லை.
அந்தந்த வங்கிகளே வரம்பு அளவை நிர்ணயித்துக் கொள்ளலாம். நவ.8 ஆம் தேதி விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு. நடப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் நீக்கம் - ரிசர்வ் வங்கி. வங்கிகளில் நேரடியாக பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தொடரும் - ரிசர்வ் வங்கி.

மாணவசெல்வங்களின் நினைவு சின்னம் 2017.

No comments

ஜல்லிக்கட்டுக்கான மாணவர்களின் அறவழி போரட்ட வெற்றியை தொடர்ந்து, கோவையில் பூவா என்ற சுவர் ஓவியர், கோவையில் போரட்டம் நடந்த வ.உ.சி மைதானம் அருகே அதை நினைவு கூறும் வகையில் ஜல்லிக்கட்டு காளையை மாடுபிடி வீரர் அடக்கியது போல் நினைவு சின்ன சுவர் ஓவியம் வரைந்துள்ளார்.

படம்: தி.விஜய்

பழைய பேராவூரணி நடைபெற்ற கபாடி போட்டியில் விடியோ.

No comments

Peravurani Town :


பேராவூரணி அடுத்த ஆதனூர் மாபெரும் சுழற்கோப்பைக்கான சிறுவர் கபாடி போட்டி 10-02-2017 வெள்ளிக்கிழமை.

No comments

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் ஆதனூர் லெனின் மற்றும் A.சதீஸ்ராஜ் நண்பர்கள் மற்றும் கிராமத்தார்கள் நடத்தும் மாபெரும் சுழற்கோப்பைக்கான சிறுவர் கபாடி போட்டி. எதிர்வரும் 10-02-2017 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணியளவில் ஆதனூர் தேரடி திடல் நடைபெறவுள்ளது. 

இந்த போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹10,001 பரிசும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹8,001 பரிசும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹6,001 பரிசும், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹5,001 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது. மேலும் இப்போட்டியில் பங்கேற்க 52+3 கிலோ எடைகொண்ட சிறுவர் அணிகளுக்கு மட்டுமே அனுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹250 நுழைவுகட்டணமா வசூலிக்கப்படும். 

மேலும் தொடர்புக்கு : +91 9566695775 +91 9965455770 +91 9750731566

பேராவூரணி மின்சார வாரியம் அறிவிப்பு இன்று 30.01.2017 மின் தடை

No comments

பேராவூரணி மற்றும் சேதுபவசத்திரம், பெருமகளூர், திருச்சிற்றம்பலம், ஒட்டங்காடு அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் மின்வாரியம் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், திங்கள்கிழமை ( 30.01.2017) மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

பேராவூரணி அடுத்த புனல்வாசல் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் தஞ்சாவூர் ஆட்சியர் ஆய்வு.

No comments

பேராவூரணி அடுத்த புனல்வாசல் கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா நடத்த கிராம கமிட்டியினர் முடிவு செய்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து விழா நடத்துவது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் விழா கமிட்டியினர் முறைப்படி விண்ணப்பித்தனர். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு விழாவை நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள புனல்வாசல் முத்துமாரியம்மன் கோவில் வளாக இடத்தை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை சனிக்கிழமை பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியருடன் , மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஷ், பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் அரவிந்த்மேனன், ஏ.டி.எஸ்.பி கண்ணன், பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ. கோவிந்தராஜ், தாசில்தார் ரவிச்சந்திரன், பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சௌந்தரராஜன் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் இடத்தை பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ள தேதியை மாவட்ட ஆட்சியர் முடிவு செய்து விரைவில் அறிவிப்பார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நன்றி:தீக்கதிர்

மாட்டு வண்டி பாகங்களும் அதன் பெயர்களும்.

No comments

Peravurani Town :


இந்த தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.மாட்டு வண்டி: பாகங்களும் அதன் பெயர்களும்.

பழைய பேராவூரணி நடைபெற்ற கபாடி போட்டியில் புகைப்படங்கள் தொகுப்பு.

No comments





















பழைய பேராவூரணி நடைபெற்ற கபாடி போட்டி. 

பழைய பேராவூரணியில் மாபெரும் சுழற்கோப்பைக்கான கபாடி போட்டி புகைப்படம்.

No comments


பேராவூரணி நகர்புற பகுதிகளில் கனமழை.

No comments

Peravurani Town :






பேராவூரணி கனமழை பெய்து வருகிறது.

பேராவூரணி மின்சார வாரியம் அறிவிப்பு இன்று 27.01.2017 மின் தடை.

No comments

Peravurani Town :


பேராவூரணி மற்றும் சேதுபவசத்திரம், பெருமகளூர், திருச்சிற்றம்பலம், ஒட்டங்காடு அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் மின்வாரியம் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், வெள்ளிக்கிழமை  (ஜனவரி. 27.01.2017) மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

அறந்தாங்கி வைரிவயல் மாபெரும் மாடு - குதிரை வண்டி எல்கைப் பந்தயம்.

No comments

வைரிவயல் ஸ்ரீ வீரமுனியாண்டவர் சந்தனக்காப்பு உற்சவத்தை முன்னிட்டு  77 வது ஆண்டு  மாபெரும்  மாடு - குதிரை வண்டி எல்கைப் பந்தயம்.

பேராவூரணி கழனிவாசல் இளைஞர்கள் நடத்தப்பட்ட மாட்டுவண்டி குதிரை வண்டி பந்தயம்.

No comments




பேராவூரணி கழனிவாசல்  இளைஞர்கள் நடத்தப்பட்ட  மாட்டுவண்டி குதிரை வண்டி பந்தயம். 
Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar