Latest

latest

தென்னையை தாக்கும் கொண்டை வளைதல் நோய் கட்டுப்படுத்தும் வழிமுறை.

Peravurani Town :

/ by IT TEAM

பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் (பொ) தயாளன்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொண்டை வளைதல் நோயானது போரான் சத்து பற்றாக்குறைவினால் ஏற்படுகிறது.  3 ஆண்டு வயதுடைய இளம் மரங்களில் காணப்படும். தென்னை இலைகள் சிறுத்து விரிவடையாமலும், இலைகள் இயல்பான நிலையில் விரிவடையாமல் ஒன்றுக்கொன்று பின்னிக்கொண்டு வெளிவர இயலாத நிலையில் காணப்படும்.
 குறைபாடு முற்றிய நிலை இதனை நிவர்த்தி செய்ய மரம் ஒன்றிற்கு 50 கிராம் வெண்காரம் (போராக்ஸ்) 2 முறை தொடர்ந்து 3 மாத இடைவெளியில் அளிப்பதனால் இலைகள் நன்றாக பிரிந்து வளர்ச்சியடைகிறது.  வேர் மூலம் 25 பிபிஎம் அளவு போரான் கரைசலை செலுத்துவதால் மரம் போரான் குறைபாட்டிலிருந்து உடனடியாக நிவர்த்தியடைகிறது. நுனி சிறுத்தல் நோயானது ஆரம்ப நிலையில் மட்டைகள் மஞ்சள் கலந்த பச்சை நிறத்துடன் தோற்றமளிக்கும். மட்டைகளின் எண்ணிக்கை குறைவதுடன் பாலைகளின் உற்பத்தி குறைந்து அளவில் சிறுத்தும் காணப்படும்.

காய்களின் உற்பத்தி எண்ணிக்கை குறைகிறது. மேலும் காய்கள் சிறுத்து, தண்ணீர் வற்றி பருப்பின் அளவு குறைந்து காணப்படும். இதனை நிவர்த்தி செய்ய ஆரம்ப நிலையில் உள்ள  மரங்களை மட்டுமே காப்பாற்ற முடியும். பெர்ரஸ் சல்பேட் 2000 பி.பி.எம் (2கிராம் 1 லி. நீரில்) செலுத்தலாம் அல்லது மரம் ஒன்றிற்கு துத்தநாக சல்பேட், தாமிர சல்பேட், மாங்கனீசு சல்பேட், பெர்ரஸ் சல்பேட் மற்றும் போராக்ஸ் இவை ஒவ்வொன்றும் 225 கிராம் மற்றும் அம்மோனியம் மாலிப்டேட் 10 கிராம் ஆகிய நுண்ணூட்ட சத்துக்களை 10 லி. தண்ணீரில் கரைத்து மரத்தின் வேர் பகுதியில் ஊற்ற வேண்டும். 
மேலும் 10 நாட்களுக்கு ஒரு முறை கோடையில் தண்ணீர் பாய்ச்சுவது அவசியமாகும். பென்சின் முனை தோற்றத்துடன் காணப்படும் மரத்தினை வெட்டி அகற்றிவிட்டு தென்னங்கன்றுகளை மீண்டும் நடுவது நல்லது. இவ்வாறு அவர் அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தினகரன்

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar