Latest

latest

மாசிமகத் திருவிழா முன்னிட்டு குதிரை சிலைக்கு மலை போல் குவிந்த மாலைகள்.

Peravurani Town :

/ by IT TEAM

குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் மாசிமகத் திருவிழாவில் பெரிய குதிரை சிலைக்கு ஆயிரக்கணக்கான காகிதப் பூ மாலைகள் குவிந்தது. பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
மாசிமகத் திருவிழா :
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் முன்பு 33 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரிய குதிரை சிலை ஆசியாவில் பெரிய குதிரை சிலை என்று புகழ் பெற்றது. இந்த கோயிலின் மாசிமகத் திருவிழா இரண்டு நாட்கள் நடக்கிறது. மாசிமகத் திருவிழா நேற்று தொடங்கியது.
குதிரை சிலைக்கு மாலைகள் குவிந்தது :
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி பெரிய குதிரை சிலைக்கு அதே உயரத்தில் காகிதப் பூ மாலைகள் அணிவிப்பது தான். இந்த நிகழ்ச்சி மாசிமகத்தின் முதல் நாள் காலை முதலே தொடங்கிவிட்டது. தமிழகம் எங்கும் இருந்து நேர்த்திக் கடன் செய்து கொண்ட பக்தர்கள் காகிதப் பூ மாலைகளை லாரி, மினிலாரி, வேன், கார் போன்ற வாகனங்களில் கொண்டு வந்து நீண்ட வரிசையில் நின்ற அணிவித்தனர். காகிதப் பூ மாலை மட்டுமின்றி பழங்களால் கட்டப்பட்ட மாலையும்ரூபவ் பூ மாலையும் அணிவிக்கப்பட்டது. சில பக்தர்கள் நாட்டிய குதிரைகளின் நாட்டியத்துடன் வந்து மாலைகள் அணிவித்தனர்.
ஒரு சில பக்தர்கள் குதிரைக்கு அணிவிக்கும் மாலையை மங்கள வாத்தியங்களுடன் தலையில் சுமந்து வந்தனர்.
மாட்டு வண்டியில் வந்த பக்தர்கள் :
இந்த திருவிழாவிற்கு பல கிராமங்களில் இருந்து முன்பு கால் நடையாகவும் மாட்டு வண்டியிலும் வந்து தங்கி இருந்து தரிசனம் செய்துவிட்டு சென்றுள்ளனர். அந்த பழமை மாறக் கூடாது என்பதற்காக பலர் இந்த ஆண்டும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாட்டு வண்டிகளில் வந்து தரிசனம் செய்து தங்கி இருந்தனர்.
சிறப்பு போக்குவரத்து :
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக கீரமங்கலம், அறந்தாங்கி, பேராவூரணி, திருச்சிற்றம்பலம், கொத்தமங்கலம், ஆலங்குடி மற்றும் பல ஊர்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தீ அணைப்பு மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. பக்தர்களுக்காக சிறப்ப சிகிச்சைப் பிரிவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருவிழாவில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் இந்த கூட்டத்தில் சமூகவிரோதிகள் புகுந்து பக்தர்களுக்கு தொல்லைகள் கொடுப்பதை தடுக்க கீரமங்கலம் போலிசார் தலைமையில் கூடுதல் போலிசாருடன் ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கூட்டத்தில் சமூக விரோதிகளை கண்டறிய பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
லட்சக்கணக்கான பக்தர்கள் :
திருவிழா காண புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை மற்றும் பல மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரன்டிருந்தனர். கோயிலின் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் அன்னதான செய்தனர்.
நேற்று முன்தினத்தில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டிருந்தது. இன்று நடக்கும் தெப்ப திருவிழா வரை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழு மற்றும் கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.


No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar