Latest

latest

தமிழகம், புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி தேர்வு நாளை தொடங்குகிறது.

Peravurani Town :

/ by IT TEAM
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்கு கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வெழுதுகிறார்கள்.

பிளஸ் 2 தேர்வு கடந்த 2-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எஸ்எஸ்எல்சி தேர்வு மார்ச் 8 முதல் 30-ம் தேதி வரை நடை பெறும் என்று அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, எஸ்எஸ்எல்சி தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்கு கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் 12 ஆயிரத்து 187 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 பேர் தேர்வெழுதுகிறார்கள். இவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 98 ஆயிரத்து 383 பேர். மாணவிகள் 4 லட்சத்து 95 ஆயிரத்து 784 பேர். இவர்கள் தவிர தனித்தேர்வர்களாக 39 ஆயிரத்து 741 பேர் தேர்வில் கலந்துகொள்கிறார்கள். மேலும் சிறைக் கைதிகள் 224 பேர் தேர்வெழுத உள்ளனர்.

எஸ்எஸ்எல்சி தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்து 371 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. தேர்வுக் கூடங்களில் காப்பி அடித்தல், பிட் அடித்தல் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. கல்வித்துறை அதிகாரிகள் மட்டு மின்றி வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தலைமையிலான வருவாய்த் துறையினரின் பறக்கும் படையினரும் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்வார்கள். எஸ்எஸ்எல்சி தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்தார்.

ஒட்டுமொத்தமாக தேர்வு எழுதுவோரில் 6 லட்சத்து 19 ஆயி ரத்து 710 பேர் தமிழ்வழி மாணவ- மாணவிகள் என்பது குறிப்பிடத் தக்கது. சென்னை மாவட்டத்தில் 571 பள்ளிகளைச் சேர்ந்த 51 ஆயி ரத்து 658 மாணவ-மாணவிகள் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதுகிறார் கள். இதற்காக 209 தேர்வு மையங் கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அனிதா தெரிவித்தார்.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar