Latest

latest

தஞ்சை பெரியகோவில் தேரோட்டம் வருகிற 5–ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேரோட்ட பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

Peravurani Town :

/ by IT TEAM

தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றகோவிலாகும். இந்த கோவிலில் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 21–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் விழா நாட்களில் காலை, மாலையில் சாமி புறப்பாடும், பரதநாட்டிய நிகழ்ச்சியும், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. நேற்று 10–ம் நாள் நிகழ்ச்சியாக தியாகராஜசுவாமிகள் யதாஸ்தான பிரவேசம் நடைபெற்றது. மாலையில் சந்திரசேகர் முத்துப்பல்லக்கில் புறப்பாடு நடைபெற்றது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 5–ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 5.30 மணிக்கு மேல் பெரியகோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், நீலோத்பலாம்பாள், சண்டிகேசுவரர், தியாகராஜர்– கமலாம்பாள் ஆகிய பஞ்சமூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு தேரில் மண்டபத்தை வந்தடைகிறார்கள். தேரில் பந்தக்கால் தியாகராஜர்– கமலாம்பாள் மட்டும் தேருக்கு சென்று தேரில் எழுந்தருளுகிறார்கள். அதைத்தொடர்ந்து காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தஞ்சையில் உள்ள 4 ராஜவீதிகளிலும் தேர் வலம் வருகிறது. தேரோட்டம் நடைபெறுவதையொட்டி தஞ்சை மேலவீதியில் உள்ள தேர்நிலையில் பந்தக்கால் முகூர்த்தம் நேற்று காலை 7.30 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாகம், பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் கோவில் செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர் ரெங்கராஜன், முன்னாள் கவுன்சிலர் மேத்தா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவாசகம் முற்றோதுதல் சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரியகோவில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவனடியார் தாமோதரன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிவனடியார்கள், சிவபக்தர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 3.30 மணி வரை நடைபெற்றது.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar