Latest

latest

வைரிவயல் நடைபெற்ற 78 ஆம் ஆண்டுமாபெரும் மாட்டுவண்டி குதிரை எல்கைப் பந்தயம் புகைப்படம் தொகுப்பு.

Peravurani Town :

/ by IT TEAM






அறந்தாங்கி வைரிவயல் கிராமத்தில் வீரமுனியாண்டவர் கோயில் 78-ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி, குதிரைவண்டி எல்கை பந்தயம் நடந்தது.

அறந்தாங்கி அருகே வைரிவயல் கிராமத்தில் ஆண்டுதோறும் வண்டிபந்தயம் நடப்பது வழக்கம் அதன்படி  காலை 78-ம் ஆண்டாக மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம் நடந்தது.

 மொத்தம் 8 பந்தயங்கள் நடத்தப்பட்டு 3 லட்சத்து 21 ஆயிரம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. 

பந்தயத்தில் பெரியமாடு பந்தயத்தில் முதல் பரிசை மதுரை மாவட்டம் அவணியாபுரம் மோகன்குமார் வண்டியும், 2-வது பரிசை திருமயம் பரலி செல்வி வண்டியும், 3-வது பரிசை மலம்பட்டி காயத்ரி வண்டியும் பெற்றது. 

கரிச்சான் மாடு பந்தயத்தில் முதல்பரிசை புதுக்கோட்டை மாவட்டம் கே புதுப்பட்டி அம்பாள் வண்டியும் 2-வது பரிசை கூம்பள்ளம் சசிரேணுகா வண்டியும், 3-வது பரிசை திருச்சி பிரசாத் வண்டியும் பெற்றது. 

கரிச்சான் குதிரை பந்தயத்தில் முதல்பரிசை நாகப்பட்டிணம் மாவட்டம் திருக்கடையூர் அன்பு உமா வண்டியும், 2-வது பரிசை திருவள்ளுர் பெரியகுப்பம் வண்டியும், 3-வது பரிசை நரங்கியபட்டு மீண்டும் செந்தில்பாலாஜி வண்டியும் பெற்றது.

 பந்தயங்களை காண தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து பல ஆயிரம் ரசிகர்கள் பந்தயம் விடும் எல்லையில் இருந்து கொடி வாங்கும் எல்லை வரை சாலை ஓரம் நின்று ரசித்தனர். 

கடந்த 78 வருடமாக நடைபெறும் தொடர்ந்து நடைபெறும் பந்தயம் என்பதால் ரசிகர் கூட்டம் அலைமோதியது பந்தயத்தை முன்னிட்டு அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar