Latest

latest

பேராவூரணி சுற்று வட்டர பகுதிகளில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்.

Peravurani Town :

/ by IT TEAM

தமிழகம் முழுவதும் இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.30) நடைபெற உள்ளது. 43 ஆயிரம் மையங்கள்: சொட்டு மருந்து வழங்குவதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட 43,051 மையங்கள் செயல்படும். மேலும் பயணிகளின் வசதிக்காக முக்கியப் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1,652 பயணவழி மையங்கள் நிறுவப்படும். தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத இடங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க 1,000 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இடம் பெயர்நது வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் இந்த முகாம்களில் சொட்டு மருந்து வழங்கப்படும். இந்தப் பணிகளில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட உள்ளனர். விரலில் மை சொட்டு மருந்து வழங்கும் மையம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும். விடுபடும் குழந்தைகளைக் கண்டறியும் வகையில் சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும். இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியது: முதல் தவணை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளுக்கு மீண்டும் இந்த முகாம்களில் சொட்டு மருந்து வழங்க வேண்டும். இந்த முகாமின் மூலம் தமிழகத்தில் உள்ள 71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar