Latest

latest

நெடுவாசலில் விவசாயிகள் இலைகளை மாலையாக மாட்டிக்கொண்டு போராட்டம்.

Peravurani Town :

/ by IT TEAM

ஹைட்ரோகார்பன் திட்ட த்திற்குஎதிராக நெடுவாசலில் இலை, தழைகளை மாலையாக மாட்டிக் கொண்டு புதன்கிழமையன்று விவ சாயிகள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேராவூரணி அருகே நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக அப்பகுதி விவசாயிகள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துப் பகுதி மக்களும் இரண்டாம் கட்டமாக கடந்த மாதம் 12-ஆம் தேதி முதல் நூதனப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 36-ஆவது நாளாக புதன் கிழமையன்று நடைபெற்ற போராட்டத்தில் நெடுவாசல் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது ஆண்கள் இத்திட்டத் திற்கு எதிராக இலை தழைகளை மாலையாக கழுத்தில் மாட்டிக்கொண்டு நூதனப் போராட்டத் தில் ஈடுபட்டனர். மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பி னர்.இந்தப் போராட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த விவசாயிகள்: ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் இங்குள்ள விவசாயம் முற்றிலுமாக அழிந்துவிடும். பிறகு இதுபோன்ற இலை, தழைகளைத் தரும் மரம், செடி, கொடிகளைப் பார்க்க முடியாது. ஹைட்ரோ கார்பன் திட்ட த்தைச் செயல்படுத்தி எங்கள் பசு மையை பறிக்காதீர்கள் என்பதை உணர்த்தவே இந்த நூதனப் போராட்டம் எனத்தெரிவித்தனர்.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar