நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகத் திரளும் விவசாயிகள்!

No comments

Peravurani Town :


மிழக அரசியலில் அண்மை காலங்களில் ஏற்பட்ட பரபரப்பு நிகழ்வுகள், தமிழகத்தின் மிக முக்கிய பிரச்னைகளை மறக்கடிக்கச் செய்துள்ளது. கடும் வறட்சியில் தமிழகம் சிக்கியிருப்பதை, விவசாயிகள் மரணித்து போனதை, தண்ணீருக்காக மக்கள் தவித்து வருவதை... சட்டத்தை மீறி கேரளா அணை கட்டி வருவதை... இப்படி பல முக்கிய பிரச்னைகளை நாம் மறந்து விட்டோம். அல்லது மறக்கடிக்கப்பட்டுள்ளோம்.
இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது விவசாயிகள் தான். வறட்சியில் துவங்கி கேரளா அணை கட்டுவது வரை எல்லாம் விவசாயிகளை பாதிக்கும் பிரச்னைகள் தான். இதை எதையும் அரசு கண்டுகொள்ளவில்லை. விவசாயம் பொய்த்து போனதால் இறந்த விவசாயிகளை கூட அரசு கண்டுகொள்ளவில்லை. மறுபுறம் அரசியல் நிகழ்வுகளிலும், அதிகாரத்தை கைப்பற்றுவதிலும் தான் அரசும், மக்கள் பிரதிநிதிகளும் செயல்பட்டனர்.
இந்நிலையில், இன்னுமொரு பிரச்னையில் சிக்கி இருக்கிறார்கள் விவசாயிகள். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு (ஹைட்ரோ கார்பன்) எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க... இத்திட்டம் விவசாயத்தை கடுமையாக பாதிக்கும் எனச்சொல்லி போராடத்துவங்கி இருக்கிறார்கள் விவசாயிகள்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவில் அமைந்துள்ளது நெடுவாசல். தஞ்சாவூர் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள இந்த பகுதி நல்ல மண்வளம் நிறைந்த பகுதியாகும். நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பணப்பயிர்களுக்கும் ஏற்ற நிலமாக உள்ளது. கடந்த ஆண்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் இப்பகுதியல் எரிவாயு சோதனைக்காக இரண்டு விவசாயிகளின் நிலத்தை கையகப் படுத்தி சுமார் 4 ஆயிரம் அடி ஆழத்துக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்தது. அப்போது கிராம மக்கள் திரண்டு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து எரிவாயு சோதனை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதற்காக மேலும் சிலரின் இடங்களைகையகப்படுத்த முயன்றபோதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து சம்மதிக்க மறுத்தனர். இந்நிலையில் நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில்இயற்கை எரிவாயு எடுப்பதற்கு ஒப்புதல் அளித்து மத்திய அரசின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நெடுவாசல் பகுதி விவசாயிகளிடம் எவ்வித கருத்துக்கேட்புக் கூட்டமும் நடத்தப்படவில்லை. விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமலும், திட்டம் குறித்து எந்தவித விளக்கமும் அளிக்காமலும் மத்திய அமைச்சரவை இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதை எதிர்த்து ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம் போன்ற போராட்டங்களை முன்னெடுக்கத்துவங்கி இருக்கிறார்கள். இந்த திட்டத்தை அனுமதிக்க கூடாது என நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள், இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனுவை அளித்தனர். பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் கையெழுத்துப் பெற்று அந்த மனுவை மாவட்ட ஆட்சியரிம் வழங்கினர்.
இது தொடர்பாக விவசாயிகளிடம் பேசிய போது, "இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் மண்வளம் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் குறைந்து வேளாண் தொழில் அழிந்துவிடும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் மட்டுமே நம்பியுள்ள தங்கள் பகுதியைசேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பெரும்பாதிப்புக்கு உள்ளாகும். எனவே, மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால், விவசாயிகளை திரட்டி விரைவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்," என்றனர்.

தென்னையை தாக்கும் கொண்டை வளைதல் நோய் கட்டுப்படுத்தும் வழிமுறை.

No comments

பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் (பொ) தயாளன்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொண்டை வளைதல் நோயானது போரான் சத்து பற்றாக்குறைவினால் ஏற்படுகிறது.  3 ஆண்டு வயதுடைய இளம் மரங்களில் காணப்படும். தென்னை இலைகள் சிறுத்து விரிவடையாமலும், இலைகள் இயல்பான நிலையில் விரிவடையாமல் ஒன்றுக்கொன்று பின்னிக்கொண்டு வெளிவர இயலாத நிலையில் காணப்படும்.
 குறைபாடு முற்றிய நிலை இதனை நிவர்த்தி செய்ய மரம் ஒன்றிற்கு 50 கிராம் வெண்காரம் (போராக்ஸ்) 2 முறை தொடர்ந்து 3 மாத இடைவெளியில் அளிப்பதனால் இலைகள் நன்றாக பிரிந்து வளர்ச்சியடைகிறது.  வேர் மூலம் 25 பிபிஎம் அளவு போரான் கரைசலை செலுத்துவதால் மரம் போரான் குறைபாட்டிலிருந்து உடனடியாக நிவர்த்தியடைகிறது. நுனி சிறுத்தல் நோயானது ஆரம்ப நிலையில் மட்டைகள் மஞ்சள் கலந்த பச்சை நிறத்துடன் தோற்றமளிக்கும். மட்டைகளின் எண்ணிக்கை குறைவதுடன் பாலைகளின் உற்பத்தி குறைந்து அளவில் சிறுத்தும் காணப்படும்.

காய்களின் உற்பத்தி எண்ணிக்கை குறைகிறது. மேலும் காய்கள் சிறுத்து, தண்ணீர் வற்றி பருப்பின் அளவு குறைந்து காணப்படும். இதனை நிவர்த்தி செய்ய ஆரம்ப நிலையில் உள்ள  மரங்களை மட்டுமே காப்பாற்ற முடியும். பெர்ரஸ் சல்பேட் 2000 பி.பி.எம் (2கிராம் 1 லி. நீரில்) செலுத்தலாம் அல்லது மரம் ஒன்றிற்கு துத்தநாக சல்பேட், தாமிர சல்பேட், மாங்கனீசு சல்பேட், பெர்ரஸ் சல்பேட் மற்றும் போராக்ஸ் இவை ஒவ்வொன்றும் 225 கிராம் மற்றும் அம்மோனியம் மாலிப்டேட் 10 கிராம் ஆகிய நுண்ணூட்ட சத்துக்களை 10 லி. தண்ணீரில் கரைத்து மரத்தின் வேர் பகுதியில் ஊற்ற வேண்டும். 
மேலும் 10 நாட்களுக்கு ஒரு முறை கோடையில் தண்ணீர் பாய்ச்சுவது அவசியமாகும். பென்சின் முனை தோற்றத்துடன் காணப்படும் மரத்தினை வெட்டி அகற்றிவிட்டு தென்னங்கன்றுகளை மீண்டும் நடுவது நல்லது. இவ்வாறு அவர் அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தினகரன்

பேராவூரணி அடுத்த நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்கும் மத்திய அரசின் திட்டம்.

No comments

Peravurani Town :


புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு (ஹைட்ரோ கார்பன்) எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்பதல் அளித்துள்ளதற்கு அக்கிராம மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமலே மத்திய அரசு இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது கண்டிக்கத்தக்கது என்றும் உடனடியாக விவசாயகளின் கருத்துகளை கருத்தில் கொண்டு அத்திட்டத்தை ரத்து செய்ய  மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்பட 31 இடங்களில்  இயற்கை எரிவாயு எடுப்பதற்கு மத்திய அமைச்சரவே நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளது.     மத்திய அரசின் இந்த ஒப்புதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் கிராம மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு,  மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்துபெற்று  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும், இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,  கடந்த ஆண்டு  ஓஎன்ஜிசி  நிறுவனம் தங்கள் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  இயற்கை எரிவாயு எடுப்பதற்காக நிலம் கையகப்படுத்தி அங்கு சுமார் 4 ஆயிரம் அடி ஆழத்துக்கு ஆழ்துளை கிணறு அமைத்து பணி மேற்கொண்டபோது  அப்பகுதி விவசாயிகள்  அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து இயற்கை எரிவாயு சோதனை பணிகளை சம்மந்தப்பட்ட நிறுவனம் நிறுத்தி வைத்திருந்தது.  கடந்த ஆண்டு நெடுவாசல் கிராமத்தில்  மேலும் சில இடங்களில்  நிலங்களை கையகப்படுத்த அந்நிறுவனம் முயன்றபோது விவசாயிகள் அதற்கு சம்மதிக்கவில்லை. இந்நிலையில் தங்கள் பகுதி விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமலே மத்திய அமைச்சரவை இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும்  இத்திட்டம் குறித்து  எவ்விதமான விளக்கத்தையும் சம்மந்தப்பட்ட நிறுவனம் பொதுமக்களுக்கு  தெளிவுபடுத்த வில்லை என்றும் குற்றம்சாட்டினர்.  மேலும்,  இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் மண்வளம் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டும் முற்றிலும் குறைந்து வேளாண் தொழில் அழிந்துவிடும் அபாயம் உள்ளதாகவும்  இதனால  விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் மட்டுமே நம்பியுள்ள தங்கள் பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பெரும்பாதிப்புக்கு உள்ளாகும்  என்றும் தெரிவித்தனர்.
மேலும், மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்சினையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் இல்லையெனில் விவசாயிகளை ஒன்றுதிரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அந்தக் கிராமத்தினர் தெரிவித்தனர்.

பேராவூரணி சுற்றுவட்டரப் பகுதிகளில் மிதமழை.

No comments

Peravurani Town :




பேராவூரணி மற்றும் அதன் சில சுற்றுவட்டார கிராமங்களில் இரவில் மிதமழை பெய்தது. இதனால் பொதுமக்களும், கடலை, எள்ளு,உளுந்து சாகுபடி விவசாயப்பெருமக்களும் மகிழ்ச்சியடைந்தனர். பேராவூரணி மழை பெய்ததால் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை வெள்ளனூரில் தென்னிந்திய அளவிலான மாபெரும் தொடர் கபாடி போட்டி பிப்ரவரி 18.

No comments



புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகேயுள்ள வெள்ளனூரில் அருள்மிகு அழகுநாச்சியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு.

புதுக்கோட்டை வெள்ளனூரில் 57 வது ஆண்டு தென்னிந்திய அளவிலான கபாடி போட்டி. எதிர்வரும் 18-02-2017 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில் கோயில் திடல் முன்பாக  நடைபெறவுள்ளது. 

இந்த போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹60,001 பரிசும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹40,001 பரிசும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு₹30,001 பரிசும், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹20,001 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹500நுழைவுகட்டணமா வசூலிக்கப்படும். 

மேலும் கால் இறுதியில் வெளியேறும் அணிகளுக்கு ₹10,001வழங்கப்படும். வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு கோப்பைகள் தங்கம், வெள்ளி நாணயங்கள், சிறந்த அணிக்கான பரிசு, சிறந்த ஆட்ட நாயகன் பரிசு என பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகிறது. மேலும் விளையாட்டு வீரர்களுக்கு தங்குமிடம் பயணப்படி, உணவு வசதிகளும் செய்து கொடுக்கபடும்.நடுவர்கள் அமெச்சூர் கபடி கழக அனுமதி பெற்வர்கள்.போட்டிகள் ஏ.கே.எப்.ஐ விதிமுறைப்படி நடைபெறும்.ஆட்டம் குறித்த நேரத்தில் நடைபெறும் விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்,செவன் ரோஸ் என்கிற பாரதி ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் சிங்கை நண்பர்கள் வெள்ளனூர் கிராமத்தார்கள் பொதுமக்கள் இளைஞரணி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

மேலும் தொடர்புக்கு : +91 9843073585, +91 97515 89939, +9197877 56001, +9197876 97792
Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar