Latest

latest

அடைக்கலம் காத்த அய்யனார் கோவில்.

Peravurani Town :

/ by IT TEAM




தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பொன்னாங்கண்ணிக்காடு கிராமம் பெரிய குளத்துக்கரையில் அமைந்து அருள்பாளித்து வருவது தான் இந்த அடைக்கலம் காத்த அய்யனார் கோவில்.
பேராவூரணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு குலதெய்வமாக விளங்குகிறது இத்திருதளத்திலுள்ள அய்யனார்.
மேலும் தினமும் நடு இரவில் இத்திருக்கோவிலிலுள்ள அய்யனார் தன்னுடைய வாகமான குதிரையில் வலம் வருவதும் அப்படி வரும்பொழுது குதிரையின் சலங்கை சத்தம் பலருக்கு கேட்பதாகவும் கூறுகின்றனர்.
மேலும் பேராவூரணில் புகழ்பெற்ற ஆதிமுத்து சரோஜா திரையரங்கம் அய்யனார் தினமும் வலம் வரும் பாதையில் இருப்பதால் திரையரங்கத்தின் சுற்றுசுவரில் ஒருபகுதி கட்டப்படாமலே இன்றும் உள்ளது.
இத்துணை சிறப்பம்சங்களை கொண்டுள்ள இத்திருக்கோவிலானது கோபுரத்திற்கு அழகான அதனுடைய கலசத்தை இழந்துள்ளது..
சில ஆண்டுகளுக்கு முன்னால் இத்திருதலத்திற்கு குடமுழக்கு விழா நிகழ்த்த வேண்டும் என பேராவூரணி மற்றும் அதனை சுற்றியுள்ள உள்ளடக்கிய கிராமங்களான பொன்காடு, முடப்புளிக்காடு, நாட்டாணிக்கோட்டை,பழையபேராவூரணி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களால் முடிவு செய்யபட்டு அதற்கான வேலைகளும் மும்முரமாக நடைபெற்றது.
பின்னர் ஏதோ சில காரணங்களால் அப்படியே நின்றுவிட்டது. இப்பொழுது இதனுடைய கோபுரம் கலையழகை இழந்து நிற்கிறது .. மீண்டும் நின்றுபோன பணிகள் தொடர்ந்து நடைபெற்று குடமுழக்கு விழா நடைபெற வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் (என்னுடைய) மிகுந்த எதிர்பார்ப்பு.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar