Latest

latest

பேராவூரணி புதிய ரயில்வே நிலையத்தில் நடைமேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Peravurani Town :

/ by IT TEAM

இதில் நீளமான நடைமேடை அமைக்கப்படுவதால் பேராவூரணி வாசிகள் மகிழ்ச்சி.
பேராவூரணியில் கடந்த 2010 ஆம் ஆண்டு வரை செயல்பட்டுவந்த இராமேஸ்வரம்-திருத்துறைப்பூண்டி ரயில் வழித்தடமானது அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுவருகிறது.
இந்த வழித்தடத்தில் காரைக்குடி வரை அகல ரயில்பாதையானது அமைக்கப்பட்டுள்ள நிலையில் பேராவூரணி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட நகரங்களில் புதிய அகல பாதை ரயில் விரிவாக்கப்பணிகள் நடந்துவருகிறது.
பேராவூரணியின் முக்கிய போக்குவரத்து வசதியாக இருந்த இந்த ரயில் சேவை கடந்த சில வருடங்களாக செயல்படாமல் இருப்பதால் பேராவூரணிவாசிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
பல வருடங்களாக ஆமை வேகத்தில் நடைபெற்றுவரும் இந்த புதிய அகல பாதை ரயில் விரிவாக்கப்பணிகள் முடிவுபெற பல வருடங்கள் ஆகும் என பேராவூரணிவாசிகளே தீர்மானித்துவிட்டனர்.
ஆனாலும் சில மாதங்களுக்கு முன்னர் புதிய ரயில்வே நிலையப்பணிகள் துரிதமாக தொடங்கப்பட்டது.


இதனால் பேராவூரணிவாசிகள் மகிழ்ச்சியடைந்திருந்தனர்.
இதன் அடுத்தக்கட்டமாக, பேராவூரணி புதிய ரயில்வே நிலையத்தில் நடைமேடை அமைக்கும் பணிகள் இரவு பகல் பாராமல் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

மிகப்பெரிய அளவில், மிக உயரமாக அமைக்கப்பட்டுவரும் இந்த புதிய நடைமேடையானது நாட்டாணிக்கோட்டை ரயில்வே கேட்டிலிருந்து, அருள்சாமி நாடார் கடை அருகே வரை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தண்டவாளம் அமைப்பதற்கான உள்கட்டமைப்புகளும் கட்டப்பட்டுவருகிறது.

இதனால் பேராவூரணிவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விரைவில் எல்லா கட்டமானப்பணிகளும் முடிக்கப்பட்டு விரைவில் ரயில் சேவை தொடங்கப்படவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar