Latest

latest

தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் இயந்திரம் மூலம் நெல் நடவுக்கு எக்டேருக்கு ரூ.5,000 மானியம் வேளாண் உதவி இயக்குனர் தகவல்.

Peravurani Town :

/ by IT TEAM

பட்டுக்கோட்டை நடப்பு ஆண்டில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடவு இயந்திரம் மூலம் நெல் நடவு பணி செய்வதற்கு ஒரு எக்டேருக்கு ரூ.5 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. இதுகுறித்து திருவோணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மதியரசன் கூறியிருப்பதாவது: மேட்டுப்பாத்தி (அல்லது) பாய் நாற்றங்கால் முறையில் நாற்றுக்கள் தயாரித்து அதனை நடவு இயந்திரம் மூலம் நடவு பணி மேற்கொண்டால் எக்டேர் ஒன்றுக்கு மானியமாக ரூ.5ஆயிரம் அனுமதிக்கப்படுகிறது.

இத்திட்டம் செயல்படுத்துவதற்கு திருவோணம் வட்டாரத்திற்கு 1,300 எக்டேர் பொருள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பா சாகுபடி நடவு இயந்திரம் மூலம் செய்ய ஆர்வம் உள்ள விவசாயிகள் சாதாரண முறையில் நாற்று விடுவதை தவிர்த்து மேட்டுப்பாத்தி (அல்லது) பாய் நாற்றங்கால் முறையில் அமைத்து சரியாக 14-15 நாள் வயதுடைய நாற்றாக இருக்கும் போது நடவு இயந்திரம் மூலம் நடவு பணி மேற்கொண்டு மானியத்தை பெற்று பயனடையலாம்.


இதனால் நடவு செலவு பாதியாக குறைகிறது. மகசூலும் இரு மடங்கு கூடுகிறது. இதுகுறித்து தேவையான ஆலோசனைகளை பெற திருவோணம் வட்டார வேளாண்மை அலுவலர் சிவக்குமாரை 9842602975 என்ற எண்ணிலும், திருவோணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மதியரசடின 9750969405 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு வேளாண்மை உதவி இயக்குனர் மதியரசன் தெரிவித்துள்ளார்.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar