Latest

latest

பேராவூரணியில் அரசு மருத்துவமனை சீர்கேடுகளை களைய கோரிக்கை..

Peravurani Town :

/ by IT TEAM
பேராவூரணி அரசுத் தலைமை மருத்துவமனை சீர்கேடுகளை களைய வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
பேராவூரணியில் உள்ள அரசு வட்டார தலைமை மருத்துவமனைக்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்கு வருகின்றனர். ஆனால், மருத்துவமனை போதிய பராமரிப்பு இன்றியும், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் பற்றாக்குறையுடன் உள்ளது. இதுகுறித்து பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், பேராவூரணி ஒன்றிய திமுக பொறுப்பாளர் க. அன்பழகன், பேரூராட்சி முன்னாள் தலைவர் என். அசோக்குமார், நகரச் செயலாளர் கோ. நீலகண்டன் ஆகியோர் அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ அலுவலர் ராமசாமியிடம் மருத்துவமனை குறைபாடுகளை அண்மையில் கேட்டறிந்தனர்.
இதுகுறித்து க. அன்பழகன் கூறுகையில், மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை, முதுநிலை மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மற்றும் மயக்க மருத்துவர்கள் இல்லாமல் அறுவை சிகிச்சைகள், பிரசவ சிகிச்சைகள் நடப்பதில்லை. அலுவலக உதவியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள், செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. போதிய மருந்து, மாத்திரைகளும் கிடைப்பதில்லையென நோயாளிகள் கூறுகின்றனர். எனவே, சுகாதாரத் துறையும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். காலம்தாழ்த்தினால் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar