பேராவூரணி ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோவில் திருவிழா கொடியேற்றம் விழாவின் புகைப்படத் தொகுப்பு.

No comments

Peravurani Town :










பேராவூரணி ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோவில் சித்ரா பௌர்ணமி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சித்திரை திருவிழா 1-ம் நாள் நிகழ்ச்சி.

No comments

பேராவூரணி நெல் அரிசி வியாபாரிகள் சங்கம் நடத்தப்படும் 1 ம் திருவிழா.

பேராவூரணி ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோவில் சித்ரா பௌர்ணமி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

No comments

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோயில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி உற்சவம் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடத்தப்படும். 12 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவிற்கு அனைத்து ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்த வழிபாடுவார்கள். 

12 நாட்கள் நடக்கும் சித்ரா பவுர்ணமி திருவிழா நிகழ்ச்சி நிரல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி உற்சவ திருவிழா(1-ம் நாள் திருவிழா) இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

2-ம் நாள் திருவிழா - சித்திரை 19- 02.05.2017 - கேடகம். 

3-ம் நாள் திருவிழா - சித்திரை 20 -03.05.2017 - காமதேனுவாகன வீதி உலா. 

4-ம் நாள் திருவிழா - சித்திரை 21 - 04.05.2017 - பூதவாகன வீதி உலா. 

5-ம் நாள் திருவிழா-சித்திரை 22 -05.05.2017 - அன்னவாகன வீதி உலா. 

6-ம் நாள் திருவிழா - சித்திரை 23 -06.05.2017 - மயில் வாகன வீதி உலா. 

7-ம் நாள் திருவிழா - சித்திரை 24 - 07.05.2017 - ரிஷப வாகன வீதி உலா.

8-ம் நாள் திருவிழா - சித்திரை 25 - 08.05.2017 - குதிரை வாகன வீதி உலா. 

9-ம் நாள் திருவிழா - சித்திரை 26 - 09.05.2017 - தேரோட்டம், காவடி - பால்குடம். 

10-ம் நாள் திருவிழா - சித்திரை 27 - 10.05.2017 - தீர்த்தவாரி விழா. 

11-ம் நாள் திருவிழா - சித்திரை 28 - 11.05.2017 - திருக்கல்யாணம், தெப்ப விழா. 

12-ம் நாள் திருவிழா - சித்திரை 29 - 12.05.2017 - விடையாற்றி உற்சவம். 

9-ம் நாள் திருவிழாவான 09.05.2017 அன்று தேரோட்டமும் நடக்கிறது. வருடம்தோறும் இந்த தேரோட்டத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வருவார்கள். மேலும் அன்றைய தினத்தன்று பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு பால்காவடி, பறவை காவடி, பால்குடம், பல்வேறு வகையான காவடிகள் பக்தர்கள் எடுத்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். 11-ம் திருவிழாவான 11.05.2017 அன்று திருக்கல்யாணம் நடக்க உள்ளது. திருவிழாவின் நிறைவாக 12.05.2017 அன்று விடையாற்றி உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

பேராவூரணியில் புதிய உதயம் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெஸ்டாரெண்ட்.

No comments


பேரையில் புதிய உதயம் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெஸ்டாரெண்ட் சைவம் மற்றும் அசைவம் உணவகம்.

தஞ்சை பெரியகோவில் தேரோட்டம் வருகிற 5–ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேரோட்ட பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

No comments

தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றகோவிலாகும். இந்த கோவிலில் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 21–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் விழா நாட்களில் காலை, மாலையில் சாமி புறப்பாடும், பரதநாட்டிய நிகழ்ச்சியும், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. நேற்று 10–ம் நாள் நிகழ்ச்சியாக தியாகராஜசுவாமிகள் யதாஸ்தான பிரவேசம் நடைபெற்றது. மாலையில் சந்திரசேகர் முத்துப்பல்லக்கில் புறப்பாடு நடைபெற்றது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 5–ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 5.30 மணிக்கு மேல் பெரியகோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், நீலோத்பலாம்பாள், சண்டிகேசுவரர், தியாகராஜர்– கமலாம்பாள் ஆகிய பஞ்சமூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு தேரில் மண்டபத்தை வந்தடைகிறார்கள். தேரில் பந்தக்கால் தியாகராஜர்– கமலாம்பாள் மட்டும் தேருக்கு சென்று தேரில் எழுந்தருளுகிறார்கள். அதைத்தொடர்ந்து காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தஞ்சையில் உள்ள 4 ராஜவீதிகளிலும் தேர் வலம் வருகிறது. தேரோட்டம் நடைபெறுவதையொட்டி தஞ்சை மேலவீதியில் உள்ள தேர்நிலையில் பந்தக்கால் முகூர்த்தம் நேற்று காலை 7.30 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாகம், பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் கோவில் செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர் ரெங்கராஜன், முன்னாள் கவுன்சிலர் மேத்தா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவாசகம் முற்றோதுதல் சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரியகோவில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவனடியார் தாமோதரன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிவனடியார்கள், சிவபக்தர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 3.30 மணி வரை நடைபெற்றது.

பேராவூரணியில் போலியோ சொட்டு மருந்து முகாம்.

No comments

இந்தியாவில் போலியோ (இளம்பிள்ளை வாதம்) நோய் ஒழிப்பு பணிக்காக ஆண்டிற்கு இரண்டு முறை நடைபெற்று வருகிறது. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏப்ரல் 30 அன்று இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. பேராவூரணி வட்டாரத்தில் 100 மையங்கள் அமைக்கப்பட்டு, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சவுந்தரராஜன் மேற்பார்வையில் சொட்டு மருந்து வழங்கும் பணி நடைபெற்றது. முன்னதாக வலசக்காடு அரசுப் பள்ளியில் குழந்தை களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சவுந்த ரராஜன் சொட்டு மருந்து வழங்கும் பணியை தொடங்கி வை த்தார். குறிச்சி ஆரம்பசுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் அறிவானந்தம் உடனிருந்தார்.பட்டமேற்படிப்பு இட ஒதுக்கீட்டை நீதிமன்ற ஆணை மூலம் குறைக்கப்பட்டதை கண்டித்து மருத்துவர்கள் போராட்டத்தில் இருந்த போதும், போலியோ மருந்து வழங்கும் பணி தடைபடாமல், மருத்துவர்கள் ஒத்துழைப்போடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தீக்கதிர்

மே தினம் வாழ்த்துக்கள்.

No comments

பேராவூரணி அருள்மிகு ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோவில் புகைப்படம்.

No comments

தஞ்சை புகைவண்டி நிலைய சாலை புகைப்படம்.

No comments

கங்கை கொண்ட சோழபுரம் கோவிலின் புகைப்படம்.

No comments

நாளை மே.1ந்தேதி பிள்ளையார்பட்டி கோயில் கும்பாபிஷேகம் விழா.

No comments






உலகப் புகழ் பெற்ற பிள்ளையார் பட்டி ஸ்ரீ கற்பக வினாயகர் கோவில் கும்பாபிஷேகம் மே1 அன்று வெகு விமரிசையாக நடைபெற இருக்கின்றது. திருப்புத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் மே 1ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு கோயிலின் கோபுரங்கள், தளவரிசைகள் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து கடந்த 24ந்தேதி யாகசாலை பூஜை தொடங்கியது. கோயில் தலைமை குருக்கள் தலைமையில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமமும், தனபூஜை, கஜபூஜை, கோ பூஜை, பிரம்மச்சாரி பூஜையை தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை ப்ரவேசபலி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து நவக்கிரஹ ஹோமமும், மாலை வாஸ்துசாந்தியும் நடைபெற்று வருகிறது. ஏப்.30ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அதையடுத்து மே 1ம் தேதி அதிகாலை 4.30மணிக்கு எட்டாம் கால யாகசாலை பூஜையும், காலை 8 மணிக்கு மஹா பூர்ணாகுதி, தீபாராதனை, கடம் புறப்பாடு நடைபெற உள்ளது. தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் இராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம், தொடர்ந்து மூலஸ்தான மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது

பேராவூரணி அடுத்த புளிச்சங்காடு கைகாட்டி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய அஷ்டபந்தன மாகா கும்பாபிஷேக விழா.

No comments
.







ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய அஷ்டபந்தன மாகா கும்பாபிஷேக விழா.

பேராவூரணியில் ரயில்வே கேட்டை மூடும் திட்டத்தை கைவிட பொதுமக்கள் கோரிக்கை.

No comments

தென்னக ரயில்வே திருச்சிரா ப்பள்ளி டிவிசன் சார்பில் காரை க்குடி- திருவாரூர் அகல ரயில் பாதை திட்டப்பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடை பெற்று வருகிறது. இந்நிலையில் பேராவூ ரணி நகரில் பொதுமக்கள் பயன்பா ட்டில் உள்ள ரயில்வே கேட்டை மூட, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் பல ஆயிரம் பொதுமக்கள் பாதி க்கப்படுவதால் இத்திட்டத்தை கைவிட்டு, ரயில்வே கேட்டை தொடர்ந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பேராவூரணி பேருந்து நிலை யத்தில் இருந்து நீலகண்டபுரம் செல்லும் சாலையில், பேராவூரணி- காரைக்குடி ரயில் பாதையில் இரயில்வே கேட் எண் 121 பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. நூறாண்டு புழக்கத்தில் உள்ள இந்த ரயில்பாதை தற்போது நிரந்தரமாக மூடப் போவதாக ரயில்வே துறை அலுவலர்கள் மூலம் தெரியவந்தது. இதனால் இந்த பாதையை பயன்படுத்தி வரும் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இந்த பாதையை மூடக்கூடாது எனவும், தொடர்ந்து எப்பொழுதும் போல் பாதையை பயன்பாட்டிற்கு அமைத்து தரவேண்டும் என குழு அமைத்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதுகுறித்து உபயோகிப்பாளர் குழு சார்பில் தலைவர் வழக்க றிஞர் எஸ்.மோகன் கூறுகையில், கிராம மக்கள் பயன்படுத்தி வரும் இந்த ரயில்வே கேட் பாதை தென்பகுதியில் உள்ள கழனிவாசல், கொரட்டூர், ரெட்டைவயல், பெருமகளூர் போன்ற கிராமப் பகுதிகளையும், காலகம்-ஆவுடையார்கோயில் இணைப்பு சாலையாகவும் உள்ளது. இதையடுத்த பகுதியில் மருத்துவமனை, பள்ளி, அடுக்கு மாடி குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், அங்கன்வாடி, சுடுகாடு, விரிவாக்க பகுதிகள், விவ சாய நிலங்கள் உள்ளன. இவ்வழியே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பள்ளி மாணவர்கள், விவசாய விளைபொருட்களை கொண்டு செல்லும் பாதையாக உள்ளது. இருசக்கர வாகனங்கள், மாட்டு வண்டிகள், பள்ளி வாகனங்கள் என தினசரி 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த இரயில்வே கேட்டை மூடி விட்டால் இப்பகுதி மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவர். மேலும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பேரிழப்பும், சிரமமும், அச்சமும் ஏற்படும். மிதிவண்டிகளை பயன்படுத்தி பள்ளி செல்லும் மாணவ, மாண வியர் பெரும் இன்னலுக்கு ஆளா வர். எனவே இந்த ரயில்வே கேட்டை நிரந்தரமாக, தொடர்ந்து அமைத்து தர அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் ரயில்வே துறை உயர் அலு வலர்களுக்கு கோரிக்கை மனு அனு ப்பப்பட்டுள்ளது.
நன்றி : தீக்கதிர்

பேராவூரணியில் மாரத்தான் ஓட்டம்.

No comments

பேரை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற, ஒருவார கால கோடைக் கால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில் சனிக்கிழமையன்று நடைபெற்றது.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் என்.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வீ.மனோகரன், அகஸ்ட் சீயோன் பள்ளி தாளாளர் தளபதி ஆகியோர் சிறப்பு ரையா ற்றினர்.பின்னர் விளையாட்டு பயிற்சி பெற்ற 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்ற, 5 கிலோமீட்டர் தூர விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. பின்னர் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பேரை ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒருங்கிணை ப்பாளர்கள் செய்திருந்தனர்.

பேராவூரணி சுற்று வட்டர பகுதிகளில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்.

No comments

Peravurani Town :


தமிழகம் முழுவதும் இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.30) நடைபெற உள்ளது. 43 ஆயிரம் மையங்கள்: சொட்டு மருந்து வழங்குவதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட 43,051 மையங்கள் செயல்படும். மேலும் பயணிகளின் வசதிக்காக முக்கியப் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1,652 பயணவழி மையங்கள் நிறுவப்படும். தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத இடங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க 1,000 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இடம் பெயர்நது வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் இந்த முகாம்களில் சொட்டு மருந்து வழங்கப்படும். இந்தப் பணிகளில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட உள்ளனர். விரலில் மை சொட்டு மருந்து வழங்கும் மையம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும். விடுபடும் குழந்தைகளைக் கண்டறியும் வகையில் சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும். இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியது: முதல் தவணை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளுக்கு மீண்டும் இந்த முகாம்களில் சொட்டு மருந்து வழங்க வேண்டும். இந்த முகாமின் மூலம் தமிழகத்தில் உள்ள 71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

பேராவூரணி அருள்மிகு ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோவில் சித்ரா பௌர்ணமி திருவிழா.

No comments

பேராவூரணி அருள்மிகு ஸ்ரீநீலகண்டப்பிள்ளையார் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா வரும் மே 1-ந்தேதி தொடங்கி மே மாதம் 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பேரராவூரணி முடப்புளிக்காட்டில் ஏந்தல் அருள்மிகு ஸ்ரீநீலகண்டப்பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல வருடங்களாக சித்ரா பௌர்ணமி பெருந்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் பல்வேறு பகுதியில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீலகண்டப்பிள்ளையார் தரிசனம் செய்து நேர்த்தி கடனை செலுத்திவார்கள். தீராத வினை தீர்க்கும் நீலகண்ட பிள்ளையார் என்று இந்த கோவில் இறைவனை பக்தர்கள் அழைக்கின்றனர். இந்த ஆண்டுக்கா சித்ரா பௌர்ணமி திருவிழாவின் நிகழ்ச்சி நிரல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான சித்ரா பௌர்ணமி திருவிழா வரும் மே மாதம் 1-ந்தேதி(திங்கள்) கொடியேற்றத்துடன் தொடங்கி மேமாதம் 12-ந்தேதி விடையாற்றி உற்சவத்துடன் முடிவடைகிறது. முதல் நாளான மே மாதம் 1-ந்தேதி(திங்கள்) கொடியேற்றம் நடைபெறுகிறது. 2-ம் தேதி(செவ்வாய்) வண்ணமயில் வாகன சேவையும், 3-ந்தேதி(புதன்) காமதேனு வாகன சேவையும், 4-ந்தேதி(வியாழன்) பூத வாகன சேவையும் நடைபெறுகிறது.

அதனை தொடர்ந்து 5-ந்தேதி(வெள்ளி) அன்ன வாகன சேவை நடைபெறுகிறது. 6-ந்தேதி(சனி) மயில் வாகன சேவையும், 7-ந்தேதி(ஞாயிறு) ரிஷப வாகன சேவையும், 8-ம் தேதி (திங்கள்) திருவிழாவில் குதிரை வாகன சேவையும் நடைபெறுகிறது. 9-ந்தேதி(செவ்வாய்) காலையில் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். மாலையில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளும் தேர்விழா பிரம்மாண்டமாக நடைபெறும். 12 நாள்கள் நடக்கும் திருவிழாவில் 9-ம் தேதி நடக்கும் இந்த விழா தான் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இன்றைய தினத்தில் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் நடந்து வந்து காவடி மற்றும் பால் குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இன்றைய தினத்தில் காவடி மற்றும் பால்குடம் எடுத்து விநாயகரை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைத்த முடியாத நம்பிக்கையாக உள்ளது. 10-ந்தேதி(புதன்) தீர்த்தம் விழாவும், 11-ம்தேதி(வியாழன்) தெப்ப உற்சவமும், திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. 12 நாள் (வெள்ளி) திருவிழாவின் கடைசி நாளான 11-ந்தேதி விடையாற்றி உற்சவத்துடன் இந்த வருடத்திற்கான சித்ரா பௌர்ணமி திருவிழா முடிவடைகிறது. பேரராவூரணியில் உள்ள இந்த நீலகண்டப்பிள்ளையார் கோவில் விநாயகருக்கும் மிகவும் பிரபலமானதாகும்.

இலவச சைவ சமய வாழ்வியல் பயிற்சி வகுப்பு.

No comments

பேராவூரணியில் ஒரு வார கால இலவச சைவ சமய வாழ்வியல் பயிற்சி வகுப்பு நிறைவு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா ஜே.சி.குமரப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விழா அரங்கில் நடைபெற்றது. குமரப்பா பள்ளி தாளாளர் ஜி.ஆர்.ஸ்ரீதர் நிறைவு விழாவிற்கு தலைமை வகித்து, பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்திப் பேசினார். ஆசிரியர் இரா.மதியழகன் வரவேற்றார்.திருப்பெருந்துறை ஆர்.ராஜமனோகரன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நன்றி : தீக்கதிர்

கேபிள் டி.வி. நிலுவைத் தொகையை செலுத்தியவருக்கே டிஜிட்டல் செட்-டாப் பாக்ஸ் ஆட்சியர் அறிவிப்பு.

No comments

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும். அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு முழுமையாக செலு த்தியவ ர்களுக்கு மட்டுமே டிஜிட்டல் செட்-டாப் பாக்ஸ் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சி யர் ஆ.அண்ணாதுரை தெரி வித்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் 9 வட்டங்க ளிலும் சுமார் 724 உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உள்ளனர். இதில் ஒரு சில ரைத் தவிர, இதர கேபிள் ஆபரேட்டர்கள் மாதாந்திர சந்தா தொகையை அதிகளவில் நிலுவை வைத்துள்ளனர். அதன் படி மாவ ட்டத்தில் உள்ள கேபிள் ஆபரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு ரூ.5 கோடியே 76 லட்சத்து 99 ஆயிரத்து 320-ஐ நிலுவைத் தொகையாக செலுத்த வேண்டியுள்ளது. ஆபரேட்டர்கள் சந்தாதார ர்களிமிருந்து ஒவ்வொரு மாதமும் ரூ.70 மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்றும் அதில் ரூ.20 மட்டுமே அரசுக்கு செலுத்த வேண்டும் எனவும் அரசால் ஆணை யிடப்ப ட்டுள்ளது. ஆனால் பல ஆபரேட்டர்கள் கூடுதலாக தொகையை வசூலித்து வருவதுடன், அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையையும் செலுத்துவதில்லை.அரசுக்கு சந்தா தொகை செலுத்தாமல் வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரும் ஆபரேட்டர்களின் இணைப்புகள் முன்னறிவிப்பின்றி துண்டிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நிலுவையில் உள்ள சந்தா தொகையில் 50 சதவீதத்தை வரும் 30-ம் தேதிக்குள்ளும், மீதமுள்ள தொகையை மே 15-ம் தேதிக்கு ள்ளும் செலுத்த வேண்டும். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு னுஹளு உரிமம் வழங்கி ஆணையிட்டுள்ளது. இந்தியாவிலேயே மாநில அரசின் நிறுவனத்திற்கு னுஹளு உரிமம் வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். தமிழக மக்கள் குறைந்த விலையில் உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் கேபிள் டிவி சேவையை இதன்மூலம் பெறுவார்கள். தற்போது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறு வனம் டிஜிட்டல் செட்-டாப் பாக்ஸ் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அப்படி வழங்கும்போது நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்தி யவர்களுக்கு மட்டுமே டிஜிட்டல் செட்-டாப் பாக்ஸ் வழங்கப்படும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நன்றி : தீக்கதிர்

பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாயத்தொழிலாளர்கள் போராட்டம் நூறுநாள் வேலையில் 5 மாத சம்பளப் பாக்கியை வழங்கிடுக.

No comments

நூறுநாள் வேலைத்திட்ட தொழிலாள ர்களுக்கு கடந்த 5 மாத கால சம்பளப் பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். பேரூராட்சி பகுதிகளிலும் நூறுநாள் வேலைத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழுவை உடனடியாக அமைத்திட வேண்டும். நெடுவாசல் மற்றும் காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு நிரந்தர தடைவிதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் பேராவூரணி ஒன்றியக்குழு சார்பில் ஆவணத்தில் உள்ள பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் முன்பு வெள்ளிக்கிழமையன்று ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய ச்செயலாளர் எம்.எஸ். கருப்பையா தலைமை வகித்தார். மாதர் சங்க மாவட்டச்செயலாளர் எஸ்.தமிழ்செல்வி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.வி.குமாரசாமி ஆதரித்துப் பேசினார். போராட்டத்தில் 60 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அரசுமணியை சந்தித்து தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மனுவை அளித்தனர். அதில் "இதுவரை வழங்கப்படாமல் உள்ள 5 மாத கால கூலி பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். நூறு நாள் வேலை செய்தவர்களுக்கு அந்தந்த ஊராட்சிகளிலேயே பணம் வழங்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
நன்றி : தீக்கதிர்

பேராவூரணியில் ஏப்ரல் 30 முதல் புதிய உதயம் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெஸ்டாரெண்ட்.

No comments

Peravurani Town :


பேராவூரணியில் ஏப்ரல் 30 முதல் புதிய உதயம் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெஸ்டாரெண்ட் சைவம் மற்றும் அசைவம் உணவகம்.

காலிக்குடங்களுடன் மக்கள் சாலை மறியல்.

No comments

பேராவூரணியை அடுத்த அம்மையாண்டி மேற்கு பஞ்சாயத்தைச் சேர்ந்த அம்மையாண்டி, வீரராகவபுரம், பஞ்சநதிபுரம், ஏனாதிகரம்பை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி பேராவூரணி-புதுக்கோட்டை சாலையில் வீரராகவபுரம் கடைவீதியில் வியாழனன்று காலை காலிக்குடங்களுடன் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.இப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே முறையாக குடிநீர் விநியோகம் செய்யப் படவில்லையாம். குறிப்பாக கடந்த 15 தினங்களாக தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது என்று கூறுகின்றனர். மின் மாற்றி பழுதடைந்து பல நாட்கள் ஆகியும் சரி செய்யப்படவில்லையாம். இதனால் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் இயங்கவில்லை. அருகில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு கிடப்பதால் பொதுமக்கள் குளிக்கவோ, குடிக்கவோ தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வந்துள்ளனர். மேலும் கால்நடைகளுக்கும் குடிநீர் வழங்க முடியாமல் கடும் சிரமத்திற்குள்ளாகினர். மின்சாரம் இல்லாததால் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் குழந்தைகளுடன் தவித்து வந்துள்ளனர்.இதுகுறித்து வருவாய்த் துறை, வட்டார வளர்ச்சி அலுவலகம், மின்வாரிய அலு வலகம், உள்ளாட்சி நிர்வா கம் ஆகியவற்றிற்கு தகவல்தெரிவித்தும், மனுக்கள் அளித்தும் கண்டு கொள்ளப்பட வில்லை எனக் கூறப்படுகிறது.இதனால் வெகுண் டெழுந்த அப்பகுதி கிராம மக்கள் சுமார் 200 பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் வீரராகவபுரம் கடைவீதியில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். காலை7 மணிக்கு துவங்கிய சாலைமறியல் 10 மணி வரை நடை பெற்றது. திருச்சிற்றம்பலம் காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் தனிப்படை ஏட்டு ஆதிமூலம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட னர். உரிய அதிகாரிகள் வந்தால் தான் சாலை மறியலை கைவிடுவோம் என பொது மக்கள் கடும் வெயிலில் சாலையில் அமர்ந்தனர். இதில் 2 பெண்கள் மயக்கம் அடைந்தனர்.பின்னர் 10 மணியளவில் பேராவூரணி வட்டாட்சியர் தங்க பிரபாகரன் மறியல் இடத்திற்கு வந்து, உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கை விட்டு கலைந்து சென்றனர்.இப்பகுதியை சேர்ந்த நீலா என்பவர் கூறுகையில், சில தினங்களாகவே தண்ணீர் இல்லாமலும், மின்சாரம் இல்லாமலும் தவித்து வருகிறோம். கொசுக்கடி காரணமாக இப்பகுதியில் நூற்றுக் கணக்கானோருக்கு மர்மக் காய்ச்சல் ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு அதிகாரிகளிடம் முறை யிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார்.அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கு, ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் கண்டுகொள்ளாத தன்மைபொதுமக்களை வீதிக்கு போராட்டத்திற்கு தள்ளி யுள்ளது. இனியாவது பொது மக்களின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் வலி யுறுத்துகின்றனர்.பேராவூரணியை அடுத்த அம்மையாண்டி மேற்கு பஞ்சாயத்தைச் சேர்ந்த அம்மையாண்டி, வீரராகவபுரம், பஞ்சநதிபுரம், ஏனாதிகரம்பை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி பேராவூரணி-புதுக்கோட்டை சாலையில் வீரராகவபுரம் கடைவீதியில் வியாழனன்று காலை காலிக்குடங்களுடன் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.இப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே முறையாக குடிநீர் விநியோகம் செய்யப் படவில்லையாம். குறிப்பாக கடந்த 15 தினங்களாக தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது என்று கூறுகின்றனர். மின் மாற்றி பழுதடைந்து பல நாட்கள் ஆகியும் சரி செய்யப்படவில்லையாம். இதனால் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் இயங்கவில்லை. அருகில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு கிடப்பதால் பொதுமக்கள் குளிக்கவோ, குடிக்கவோ தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வந்துள்ளனர். மேலும் கால்நடைகளுக்கும் குடிநீர் வழங்க முடியாமல் கடும் சிரமத்திற்குள்ளாகினர். மின்சாரம் இல்லாததால் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் குழந்தைகளுடன் தவித்து வந்துள்ளனர்.இதுகுறித்து வருவாய்த் துறை, வட்டார வளர்ச்சி அலுவலகம், மின்வாரிய அலு வலகம், உள்ளாட்சி நிர்வா கம் ஆகியவற்றிற்கு தகவல்தெரிவித்தும், மனுக்கள் அளித்தும் கண்டு கொள்ளப்பட வில்லை எனக் கூறப்படுகிறது.இதனால் வெகுண் டெழுந்த அப்பகுதி கிராம மக்கள் சுமார் 200 பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் வீரராகவபுரம் கடைவீதியில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். காலை7 மணிக்கு துவங்கிய சாலைமறியல் 10 மணி வரை நடை பெற்றது. திருச்சிற்றம்பலம் காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் தனிப்படை ஏட்டு ஆதிமூலம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட னர். உரிய அதிகாரிகள் வந்தால் தான் சாலை மறியலை கைவிடுவோம் என பொது மக்கள் கடும் வெயிலில் சாலையில் அமர்ந்தனர். இதில் 2 பெண்கள் மயக்கம் அடைந்தனர்.பின்னர் 10 மணியளவில் பேராவூரணி வட்டாட்சியர் தங்க பிரபாகரன் மறியல் இடத்திற்கு வந்து, உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கை விட்டு கலைந்து சென்றனர்.இப்பகுதியை சேர்ந்த நீலா என்பவர் கூறுகையில், சில தினங்களாகவே தண்ணீர் இல்லாமலும், மின்சாரம் இல்லாமலும் தவித்து வருகிறோம். கொசுக்கடி காரணமாக இப்பகுதியில் நூற்றுக் கணக்கானோருக்கு மர்மக் காய்ச்சல் ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு அதிகாரிகளிடம் முறை யிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார்.அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கு, ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் கண்டுகொள்ளாத தன்மைபொதுமக்களை வீதிக்கு போராட்டத்திற்கு தள்ளி யுள்ளது. இனியாவது பொது மக்களின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் வலி யுறுத்துகின்றனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 (ஏ) பிரிவு தேர்வுகள் அறிவிப்பு.

No comments

தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்று முதல் (வியாழக்கிழமை) விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்முக தேர்வு இல்லாத டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 41 துறைகளில் 1953 காலிப்பணியிடங்களுக்கான தேர்வை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. காலிப்பணியிடங்களுக்கான தேர்வுக்கு இன்று முதல் மே 26ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப்படிவங்களை தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதள முகவரியான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். னவே மற்ற டிஎன்பிஎஸ்இ தேர்வுகளை விட இதற்கு அதிகமான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தனி எழுத்தர், பல்வேறு துறைகளில் உதவியாளர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 6ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வுக்கட்டணத்தை மே 29ம் தேதி வரை தபால், வங்கி அலுவலகங்கள் மூலம் அல்லது இணையதளம் வழியாகவும் செலுத்தலாம். மேலும் கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று அறிந்து கொள்ளலாம்.

தஞ்சை நூலகத்தில் பரிசளிப்பு விழா.

No comments

தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில், உலக புத்தக தின விழாவையொட்டி நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மாவட்ட நூலக அலுவலர் யசோதா தலைமையில் நடைபெற்றது.மாவட்ட நூலக ஆய்வாளர் ப.காரல் மார்க்ஸ் முன்னிலை வகித்தார். சென்னை கன்னிமாரா நூலக தலைமை அலுவலர் ஆவுடையப்பன் கலந்து கொண்டு, ஓவியப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற, செங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர் ப.சுதாகரன், கட்டுரைப் போட்டியில் மூன்றாம் இடம் பெற்ற க.சாந்தினி பிரியா ஆகியோரை பாராட்டி கேடயம், சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார். மேலும் பேராவூரணி ஒன்றிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் பாம்பன் பாலம் மாதிரியை அமைத்து முதலிடம் பெற்ற மாணவிகள் நீவிதர்சினி, சாந்தினிபிரியா, மாணவர் சிவராஜ் ஆகியோருக்கும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர் ஜே.செந்தில் ஆகியோருக்கும் பேராவூரணி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கோ.தமிழ்செல்வி, கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் கோ.சாமுண்டீஸ்வரி, தலைமையாசிரியர் நா.ஜோதி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரெ.பர மசிவம் மற்றும் கிராமத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.

நன்றி : தீக்கதிர்

பேராவூரணி அரசு ஊழியர் சங்க சார்பில் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்.

No comments

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பேராவூரணி வட்ட கிளை சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இரண்டாம் நாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார துணைத்தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.வட்டாரச் செயலாளர் ராஜசேகரன் மற்றும் தோழமைச்சங்க நிர்வாகிகள் ரெங்கராசு, மகேஷ், மனோகரன் ஆகியோர் பேசினர்.

நன்றி : தீக்கதிர்

விவசாய நீர்பாசன கருவிகள் வழங்கல்.

No comments

Peravurani Town :


பேராவூரணி தற்போது நிலவும் வறட்சியான சூழல் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் நிலையில் உளுந்து, கடலை பயிர்களை காப்பாற்றிட தெளிப்பு நீர் பாசனம் மிகச் சிறந்த முறையாகும். இதை கருத்தில் கொண்டு தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரத்தில் வேளாண்மை துறையின் சார்பில் டான்வோடா திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக 27 நபர்களுக்கு தெளிப்பு நீர் பாசன கருவிகள் 100 சதவீதம் மற்றும் 75 சதவீத மானிய விலையில் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு வேளாண் உதவி இயக்குநர் எஸ்.ஈஸ்வர் தலைமை வகித்தார். இதில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு விவசாயிகளுக்கு தெளிப்பு நீர்பாசன கருவிகளை வழங்கினார்.

நன்றி : தீக்கதிர்

பேராவூரணி தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தல்.

No comments

பேராவூரணி ஒன்றிய ஆணையர் செல்வம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தற்போது கடுமையான கோடைகாலம் நிலவுவதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. தடையை மீறி மின்மோட்டார் பயன்படுத்தி தண்ணீர் எடுக்கப்பட்டால், மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

செங்கமங்கலம் ஸ்ரீ காமாட்சியம்மன் தேரோட்டம் திருவிழா புகைப்படத் தொகுப்பு.

No comments











செங்கமங்கலம் ஸ்ரீ காமாட்சியம்மன் தேரோட்டம் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar