புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி தங்கசாமி விவசாயி...

No comments

Peravurani Town :



புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி கிராமம். அங்கே தங்கசாமி என்றொரு விவசாயி. 35 வருடங்களுக்கு முன்பு விவசாயத்தால் நஷ்டப்பட்டுப்போய் மனம் கலங்கி நின்றார். ஊரில் கடுமையான வறட்சி. விவசாய நிலங்களை விற்று, கடன்களை அடைத்து ஏதாவது ஹோட்டலில் ‘சர்வர்’ வேலைக்கு சென்றுவிடலாமா என்று யோசித்தார்.

அன்று, அகில இந்திய வானொலியில் ஏதோ நிகழ்ச்சி கேட்டுக் கொண்டிருந்தார். ‘மரப்பயிரும் பணப்பயிரே’ என்கிற தலைப்பில் பேராசிரியர் ஒருவரின் உரை. அதுதான் தங்கசாமி வாழ்வின் திருப்புமுனை. சொத்தை விற்கும் முடிவினை மூட்டை கட்டி வைத்தார்.

நூறு தேக்கு மரங்களை வாங்கி தனது நிலத்தில் நட்டார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அவை வளர்ந்து தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்கும் என்பது அவரது திட்டம். ஒரே ஆண்டிலேயே தங்கசாமி நட்ட மரங்கள் இருபது அடி வளர்ந்து அவரை உற்சாகப்படுத்தியது. இதே உற்சாகத்திலேயே நூறு மாங்கன்றுகளை நட்டார். அப்படியே நூறு முந்திரி, நூறு புளியங்கன்று என்று நட்டுக்கொண்டே சென்றார்.

வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், செஞ்சந்தனம், நெல்லி, புளி, மகோகனி என்று சுமார் நூறு வகையில் 5000 க்கு மேற்பட்ட மரங்களுடன், 25 ஏக்கர் அளவுக்கு விரிந்த காட்டுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார் தங்கசாமி. இந்த காட்டினுடைய இன்றைய மதிப்பு பல கோடி. ஹோட்டலில் சர்வர் வேலைக்குச் செல்ல திட்டமிட்டவர், இன்று கோடீஸ்வரர்.

தனது காட்டில் மட்டுமல்ல. நாடெங்கும் மரம் வளர்க்க ஊக்குவிப்பதுதான் தங்கசாமியின் லட்சியம். திருமணங்களுக்கு சென்றால் ‘மொய்’ எழுதமாட்டார். மரக்கன்றுதான் பரிசளிப்பார். புதுக்கோட்டை மாவட்டம் முழுக்க பயணித்து, எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் மரம் நட்டிருக்கிறார்.

இன்று உலகெங்கும் இருந்து, தங்கசாமி வளர்த்த காட்டை பார்க்க ஆராய்ச்சியாளர்கள் குவிகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் தங்கசாமியின் அனுபவங்கள், வேளாண் மாணவர்களுக்கு ஆராய்ச்சிப் பாடமாக போதிக்கப்படுகின்றன.

அதுசரி, மரம் வளர்ப்பு மூலம் எப்படி கோடீஸ்வரனாக முடியும்? ஆச்சரியமடையத் தேவையில்லை.. தங்கம், வெள்ளி, பிளாட்டினம், மார்பிள், கிரானைட் போன்ற உலோகங்கள், கனிமங்கள் மாதிரி மரங்களும் கூட ‘காஸ்ட்லி’ தான்.

ஒரு முத்தின செஞ்சந்தன மரத்தின் இன்றைய விலை இரண்டரை லட்சம். இங்கே பல நூறு செஞ்சந்தன மரம் நிக்குது. குறிப்பாக குமிழ்மரம். தேக்கு வகையைச் சார்ந்த இம்மரம் வெகுவேகமாக வளரும். ஒரே ஒரு மரம், எட்டு ஆண்டுகளில் ஒரு டன் அளவுக்கு வளர்ந்து நிற்கும். இன்றைய தேதியில் ஒரு டன் குமிழ் மரம் 8000 முதல் 10,000 வரை விலை போகின்றன. ஹெக்டேருக்கு சுமார் 1200 மரங்களை வளர்க்க முடியுமென்றால், லாபத்தை நீங்களே கணக்கிட்டு பாருங்கள்..

''நம்ம விவசாயிகளுக்கு நான் சொல்றது ஒன்னே ஒண்ணுதான்.. உங்க நிலம் எவ்வளவு இருக்கோ, அதை மூணா பிரியுங்க. ரெண்டு பங்குல மாத்தி மாத்தி விவசாயம் பண்ணி எப்படியும் போங்க.. அது உங்க உரிமை.. மிச்ச ஒரு பங்குல மட்டுமாவது கண்டிப்பா மரங்களை நடுங்க. உங்க சந்ததி பொழைச்சுக்கும். விவசாயிங்க மட்டும் இல்லை; அரசாங்கமும் இதை யோசிக்கணும்.

ஒரு மரம் பூமியிலிருந்து ஒரு சத்தை எடுத்து, இன்னொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இந்த மரம் கொடுக்கும் சத்தை உண்டு செழிக்கும் இன்னொரு மரம், வேறொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இப்படியே இந்த சங்கிலி பல்வேறு ஜாதி மரங்களுக்கும் தொடரும். காடு செழித்திருப்பதன் தத்துவம் இதுதான். தீர்க்கமான குரலில் பேசுகிறார் தங்கசாமி.

பேராவூரணி கருமை நிறம் மேகமூடம் புகைப்படம்.

No comments

பேராவூரணி செவ்வாய்க்கிழமை 14 மழை..

No comments


தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 105 மி.மீ. மழை பெய்தது.
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
தஞ்சாவூர் 105, வெட்டிக்காடு 90, அணைக்கரை 89, கல்லணை 53.6, குருங்குளம் 46, மஞ்சலாறு 44.4, பூதலூர் 42.6, திருவையாறு, ஈச்சன்விடுதி தலா 42, வல்லம் 40, கும்பகோணம் 39, பட்டுக்கோட்டை 31, நெய்வாசல் தென்பாதி 30.6, திருக்காட்டுப்பள்ளி, திருவிடைமருதூர் தலா 29, பாபநாசம் 26, ஒரத்தநாடு 25.6, அதிராம்பட்டினம் 23, அய்யம்பேட்டை, பேராவூரணி தலா 14, மதுக்கூர் 11.4.

பேராவூரணியில் விவசாய அமைப்புகளின் முழு அடைப்பு போராட்டத்தால் போலீஸ் குவிப்பு.

No comments

Peravurani Town :



கர்நாடகாவிடம் இருந்து காவிரிக்கு உரிய தண்ணீர்
பெற்றுத் தர வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், காவிரியில் 192 டி.எம்.சி., தண்ணீரை வழங்க வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் போராட்டம் அறிவித்துள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதைப்போல
பேராவூரணி நகர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால்
பேராவூரணி வட்டார பகுதிகளில் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பேராவூரணி தாலுக்காவில் பல இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட கட்சிகளும், விவசாய சங்கம், விவசாய சங்க தொழிற்சங்கத்தினரும் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களால் பேராவூரணி நகரில் தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பு அதிரடிப்படையினரும், ஊர்க்காவல் படையினரும் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த பாதுகாப்பு பணியில் பேராவூரணி நகர காவல்துறையினரும், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களும் ஈடுபட்டுவருகின்றனர்.

தஞ்சாவூரில் நாளை நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி..

No comments

Peravurani Town :



தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை மருத்துவம் குறித்த 2 நாள் பயிற்சி முகாம் செவ்வாய், புதன்கிழமைகளில் (ஆக. 30, 31) நடைபெறவுள்ளது.

காலை 9 மணி முதல் நடைபெறவுள்ள இப்பயிற்சிக்கு வரும் அனைவரும் தவறாமல் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது வேறு அடையாள அட்டை கொண்டு வரவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 90471 57859, 04362-204009 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மையத் தலைவர் என். புண்ணியமூர்த்தி தெரிவித்துள்ளர்

பேராவூரணி 4.4 மி.மீ. மழை...

No comments

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 93 மி.மீ. மழை பெய்தது.
மாவட்டத்தில் பல இடங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்): தஞ்சாவூர் 93, பூதலூர் 33.2, திருக்காட்டுப்பள்ளி 27.4, அணைக்கரை 13.8, பாபநாசம் 13, அய்யம்பேட்டை 12, அதிராம்பட்டினம் 10.3, திருவையாறு, பட்டுக்கோட்டை தலா 7, ஒரத்தநாடு 6.4, கும்பகோணம் 6, மதுக்கூர் 5.4, வல்லம் 5, பேராவூரணி 4.4, நெய்வாசல் தென்பாதி 4.2, வெட்டிக்காடு 3.2, குருங்குளம் 3.

பேராவூரணி ஒன்றியத்தில் சுகாதாரப் பணிகள் ஆக. 29 முதல் செப். 2 வரை

No comments

Peravurani Town :



பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள 26 ஊராட்சிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐந்து நாட்கள் ஒட்டுமொத்த சுகாதாரப் பணிகள் ஆகஸ்ட் 29-ம் தேதி முதல் செப். 2-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் பேராவூரணி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார மருத்துவ அலுவலர் செளந்தர்ராஜன் தலைமையில் ஒன்றிய ஆணையர்கள் ரவிச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நீர் மற்றும் கொசுவினால் பரவும் நோய்களை தடுக்க ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து குளோரினேசன் செய்வது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்ட பணியாளர்களை கொண்டு பிளாஸ்டிக் பொருட்கள், கொட்டாங்கச்சிகள், பழைய டயர்கள், உடைந்த பானைகள் ஆகியவற்றை கண்டறிந்து அழிப்பது, ஊராட்சிகளில் முழுமையான சுகாதாரப் பணிகளை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், குடிநீர் தொட்டி இயக்குபவர்கள், டாக்டர்கள் அறிவானந்தம், சந்திரசேகர், அரவிந்த், சிவரஞ்சனி, இலக்கியா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பேராவூரணி அருகே பெருமகளூர் என்ற இடத்தில் 9 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.

No comments

Peravurani Town :


பேராவூரணி ஆக. 30-ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்..

No comments

பேராவூரணி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆக. 30-ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது:
பேராவூரணி வட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோரின் குறைகளைத் தீர்க்கும் வகையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகிக்கிறார். எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் சிரமங்கள், எரிவாயு உருளை வழங்குவதில் காலதாமதம் போன்ற குறைபாடுகள் குறித்து வரப்பெறும் புகார்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுத்து, எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உள்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தைச் சீர்படுத்த இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
எனவே, எரிவாயு இணைப்பு குறித்த தங்களது குறைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர் இக்கூட்டத்தில் மனுக்கள் மூலமும், நேரிலும் குறைகளை தெரிவிக்கலாம்.

ஆனந்தவள்ளி வாய்க்கால் எப்போது தூர்வாரப்படும் ...

No comments








பேராவூரணி ஆனந்தவள்ளி வாய்க்கால் இன்றைய நிலைமை:

ஆனந்தமே இல்லாத ஆனந்தவள்ளி வாய்க்கால் நிலைமை.
பொதுப்பணித்துறை,தேர்வுநிலைப்பேரூராட்சிநிர்வாகம் துப்புரவு பணிகளில் அலட்சியமாக இருப்பதற்கு பொதுமக்கள் கண்டனம்.

பேராவூரணி தேர்வுநிலைப்பேரூராட்சிக்குட்பட்டநகர்பகுதியில் பாய்ந்துவந்த ஆனந்தவள்ளி வாய்க்கல் தற்போது குப்பை மேடாகமாறியும், கருவேல மரங்களால் மூடப்பட்டு உள்ளது.

பேராவூரணி பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என பேராவூரணிநகர பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கடும்கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆனந்தவள்ளி வாய்க்கால் தண்ணீர் வரும்போது தண்ணீரை குளங்கள் மூலமாக தண்ணீரை சேமித்து விவசாத்திற்கு பயன்படுத்து வார்கள்.

தற்பொழுது ஆனந்தவள்ளி வாய்க்கால் கழிவு நிர்கள், குப்பை கொட்டப்படுவதால். நிர் நிலைக்கு சரியாக தண்ணீர் செல்வது இல்லை.
பேராவூரணி நகர்புறப்பகுதிகளான மாவடுகுறிச்சி, பொன்னாங்கண்ணிக்காடு
மற்றும் செங்கொல்லை, நாட்டாணிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளின் வழியே பாய்ந்துவந்த ஆனந்தவள்ளிவாய்க்காலில் தற்போது சரியான பராமரிப்புஇல்லாததாலும்,
குப்பைகளை சரிவர அகற்றாமல் இருப்பதாலும்இந்த நீர் நிலை ஆதாரமானதுகுப்பை மேடாக மாற்றப்பட்டு, கருவேலமரங்கள்மற்றும் செடி கொடிகளால் முழுவதுமாகமூடப்பட்டுள்ளது.

இந்த கால்வாயில் தண்ணீர்வரும் காலங்களில் இவை தண்ணீரை
தேக்கிவிடுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் பலதரப்பட்ட மக்களால்
முன்வைக்கப்படுகின்றதுஇந்த ஆனந்தவள்ளிவாய்க்கால் உயிரற்றுப்போனதற்கு காரணம் குப்பை மேலாண்மையைபேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சி சரிவர செய்யாதது தான்என சமூக ஆர்வலர்களால் கூறப்படுகிறது. மேலும், உடனடியாக இந்த கால்வாயில் உள்ளபிளாஸ்டிக் பைகள் மற்றும் இதரகழிவுகளை உடனடியாக அகற்றி, இக்கால்வாயில் வளர்ந்துள்ளகருவேலமரங்கள், செடிகளை உடனடியாக அகற்றவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இக்கால்வாயில் பொதுமக்கள் சிலரால் திடக்கழிவுகள் கொட்டப்படுவதாகவும், கழிவறை கழிவுகள் கொட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதனை உடனடியாக கண்காணித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைஎடுக்கவும், இக்கால்வாயை முழுமையாக தூர்வாரிட பொதுப்பணித்துறைக்கு ஆவண
செய்யவும் சமூக ஆர்வலர்கள் பேராவூரணிதேர்வுநிலை பேரூராட்சிக்கு பொதுமக்களின் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

பேராவூரணி அருகே ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது........

No comments






தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணிக்காக நேற்று குழி தோண்டியபோது, 10 உலோக சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

பேராவூரணியை அடுத்த பெருமகளூரில் மிகவும் பழமையான சோமநாதர் சிவன் கோயில் உள்ளது.

இக்கோயிலின் முன் பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணிக்காக நேற்று பள்ளம் தோண்டியுள்ளனர்.

இதில், 5 அடி ஆழத்தில் குழி தோண்டியபோது, சுமார் இரண்டரை அடி உயரம், 50 கிலோ எடை உள்ள உலோகத்தினால் ஆன சிவன் சிலை கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து தோண்டியபோது, பூமாதேவி, விநாயகர், நடராஜர் உள்ளிட்ட 10 உலோக சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

தகவலறிந்த பேராவூரணி வட்டாட்சியர் ரகுராமன் சிலைகளை பார்வையிட்டு, அவற்றை மீட்டு, வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றார். இந்த சிலைகள் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ளவை எனக் கூறப்படுகிறது.

நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ...

No comments

Peravurani Town :






          புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி யிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பூலாங்குறிச்சி என்னும் ஊர். இந்த ஊரில் தான் பிரமிக்கத்தக்க
            "காஞ்சாத்து மலை ".

     மலைகளின் அழகை ரசிக்க புதுக்கோட்டை யில் உள்ளவர்களே ஏற்காடு,  உதகமண்டலம்,  கொடைக்கானல் செல்கிறோம். அங்கு வெறும் மலைகளை மட்டும்தான் கண்டு ரசிக்க முடியும். இந்த காஞ்சாத்து மலை யில் கப்பல் போன்ற மலைகளும் ரயிலைப் போன்ற மலைகளும் அதிகமாக உள்ளன.  அடர்ந்த மலைக்காடுகள் சூழந்துள்ளன. ஓர் மலையின் உச்சியில் முருகன் கோயிலும் உள்ளது. இந்தக் காட்டில் காட்டு மாடுகள் அதிகமாக வாழ்ந்தன.  நரிகளும் முயல்களும் அதிகமாக வாழ்கின்றன. அரியவகை பழங்களான பாஞ்சாம் பழம், களாக்காய், தொரட்டிப்பழம் இங்கு அதிகம்.  ரம்மி படத்தில் இடம்பெற்ற "கூடைமேல கூடைவச்சு " பாடல் இங்குதான் எடுக்கப்பட்டது.

     அருகில் இருக்கும் நமக்கு அதன் அழகான இயற்கையை ரசிக்க தெரியவில்லை.  ஒருமுறையாவது சென்று ரசியுங்கள் ....

பேராவூரணி தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடக்கம்...

No comments


பேராவூரணியை அடுத்த திருச்சிற்றம்பலத்தில் தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தஞ்சாவூர் வேளாண் இயக்குநர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். தஞ்சை வேளாண் வணிக துணை இயக்குநர் உதயகுமார் முன்னிலை வகித்தார். நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் சுப்பிரமணியன் குத்துவிளக்கேற்றினார். விழாவில் தஞ்சை ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சொக்கலிங்கம், வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் ராஜேந்திரன், இந்திய பாரம்பரிய அறிவியல் மைய திட்ட இயக்குநர் சுபாஷினிஸ்ரீதர், தஞ்சாவூர் காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்த கோவிந்தராஜன் உள்ளிட்டோர் பேசினர்.
விழாவில் தோட்டக்கலை சாகுபடி திட்டங்கள் பற்றி தோட்டக்கலைதுறை துணை இயக்குநர் சந்திரஹாசன் வேளாண்மையில் இயந்திர சாகுபடி பற்றி மோகனகிருஷ்ணன் ஆகியோர் விளக்கினர்.

பேராவூரணி டீ கடையில் தினமும் ஒரு திருக்குறள்.

No comments

Peravurani Town :





பேராவூரணி பேருந்து நிலையத்தை ஒட்டி இருக்கிறது சித்ரா தேனீர் நிலையம். வாசலில் ஒரு கரும்பலகை. திருக்குறளும், தெளிவுரையும் அழகுக் கையெழுத்தில் எழுதப்பட்டிருக்கிறது. உள்ளே காவி தரித்து, ஒரு முதியவர் டீ ஆற்றிக் கொண்டிருக்கிறார். கடையெங்கும் ஏராளமான புத்தங்கள். நாற்காலிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பவ்யமாக அமர்ந்திருக்கிறார்கள். டீ போட்ட இடைவெளியில், திருக்குறளை சந்தத்தோடு படித்து மனப்பாடம் செய்வது பற்றி ஆசிரியராக மாறி வகுப்பெடுக்கிறார் அந்த முதியவர். அவரது வெண்கலக்குரல் கடைக்கு வெளியே செல்வோரையும் ஈர்க்கிறது.
பெயர் தங்கவேல். தங்கவேலனார் என்று மரியாதையாக அழைக்கிறார்கள் பேராவூரணி மக்கள்.
மூன்றாம் வகுப்பிலேயே பள்ளிப்படிப்பு முடிவுக்கு வந்துவிட்டது. படித்ததெல்லாம் வாழ்க்கைப் பாடம் தான். விவசாயம், வீடு என்றிருந்தவரை அரசியல் ஈர்த்தது. தொடக்கத்தில் மார்க்சியத்தில் ஈடுபாடு. தானே பாடல்கள் புனைந்து ஊர் ஊராகப் போய் பாடுவார். பேராவூரணியைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் இவர் குரல் ஒலிக்காத ஊர் இல்லை.
குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குப் பிறகு காந்திய சிந்தனைகள் ஈர்க்க, இளைஞர்கள் மத்தியில் காந்தியை பிரசாரம் செய்தார். சங்க இலக்கியங்களில் ஈடுபாடு ஏற்பட அவற்றையும் கற்றுத்தேர்ந்தார். சுய முயற்சியில் ஆங்கிலம் கற்று விவேகானந்தர் புத்தகங்களை மொழி மாற்றும் அளவுக்கு புலமை பெற்றார். இறுதியில் இவர் வந்து நின்றது திருக்குறளில்.
விவசாயம் பொய்த்துப் போனதால், வாழ்வாதாரத்துக்காக ஆரம்பித்தது தான் டீக்கடை. காலப்போக்கில் இலக்கிய ஆர்வம், பேச்சார்வம், திருக்குறள் ஈடுபாடு கொண்டோரின் வேடந்தாங்கலாக மாறியது டீக்கடை. தங்கவேல் கடைக்குப் போனால், டீயோடு சேர்த்து, திருக்குறளும் கேட்கலாம் என தொலைதூர வாடிக்கையாளர்கள் எல்லாம் தேடி வந்தார்கள். திருக்குறளை வெறும் மனப்பாடப் பாடலாக அல்லாமல், மக்களின் வாழ்க்கையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற இலக்கோடு கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறார் தங்கவேலனார்.



"அந்தக் காலத்துல வேளாண்மைக்கு இணையான தொழில் எதுவுமில்லை. அதனால, வெளிவேலைக்குப் போறதைப் பத்தியெல்லாம் நாங்க யோசிச்சதில்லை. பள்ளிக்கூடத்திலயும் ஒட்ட முடியலே. சராசரியான ஒரு விவசாயியாத் தான் இருந்தேன். கஷ்டப்பட்டு நாம விளைவிக்கிற நெல்லுக்கு எங்கிருந்தோ ஒருத்தன் விலை வைக்கிறான். விவசாயத்துல ஒரு பலனும் இல்லேன்னு ஆனபிறகு, அது சம்பந்தமா யோசிக்க ஆரம்பிச்சேன். இதுக்கெலாம் தீர்வு மார்க்சியம்தான்னு தெரிஞ்சுச்சு. தொடர்ச்சியா வாசிக்கப் பழகுனேன். காலம் நிறைய படிப்பினைகளைக் கொடுத்துச்சு. திருக்குறளை படிச்சப்போ, உலகத்துல உள்ள எல்லா பிரச்னைகளுக்கும் அதுக்குள்ள தீர்விருக்குன்னு புரிஞ்சுச்சு. வேளாண்மைக்கு, குடும்பப் பிரச்னைக்கு, தேசப்பிரச்னைக்கு, தண்ணிப் பிரச்னைக்குன்னு எல்லா பிரச்னையையும் ரெண்டு ரெண்டு வரிகள்ல அலசி ஆராஞ்சு தீர்வும் சொல்லியிருக்கார் வள்ளுவர். இதுதான் உலகத்துக்குத் தேவையான இலக்கியம்ன்னு முடிவு பண்ணி, அதை மாணவர்களுக்குப் போதிக்க ஆரம்பிச்சேன். திருக்குறளை வெறும் மதிப்பெண் கொடுக்கிற மனப்பாடப் பாடலா படிச்சுப் பழகின பிள்ளைங்களுக்கு அதோட உள்ளடக்கத்தை சொல்லிக் கொடுக்க புதிய நுட்பங்களைத் தேடுனேன். சந்தம் பிரிச்சு, பாட்டு மாதிரி சொல்லிக் கொடுத்தேன். நாடகங்கள் வழியா கத்துக் கொடுத்தேன். திருக்குறள்ங்கிறது ஒருவித வாழ்க்கை நெறி. அதை மனப்பாடம் செய்யக் கத்துக் கொடுக்கிறதை விட வாழ்க்கையா மாத்திக்க கத்துக் கொடுக்கனும். அதைத்தான் இப்போ முழு நேர வேலையாச் செய்யிறேன். இந்த டீக்கடையெல்லாம் பகுதி நேரம் தான்.
திருக்குறளை மேலோட்டமாப் பாக்கும்போது, மிரட்சியா இருக்கும். ஆனா, சந்தம் பிரிச்சுப் படிக்கப் பழகிட்டா, அப்படியே மனசுல ஒட்டிடும். நிறைய பிள்ளைகள் அப்படி தயாராகியிருக்காங்க. மாணவர்களை விட ஆசிரியர்களுக்கு திருக்குறள் பயிற்சி அதிகம் தேவையாயிருக்கு. இடையிடையே அந்த வேலையையும் செஞ்சிக்கிட்டிருக்கேன். திருக்குறளை எல்லா மட்டத்திலயும் கொண்டு போய் சேக்கிற விதமா, திருவள்ளுவர் தினம் அன்னிக்கு 1 ரூபாய்க்கு டீ விக்கிறது, பொதுமக்கள் கூடுற இடத்துல திருக்குறள் புத்தகம் வினியோகிக்கிறதுன்னு சில பிரசார திட்டங்களை செயல்படுத்துறேன். டீக்கடை வாசல்ல ஒரு கரும்பலகை வச்சு தினமும் ஒரு திருக்குறளை பொருளோட எழுதிப்போடுறேன். இந்தப் பகுதியில இருக்கிற இளைஞர்களோட இணைஞ்சு திருக்குறள் பேரவைன்னு ஒரு அமைப்பை உருவாக்கி பள்ளி, கல்லூரிகள்ல திருக்குறள் விழிப்புணர்வு, பயிலரங்குகளை நடத்திக்கிட்டிருக்கோம். திருக்குறளுக்கு முரணில்லாத தெளிவான ஓர் உரையை எழுதுற வேலையிலயும் இறங்கியிருக்கேன். காலம் கைகூடினா விரைவிலேயே அது அச்சுல வரும்..." என்கிறார் தங்கவேலனார்.
வெ.நீலகண்டன்

பேராவூரணி களிமண்ணால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளையே வைக்க வேண்டும்...

No comments

Peravurani Town :





தஞ்சாவூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் களிமண்ணால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆ. அண்ணாதுரை.
மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற தொடர்புடைய துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது:
மாவட்டத்தில் ரசாயன வர்ணம் பூசப்படாத விநாயகர் சிலைகளைக் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும். களிமண்ணால் தயார் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
விநாயகர் சிலைகளுக்கு ரசாயன வர்ணம் பூசுவதைத் தவிர்க்க வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூசினால் தண்ணீரில் கரையும் தன்மையுடைய மற்றும் எவ்வித தீங்கும் விளைவிக்காத வண்ணக் கலவையைப் பயன்படுத்த வேண்டும்.
வழிபாட்டு பொருள்களான மலர்கள், துணிகள், சிலைகளை அழகு செய்யக்கூடிய பொருள்கள் ஆகியவற்றை சிலைகளை கரைப்பதற்கு முன்பே சிலையிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
கடலிலிலிருந்து குறைந்தது அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு எடுத்துச் சென்று கரைக்க வேண்டும். விநாயகர் சிலைகளை தஞ்சாவூர் பகுதியில் வடவாறு, கல்லணை கால்வாயிலும், திருவையாறு, பாபநாசம், சுவாமிமலை, கும்பகோணம் ஆகிய வட்டங்களில் காவிரி ஆற்றிலும், திருபுவனம், திருவிடைமருதூர், ஆடுதுறை ஆகிய ஊராட்சிகளில் வீரசோழன் ஆற்றிலும், பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டார பகுதியில் கடலிலும் கரைப்பதற்கு காவல் துறையினரால் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கு எடுத்துச் செல்ல காவல் துறையினரால் அனுமதி வழங்கப்பட்ட சாலைகளில் வழியாக மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் என்றார் ஆட்சியர். கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ. மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பேராவூரணி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.

No comments



பேராவூரணி செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் சாணாகரையில் நடந்த டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிக்கு ஒன்றியக்குழு தலைவர் சாந்திஅசோக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட மலேரியா அலுவலர் பிச்சை, வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் சவுந்தர்ராஜன், பைங்கால் ஊராட்சித் தலைவர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் பைங்கால் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி கிராமத்தின் வீதிகளில் சென்றனர்.

பின்னர் ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு டெங்கு கொசு ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. தொடர்ந்து சாணாகரை கிராமத்தினை முழுமையாக சுத்தம் செய்யும் பணியும், புகை மருந்து அடிக்கும் பணியும் நடந்தன.
ஊராட்சியில் உள்ள அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு குளேரினேசன் செய்யப்பட்டது. தொடர்ந்து நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. முகாமில் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

பட்டுக்கோட்டை வட்டம் நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கப்படுகிறது..

No comments


தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்க அரசு உத்தேசித்துள்ளது. இதுகுறித்து, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ஆர். குருமூர்த்தி பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் அனுப்பியுள்ள அறிக்கை விவரம்:

பட்டுக்கோட்டை வட்டத்தில் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 4,90,965 பேர். பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத் தலைமை இடமாகவும், சட்டப்பேரவைத் தொகுதியாகவும் உள்ளது. பட்டுக்கோட்டை வட்டத்தில் தற்போது பட்டுக்கோட்டை நகராட்சி, பட்டுக்கோட்டை (முழுமை), மதுக்கூர் (முழுமை), சேதுபாவாசத்திரம் (பகுதி), திருவோணம் (பகுதி), பேராவூரணி (பகுதி) என 5 ஊராட்சி ஒன்றியங்கள், மதுக்கூர், அதிராம்பட்டினம் ஆகிய 2 பேரூராட்சிகள், மதுக்கூர், பெரியக்கோட்டை, தம்பிக்கோட்டை, துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, நம்பிவயல், திருச்சிற்றம்பலம், குறிச்சி, ஆண்டிக்காடு ஆகிய 10 பிர்க்காக்கள், 175 வருவாய் கிராமங்கள், 103 ஊராட்சிகள் உள்ளன.

நிர்வாக வசதிக்காக, பட்டுக்கோட்டை வட்டத்தை பட்டுக்கோட்டை மேற்கு, பட்டுக்கோட்டை கிழக்கு என இரண்டு வட்டங்களாகப் பிரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2 வட்டங்களுக்கும் பட்டுக்கோட்டையே தலைமை இடமாக இருக்கும்.
இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு, 2 புதிய வட்டங்கள் குறித்த விவரம்:

பட்டுக்கோட்டை மேற்கு: இவ்வட்டத்தின் மக்கள்தொகை 2,87,054. பட்டுக்கோட்டை நகராட்சி, பட்டுக்கோட்டை (பகுதி), சேதுபாவாசத்திரம் (பகுதி), பேராவூரணி (பகுதி), திருவோணம் (பகுதி) ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்கள், பட்டுக்கோட்டை, நம்பிவயல், திருச்சிற்றம்பலம், குறிச்சி, ஆண்டிக்காடு ஆகிய 5 பிர்க்காக்கள், 100 வருவாய் கிராமங்கள், 54 ஊராட்சிகள் இவ்வட்டத்தில் இடம்பெறும்.

பட்டுக்கோட்டை கிழக்கு: இவ்வட்டத்தின் மக்கள்தொகை 2,03,911. மதுக்கூர் (முழுமை), பட்டுக்கோட்டை (பகுதி) ஆகிய 2 ஊராட்சி ஒன்றியங்கள், மதுக்கூர், அதிராம்பட்டினம் ஆகிய 2 பேரூராட்சிகள், மதுக்கூர், பெரியகோட்டை, தம்பிக்கோட்டை, துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம் ஆகிய 5 பிர்க்காக்கள், 75 வருவாய் கிராமங்கள், 49 ஊராட்சிகள் இவ்வட்டத்தில் இடம்பெறும்.

பேராவூரணி 32ம் தேதி கிராமசபை கூட்டம் ஊரக வேலைதிட்ட செயல்பாடுகள் சமூக தணிக்கை.

No comments

Peravurani Town :




பேராவூரணி ஒன்றியத்தில் ஒட்டங்காடு, அம்மையாண்டி, சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் ஊமத்தநாடு, குருவிக்கரம்பை ஆகிய கிராமங்களில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் உள்ள 28 ஊராட்சிகளில் வருகிற 31ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் 2014-15, 2015-16ம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகளை மத்திய அரசின் அறிவிப்பின்படி சமூக தணிக்கை மேற்கொள்வது தொடர்பாக விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. தஞ்சை ஊராட்சி ஒன்றியத்தில் பிள்ளையார்பட்டி, நீலகிரி, மேலவெளி ஆகிய ஊராட்சிகளிலும், பூதலூர் ஒன்றியத்தில் பூதலூர், வெண்டையம்பட்டி ஆகிய ஊராட்சிகளிலும், திருவையாறு ஒன்றியத்தில் கீழத்திருப்பந்துருத்தி, கல்யாணபுரம் ஆகிய ஊராட்சிகளிலும், ஒரத்தநாடு ஒன்றியத்தில் கண்ணந்தங்குடி மேற்கு, கண்ணந்தங்குடி கிழக்கு ஆகிய ஊராட்சிகளிலும், திருவோணம் ஒன்றியத்தில் வெட்டுவாக்கோட்டை, பின்னையூர் ஆகிய ஊராட்சிகளிலும், கும்பகோணம் ஒன்றியத்தில் அண்ணலக்ரகாரம், திருவலஞ்சுழி ஆகிய ஊராட்சிகளிலும், திருவிடைமருதூர் ஒன்றியத்தில் மேலையூர், நாச்சியார்கோயில் ஆகிய ஊராட்சிகளிலும், திருப்பனந்தாள் ஒன்றியத்தில் நரிக்குடி ஊராட்சியிலும், பாபநாசம் ஒன்றியத்தில் திருவைக்காவூர், கபிஸ்தலம் ஆகிய ஊராட்சிகளிலும், அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் உக்கடை, அருந்தவபுரம், பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் கரம்பயம், தாமரங்கோட்டை தெற்கு, மதுக்கூர் ஒன்றியத்தில் ஆலத்தூர், அத்திவெட்டி, பேராவூரணி ஒன்றியத்தில் ஒட்டங்காடு, அம்மையாண்டி, சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் ஊமத்தநாடு, குருவிக்கரம்பை ஆகிய கிராமங்களில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.

கூட்டத்தில், 28 ஊராட்சிகளில் உள்ள பொதுமக்களும், சுய உதவிக்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டுமென கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் இயந்திரம் மூலம் நெல் நடவுக்கு எக்டேருக்கு ரூ.5,000 மானியம் வேளாண் உதவி இயக்குனர் தகவல்.

No comments

பட்டுக்கோட்டை நடப்பு ஆண்டில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடவு இயந்திரம் மூலம் நெல் நடவு பணி செய்வதற்கு ஒரு எக்டேருக்கு ரூ.5 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. இதுகுறித்து திருவோணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மதியரசன் கூறியிருப்பதாவது: மேட்டுப்பாத்தி (அல்லது) பாய் நாற்றங்கால் முறையில் நாற்றுக்கள் தயாரித்து அதனை நடவு இயந்திரம் மூலம் நடவு பணி மேற்கொண்டால் எக்டேர் ஒன்றுக்கு மானியமாக ரூ.5ஆயிரம் அனுமதிக்கப்படுகிறது.

இத்திட்டம் செயல்படுத்துவதற்கு திருவோணம் வட்டாரத்திற்கு 1,300 எக்டேர் பொருள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பா சாகுபடி நடவு இயந்திரம் மூலம் செய்ய ஆர்வம் உள்ள விவசாயிகள் சாதாரண முறையில் நாற்று விடுவதை தவிர்த்து மேட்டுப்பாத்தி (அல்லது) பாய் நாற்றங்கால் முறையில் அமைத்து சரியாக 14-15 நாள் வயதுடைய நாற்றாக இருக்கும் போது நடவு இயந்திரம் மூலம் நடவு பணி மேற்கொண்டு மானியத்தை பெற்று பயனடையலாம்.


இதனால் நடவு செலவு பாதியாக குறைகிறது. மகசூலும் இரு மடங்கு கூடுகிறது. இதுகுறித்து தேவையான ஆலோசனைகளை பெற திருவோணம் வட்டார வேளாண்மை அலுவலர் சிவக்குமாரை 9842602975 என்ற எண்ணிலும், திருவோணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மதியரசடின 9750969405 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு வேளாண்மை உதவி இயக்குனர் மதியரசன் தெரிவித்துள்ளார்.

கோட்டாகுடி மனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில்நுட்ப கருத்தரங்கம்...

No comments


பேராவூரணி அடுத்த கோட்டாகுடி மனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் அனைத்து துறையை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தொழில்நுட்ப சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. சிவில்டெக் இயக்குநர் பாலசந்திரன், டூல் மற்றும் டை இன்ஸ்டிடியூட் பேராசிரியர்கள் ஆரோக்கியராஜ், ஆரோக்கிய ஜஸ்டின்ராஜ், திண்டுக்கல் மின்சார வாரிய உதவியாளர் தட்சிணாமூர்த்தி, பெல் நிறுவன துணை பொறியாளர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கின் மூலம் மாணவ, மாணவிகள் தொழில்நுட்ப ரீதியான சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். மேலும் எதிர்காலத்தில் மாணவர்கள் தொழிற்சாலைகளில் எவ்வாறு பணியாற்றுவது போன்ற தகவல்களும் அளிக்கப்பட்டது.
கருத்தரங்கு பயனுள்ளதாக அமைந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

பேராவூரணியில் அரசு மருத்துவமனை சீர்கேடுகளை களைய கோரிக்கை..

No comments
பேராவூரணி அரசுத் தலைமை மருத்துவமனை சீர்கேடுகளை களைய வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
பேராவூரணியில் உள்ள அரசு வட்டார தலைமை மருத்துவமனைக்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்கு வருகின்றனர். ஆனால், மருத்துவமனை போதிய பராமரிப்பு இன்றியும், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் பற்றாக்குறையுடன் உள்ளது. இதுகுறித்து பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், பேராவூரணி ஒன்றிய திமுக பொறுப்பாளர் க. அன்பழகன், பேரூராட்சி முன்னாள் தலைவர் என். அசோக்குமார், நகரச் செயலாளர் கோ. நீலகண்டன் ஆகியோர் அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ அலுவலர் ராமசாமியிடம் மருத்துவமனை குறைபாடுகளை அண்மையில் கேட்டறிந்தனர்.
இதுகுறித்து க. அன்பழகன் கூறுகையில், மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை, முதுநிலை மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மற்றும் மயக்க மருத்துவர்கள் இல்லாமல் அறுவை சிகிச்சைகள், பிரசவ சிகிச்சைகள் நடப்பதில்லை. அலுவலக உதவியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள், செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. போதிய மருந்து, மாத்திரைகளும் கிடைப்பதில்லையென நோயாளிகள் கூறுகின்றனர். எனவே, சுகாதாரத் துறையும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். காலம்தாழ்த்தினால் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.

பனைமரங்கள்.

No comments



தற்பொழுது பனை விதைகள் விழும் காலம். அதைச் சேகரித்து தரிசு நிலங்களில் வீசி எறிந்து விட்டால் அது மழை பெய்யும் போது தானாகவே தழைக்கும். எந்தவிதப் பராமரிப்பும் தேவையில்லை. ஆடு,மாடுகள் கடித்தாலும் அதன்வளர்ச்சி பாதிக்காது.

இதன் வேர்கள் சுமார் 50 அடி ஆழம் வரை பூமிக்குள் செல்லும். இதனால் எவ்வளவு வறட்சியையும் தாங்கும். மழை காலங்களில் அதன் வேர்கள் மழைநீரை 50 அடி ஆழத்திற்கு பூமிக்குள் கொண்டு சேர்க்கும் குழாய்களாகச் செயல்படும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரும்.

மண் அரிப்பை அறவே தடுக்கும். மலைப் பகுதிகளில் உள்ள கோயில்களுக்குச் செல்பவர்கள் பைகளில் எடுத்துச் சென்று வீசி விட்டால் கூட அது தழைக்கும். இதை இறைவழிபாட்டின் ஒரு முறையாகக் கூட செய்யலாம். பனைமரங்களின் நன்மைகள் ஏராளம். ஓரிடத்தில் பனைமரங்கள் அழிக்கப் படுகின்றன என்றால் அந்த இடம் அழியத் தொடங்குகிறதென்று அர்த்தம் என்கிறார்கள் புவிசார் ஆய்வாளர்கள். நம் தமிழகத்தின் பாரம்பரிய பனைமரமே நம் நாட்டின்
*தேசியமரம் பனைமரம்*
என்பதை நினைவில் கொள்வோம்.

குளமங்கலம் அமைந்துள்ள அய்யனார் கோவில் குதிரை..

No comments

Peravurani Town :


குளமங்கலம்  அமைந்துள்ள  அய்யனார்
கோவில்  குதிரை ஆசியாவிலேயே மிகப்பெரிய குதிரையின் உருவம் இந்த குளமங்கலம்  அய்யனார் குதிரைதான். இதன் உயரம் : 37 அடி. குதிரையின் கழுத்தில் மாலை சூடுவதற்க்கு 90 அடி மாலை வேண்டும்.

பேராவூரணி மாவடுகுறிச்சியில் எழுந்தருளிருக்கும்,ஸ்ரீ ஆகாசவினாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் இனிதே நிறைவடைந்தது...

No comments







பேராவூரணியில் புதிதாக திறக்கப்பட்ட DGL TOWER அழகிய புகைப்படம்

No comments

Peravurani Town :









பேராவூரணி பகுதியில் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள..

No comments

பேராவூரணி பகுதியில் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.பேராவூரணி சோழ தேசம் இணைய தளம் (www.peravuranitown.in ).
இந்த இணைய தளம் புகைப்படம், செய்திகள் மற்றும் விளம்பரங்கள் இடம்பெற்ற அனுப்ப வேண்டிய முகவரி : peravuranitown@gmail.com

பேராவூரணி புகைப்படம்

No comments

Peravurani Town :


பேராவூரணி ஸ்ரீ ஏந்தல் நீலகண்ட விநாயகர் கோவில்

பேராவூரணி புகைப்படம்

No comments

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar