இன்று நள்ளிரவு முதல் மானியமில்லாத எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.38.50 உயர்கிறது.

No comments

Peravurani Town :


மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டருக்கு 38 ரூபாய் 50 பைசா உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதலே அமலுக்கு வருகிறது. இந்த சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையேற்றம் பலரிடத்தில் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.

தமிழக்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

No comments

தமிழகம் மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 48மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். வடகடலோரத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், சென்னையில் லேசான மழை பெய்யும்.

வடகிழக்குப் பருவமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. 

வறண்டு கிடைக்கும் பேராவூரணி நாட்டாணிக்கோட்டை முனி குளம்.

No comments

Peravurani Town :


பேராவூரணி இடியுடன் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி.

No comments

மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த கியான்ட் புயல் முழுவதுமாக வலு இழந்தது. தற்போது அது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த பெரும்பாலான இடங்களில் மிதமான மழை, ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு தஞ்சை, நாகை உள்பட டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டியது. தஞ்சை மாவட்டத்தில் திருவையாறில் இன்று அதிகாலை 2 மணி முதல் 4 வரை இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. சாலைகளில், தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சையில் இன்று காலை அதிக பனி பொழிவுடன் மேகமூட்டம் காணப்பட்டது.
இதேபோல் திருப்பூந்துருத்தி, கண்டியூர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. தஞ்சை நகர் பகுதியில் நள்ளிரவு மழை பெய்தது. திருக்காட்டுப்பள்ளி, குடவாசல், அணைக்கரை, மஞ்சலாறு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஈசன்விடுதி, வெட்டிக்காடு, ஒரத்தநாடு, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நள்ளிரவு ஒரு மணி நேரத்துக்கு மேல் பலத்த மழை கொட்டியது. இந்த மழை சம்பா நேரடி நெல்விதைப்பு, நடவு செய்த வயலுக்கு ஏற்றதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

பல இடங்களில் மின்சாரம் தடை செய்யப்பட்டது. பேராவூரணி  மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் கயிறு தயாரிப்பு பயிற்சி பெற நவ. 20-க்குள் விண்ணப்பிக்கலாம்.

No comments

Peravurani Town :


கயிறு மற்றும் கயிறு பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி பெற நவம்பர் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள கயிறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மைய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இந்த மையத்தில் ஆறு மாத கால கயிறு கைவினைப் பயிற்சி வகுப்பில் சேருவதற்கு 18 வயது முடிந்த 45 வயதுக்கு உள்பட்ட பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பயிற்சிக்கு எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பயிற்சியின்போது மாதம் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சி பெறுபவர்களுக்கு விடுதி வசதி உண்டு. பயிற்சி டிசம்பர் முதல் தொடங்கப்படும்.

இப்பயிற்சியில் சேருவதற்காக விண்ணப்பப் படிவங்கள் அலுவலக வேலை நாள்களில் நேரிலோ அல்லது கடிதம் மூலமாகவோ இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது ​ www.coir​bo​ard.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் வளர்ச்சி அலுவலர், மண்டல விரிவாக்க மையம், பிள்ளையார்பட்டி, வல்லம் வழி, தஞ்சாவூர் 613 403 என்ற முகவரிக்கு நவ. 20-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் தகவல்கள் பெற 04362 - 264655 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பேராவூரணி பகுதியில் இரவு 10 மணிக்கு மேல் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது மாசு கட்டுப்பாடு வாரியம் வலியுறுத்தல்.

No comments

Peravurani Town :


இரவு 10 மணிக்கு மேல் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று மாசு கட்டுப்பாடு வாரியம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

விழிப்புணர்வு

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி தீபாவளி விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.

பட்டாசு வெடிப்பதினால் ஏற்படும் காற்று மாசு பற்றியும், அதிக சத்தத்துடன் வெடிக்கும் பட்டாசுகளால் ஏற்படும் தீமைகள் பற்றியும் விழிப்புணர்வு பிரசார செய்தி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 15 ஆட்டோக்களில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டு பொதுமக்கள் கேட்கும் பொருட்டும் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

அரும்பாக்கத்தில் நடந்த விழிப்புணர்வு பிரசார வாகனங்களை மாவட்ட சுற்றுச்
சூழல் பொறியாளர் ரொமால்ட் டெரிக் பின்டோ தொடங்கி வைத்தார்.

உறுதி மொழி

இந்த பிரசாரத்தில், பட்டாசுகளை கவனமாகவும், விபத்தில்லாமலும் வெடிப்போம், பெரியவர்கள் உடனிருந்து பட்டாசுகளை வெடிப்போம், தண்ணீர், மணல் ஆகியவற்றை தயாராக வைத்திருப்போம், திறந்தவெளி மற்றும் பொது இடங்களில் கூட்டாக பட்டாசுகளை வெடிப்போம், இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணிவரை பட்டாசுகளை வெடிக்க மாட்டோம்.

அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்ப்போம், மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட அமைதியான இடங்களில் பட்டாசுகளை வெடிக்க மாட்டோம், குடிசைகள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் இருக்கும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்க மாட்டோம். ஒலியினை குறைப்போம், செவியினை காப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய உறுதி மொழி எடுக்கப்பட்டது.

இரவு 10 மணிக்கு மேல் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

புது‌க்கோ‌ட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே முதுமக்கள் தாழி கண்டெடுப்பு .

No comments

Peravurani Town :


புது‌க்கோ‌ட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே
(மேலமணக்காடு, மங்களநாடு) வில்லுன்னி ஆற்றங்கரையில் 3500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நாகரிக மக்கள். வாழ்ந்ததற்கான அடையாளமாக முதுமக்கள் தாழி கண்டெடுப்பு. 

பேராவூரணி புதுப்பொலியுடன் திறக்கப்பட்ட லியோஸ் மென்ஸ்.

No comments


பேராவூரணியில் லியோஸ் மென்ஸ் பிரம்மாண்ட திறப்பு விழா அக்டோபர் 20 தேதி முதல் புதுப்பொலியுடன் திறக்கப்பட்ட. லியோஸ் மென்ஸ் 5-ம் ஆண்டில் புதுப்பொழிவுடன் வாடிக்கையாளர்களின் பேராதரவோடு இப்போது NSN டவர் கீழ் தளத்தில் ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பிரத்யேக புதிய ஷோரும்.



பேராவூரணி திருக்குறள் பேரவை சார்பில் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டி.

No comments

பேராவூரணி திருக்குறள் பேரவை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், பாட்டு, ஓவியம், கட்டுரை, பேச்சு போட்டிகள் நடந்தது. திருக்குறள் பேரவை தலைவர் தங்கவேலனார் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சித்ராதேவி முன்னிலை வகித்தார். திருக்குறள் பேரவை செயலாளர் புவனேஸ்வரி வரவேற்றார்.
போட்டிகளில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் நவம்பர் 26ம் தேதி நடைபெறும் திருக்குறள் பேரவை மாநாட்டில் வழங்கப்படும் என்று பேரவை நிர்வாகிகள் தெரிவித்தனர். போட்டிகளுக்கு நடுவராக மெய்ச்சுடர் வெங்கடேசன், நீலகண்டன், பேராசிரியர் கணேஷ்குமார், திருவேங்கடம், பேரவை பொருளாளர் ஜேம்ஸ் பணியாற்றினர்.

தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கம்

No comments

Peravurani Town :


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறனன.

இந்தாண்டு தீபாவளி பண்டிக்கைக்காக, இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் முழுவதும் 21,289 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் சென்னையில் இருந்து மட்டும் 11,225 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் சென்னையில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள பேருந்து நிலையங்களிலிருந்து புறப்படும். சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மட்டும் 29 முன்பதிவு மையம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் இருந்து இன்று சிறப்பு பேருந்துகள் மூலம் வெளியூர் செல்வதற்காக, 13ஆயிரத்து 850 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே தீபாவளிக்காக சென்னையில் 5 இடங்களில் இருந்து வெளிஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்விவரங்களை பார்க்கலாம்.

செங்குன்றம் வழியாக ஆந்திரா செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநில பேருந்துகள் அண்ணாநகர் மேற்கு மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள் மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் , செல்லும் பேருந்துகள் கோயம்பேடு எதிரே உள்ள மாநில தேர்தல் ஆணைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். திண்டிவனம், வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஒசூருக்கு செல்லும் பேருந்துகள் பூந்தமல்லியில் இருந்து இயக்கப்படும். திருச்சி,மதுரை, மயிலாடுதுறை, நாகை, வேளாங்கண்ணி, நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கோவை செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும்.

பனையை காக்க களம் இறங்கிய அணவயல் இளைஞர்கள் ஏரிக்கரையில் மற்றும் குளம் பனை விதைகள் விதைப்பு

No comments



பேராவூரணி அடுத்த அணவயல் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் கிராமத்தினர் தரிசுநிலத்தை பனை விதைகளை விதைக்கும்  பணியில் ஈடுபட்டனர்.  இக்கால சந்ததியினர் பனை மரங்களின் பலனை அறிய முடியாத நிலை உள்ளது. அரிய பறவை இனங்களுக்கு வாழ்வாதாரமாகவும் பனை மரங்கள் உள்ளன. தூக்கணாங்குருவி உள்ளிட்ட உயரமான இடங்களில் வசிக்கும் சில பறவை இனங்கள் பனை மரத்தில் கூடு கட்டி வசிப்பவை. பனை மரங்கள் அழியும்போது, இந்தப் பறவை இனங்களும் அழிவுக்கு தள்ளப்படும். ஒரு பறவை அழிந்தால் 10 மரங்களின் வளர்ச்சி பாதிக்கும் என்று கூறுகிறார்கள். எனவே, பனை மரம் வளர்ப்பில் வருங்கால சந்ததிகளுக்கு உள்ள பொறுப்பை உணர்த்தும் வகையில் பள்ளிக்கு வரும்போது கிடைக்கும் பனை மர விதைகளை மாணவ, மாணவிகள் கொண்டு வர கேட்டிருந்தோம். இதன்படி சில மாதங்களாக பனை மர விதைகளைச் சேகரித்தோம். எங்கள் உள்ள  ஏரி மற்றும்  குளம்  பகுதியில் பனை  விதைகளை விதைக்கப்பட்டது. 





பேராவூரணி பகுதியில் நாற்று நடவு பணி செய்வதற்கு முன்பாக நாற்று முடியை வணங்கும் விவசாயி.

No comments

பேராவூரணி பகுதியில் நாற்று நடவு பணி செய்வதற்கு முன்பாக நாற்று முடியை வணங்கும் விவசாயி. இந்த ஆண்டு மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும்.
புகைப்படம் : Durai Peramaiyan

பேராவூரணி தீபாவளி பண்டிகை கடை வீதியில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

No comments

இனிப்பு, பேக்கரி தயாரிப்பாளர்கள் இடங்களை சுகாதாரமாக வைத்திருக்க அறிவுறுத்தல்.

No comments

தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, பேக்கரி தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிப்புக்கான இடங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. தஞ்சை அருகே பட்டுக்கோட்டையில் இனிப்பு மற்றும் பேக்கரி தயாரிப்பாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமை வகித்து பேசும்போது, வருகிற தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு மற்றும் பேக்கரி பெருமளவில் தயாரித்து விற்பனை செய்யப்படும். எனவே இனிப்பு, பேக்கரி தயாரிப்பு இடங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.


உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மூலம் அனுமதிக்கப்பட்டுள்ள இயற்கை மற்றும் செயற்கை நிறங்களை சரியான அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இனிப்பு தயாரிக்க வனஸ்பதி, நெய் பயன்படுத்தினால் அது குறித்து விளம்பர பலகையில் தெளிவாக குறிப்பிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில், பட்டுக்கோட்டை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் உமாகேசன், மாதேவன், பாண்டி, சந்திரமோகன், ராஜ்குமார், கவுதமன், விஜயகுமார், கார்த்தி, ரெங்கநாதன், வடிவேல், கிருஷ்ணமூர்த்தி, மகேஷ், செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வறண்டு கிடைக்கும் பேராவூரணி பெரிய குளம்.

No comments

Peravurani Town :


பேராவூரணி பெரிய குளம் தற்போது தண்ணீர் இன்றி வறட்சியாக காணப்படுகிறது.
இந்த குளத்தின் மூலமாக பொன்னாங்கண்ணிக்காடு, பழை பேராவூரணி, செங்கமங்கலம் பகுதியில் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் சேர்ந்த விவசாயிகள் பாசன வசதி பெற்று வருகின்றனர். ஆனால் தற்போது இந்த குளத்தில் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும்  சீரமப்படுகின்றனர்.

இந்த பகுதியில் விளையும் நெல் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது போதிய  அளவு  தண்ணீர் இல்லாததால் தற்போது சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது. இந்த குளத்தின் தண்ணீரின்றி வறண்டு போய் விட்டது.

மழை பெய்யும் காலத்தில் தண்ணீரை சேர்த்து வைப்பதற்கு பேராவூரணி பெரிய குளம் தூர்வாரி தண்ணீர் நிரப்பினால் விவசாயிகள் மட்டுமின்றி அனைவரும் பயன்பெறுவர். இதனால் பேராவூரணி பகுதியில் உள்ள அனைத்து ஏரி, குளம் தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள்.

பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் அதிரடி இனி ஞாயிற்றுகிழமைகளில் பெட்ரோல் பங்க்குகள் இயங்காது.

No comments

Peravurani Town :



பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை கண்டித்து, வரும் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் பெட்ரோல் கொள்முதல் நிறுத்தப்போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

பெட்ரோல் சில்லரை விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு, கமிஷன் தொகை உயர்த்தி தராததைக்கண்டித்து, இந்த போராட்டம் நடத்தப்படுவதாக, சேலத்தில் அச்சங்கத்தின் தலைவர் முரளி தெரிவித்தார்.

நவம்பர் 5 ஆம் தேதி முதல் பெட்ரோல் பங்க்குகள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும் வகையில் நேரம் குறைக்கப்படும் என்றும் அவர் கூறினார். அதன் பிறகு இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அனைத்து ஞாயிற்று கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்திருப்பதாகவும், பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் முரளி தெரிவித்தார்.

முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் .

No comments





முத்துப்பேட்டையில் இருந்து தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடலோர பகுதியில் சுமார் 15 கி.மீ கடல் தொலைவில் 12 ஆயிரம் ஸெக்டேர் பரப்பில் பரந்து விரிந்த காடுகள் தான் முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள்.. ஆற்று நீரும் கடல் நீரும் கலக்கும் பகுதியில் குறைந்த உப்பு தன்மை உள்ள பகுதிகளில் வளரும் மரங்கள் கொண்டது இந்த காடுகள். கடல் அலை வேகத்தையும் காற்றின் வேகத்தையும் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதால் "அலையாத்தி காடுகள்" எனப்படுகிறது. இதன் பெயர் " லகூன் " எனப்படும்.

இது சதுப்பு நில காடுகள் வகை சார்ந்தது. இங்கு அவினீசியா வகை தாவர மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. பல்வேறு வகையான வெளிநாட்டு பறவை இனங்கள் வந்து செல்கின்றன.
இவை வேர்கள் மூலம் சுவாசிப்பதால் தலைகீழாக வளர்ந்து தண்ணீரின் மேல் காட்சி அளிக்கிறது.

கடந்த 2004 சுனாமி மற்றும் 2008 நிஷா புயல் இவற்றில் இருந்து பாதுகாத்து  தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய கடலோர மாவட்டங்களின் அரணாக  விளங்குகியது..

சிறப்பு:
இந்தியாவில் உள்ள மொத்த அலையாத்தி காடுகளில் 61% முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் என்பது தமிழகத்திற்கு தனிச்சிறப்பு...
படகில் பயணம் செய்தும், மரப்பலகைகளில் அடிக்கப்பட்ட நடைபாதைகளில் சென்றும் இதன் அழகை ரசிக்கலாம்...

போக்குவரத்து வசதி :
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை யில் இருந்து 15 கி.மீ. பேருந்து  பயணமாகவும், திருவாரூரில் இருந்தும் நேரடி பேருந்து பயணமாகவும் செல்லலாம்...
இங்கு படகில் சுற்றி பார்க்க 10 பேருக்கு 800 முதல் 1000 வரை படகு  கட்டணம் வசூலிக்கப்படுகிறது...


பேராவூரணி பேரூராட்சி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவிக்காலம் இன்றுடன் முடிவு.

No comments



உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் பதவி காலம் இன்றுடன்(அக்.,24) முடிவடைகிறது. நாளை முதல் தனி அதிகாரிகள், உள்ளாட்சி நிர்வாகங்களின் பொறுப்புகளை ஏற்க உள்ளனர். தமிழகத்திலுள்ள 1,18,974 ஊரக உள்ளாட்சி மற்றும் 12,820 நகர்புற உள்ளாட்சி பதவிகள் என மொத்தம் 1,31,794 பதவிகளுக்கு கடந்த 2011ம் ஆண்டு அக்., மாதத்தில் தேர்தல் நடத்தப்பட்டு உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்று கொண்டனர். அவர்களின் ஐந்தாண்டு பதவி காலம் இன்றுடன்(அக்.,24) முடிகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்., 17 மற்றும் 19ம் தேதிகளில் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனை சென்னை ஐகோர்ட் தேர்தல் அறிவிப்பாணை ரத்து செய்ததுடன், புதிய அறிவிப்பாணையை வெளியிட்டு வரும் டிச., 31ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இதற்கான மேல்முறையீடு வழக்கை விசாரித்து வரும் ஐகோர்ட், உள்ளாட்சி தேர்தல் தடையை 4 வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது. @sutitle@தனி அதிகாரிகள் :@@sutitle@@இதனையடுத்து உள்ளாட்சி நிர்வாகங்களின் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுவதை தவிர்க்க தனி அதிகாரியை நியமித்து உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க வேண்டும். எனவே, இன்று மாலைக்குள் தனி அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிடப்படும் என்று தெரிகிறது.

இவ்வாறு, நியமிக்கப்படும் தனி அதிகாரிகள் நாளை முதல் உள்ளாட்சி நிர்வாக பொறுப்பை ஏற்பார்கள். இவர்கள் டிச., 31ம் தேதி வரை அல்லது தேர்தல் நடைபெறும் நாள் வரை பதவியில் இருப்பார்கள்.

பேராவூரணி கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை விவசாயிகள் வேதனை.

No comments

பேராவூரணி  கடைமடை பகுதிக்கு அணை திறந்து 30 நாட்களுக்கு மேலாகியும் ஆடிபட்டம் சாகுபடி கைவிட்டு போன நிலையில் முழுமையாக தண்ணீர் வந்து சேரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தஞ்சை மாவட்டம் பேராவூரணி  மற்றும்  சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிகளான பள்ளத்தூர், ஆண்டிகாடு, இரண்டாம்புளிக்காடு, நாடியம், குருவிக்கரம்பை, மருங்கப்பள்ளம், துறையூர், மரக்காவலசை, உடையநாடு, வீரியங்கோட்டை, முடச்சிக்காடு, கழனிக்கோட்டை, வாத்தலைக்காடு, பூக்கொல்லை, ரெட்டவயல், கழனிவாசல், முதுகாடு, மணக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒருசில வருடங்களாக ஒரு போகம் சம்பா சாகுபடி மட்டுமே நடைபெற்று வருகிறது.

தற்போது  அணை திறந்து 30 நாட்களுக்கு மேலாகியும் கடைமடை பகுதிக்கு முழுமையாக இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை. மேலும் கடைமடை பகுதியில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட பெரிய, சிறிய ஏரிகளும் தண்ணீரின்றி வரண்டு போய் உள்ளது. தற்போது முறை வைக்காமல் 20 நாட்களுக்கு கடைமடை பகுதிக்கு முழுமையாக தண்ணீர் வழங்கினால் ஏரிகளை நிரப்புவதுடன் ஒரு போக சம்பா சாகுபடிக்கு நாற்று விடும் பணிகளை துவக்கி விடலாம் என கடைமடை விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

பேராவூரணி பகுதியில் தீபாவளி பண்டிகையையொட்டி வீடுகளில் பலகாரங்கள் செய்ய மாவு அரைக்கும் பணி தீவிரம்.

No comments

தீபாவளி பண்டிகையையொட்டி வீடுகளில் பலகாரங்கள் செய்ய அரவை மில்லுக்கு சென்று மாவு அரைக்கும் பணியில் பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்பண்டிகையில் முக்கிய பங்கு வகிப்பது விதவிதமான பலகாரங்கள், பட்டாசு, புதிய ஆடைகள். தீபாவளி பண்டிகையன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை உடுத்தி பட்டாசுகளை வெடித்து பொதுமக்கள் மகிழ்வர். இதைதொடர்ந்து அனைத்து இல்லங்களிலும் தயாரிக்கப்பட்ட முருக்கு, அதிரசம் உள்ளிட்ட விதவிதமான பலகாரங்களை உண்டு மகிழ்வர்.

மேலும் உறவினர்கள், நண்பர்களுக்கு பலகாரங்களை கொடுத்து கொண்டாடி மகிழ்வர்.
அதேபோல் புதுமண தம்பதியர்களுக்கு பெண்ணின் வீட்டில் பல்வேறு பலகாரங்களை தயாரித்து கொடுத்து வருவது காலம்தொட்டு வரும் பழக்கமாக உள்ளது. அந்த வகையில் தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களே உள்ளதால் வீடுகள்தோறும் முருக்கு, எள் அடை, அதிரசம், சீடை, பயறு உருண்டை, ரவா உருண்டை, மைசூர்பாகு, சுழியன், உள்ளிட்ட விதவிதமான பலகாரங்களை தயார் செய்ய துவங்கியுள்ளனர்.

அதற்கான அரிசி மாவு, ஊற வைத்த அரிசி மாவு, சீனி, ரவை, பயறு உள்ளிட்ட தானியங்களின் மாவுகளை அரைப்பதற்கு மாவுமில்லில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதுதொடர்பாக மாவுமில்லை சேர்ந்தோர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுக்கு முன்பெல்லாம் தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே மாவு அரைக்க துவங்கிவிடுவர். ஒரு வாரத்துக்கு இரவு, பகல் என்று தொடர்ந்து மாவு அைரக்கும் பணி இருக்கும். மாவு அரைக்க வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வரிசைப்படி அரைத்து கொடுப்போம்.

ஆனால் தற்போது பண்டிகையின் 10 நாட்களுக்கு மட்டுமே வேலை உள்ளது. நாகரீகத்தின் காரணமாக நமது பாரம்பரிய கலாசார பண்புகளை மறந்து ஸ்வீட் கடைகளில் பலகாரங்களை வாங்கி வருகின்றனர். சென்றாண்டு முதல் சற்று கூடுதலாக பலகார மாவுகளை அரைக்க துவங்கியுள்ளனர் என்றார்.

பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் நடைமேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெருகிறது.

No comments

Peravurani Town :


உலக கோப்பை கபடி 3வது முறையாக இந்திய அணி சாம்பியன்.

No comments

உலக கோப்பை கபடி இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 38-29 என்ற கணக்கில் ஈரான் அணியை தோற்கடித்தது. உலக கோப்பை கபடி போட்டியில் 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. 

பேராவூரணியில் பகுதியில் இடியுடன் கூடிய மழை.

No comments


பேராவூரணி மற்றும் அதன் சில சுற்றுவட்டார கிராமங்களில் மாலையில்  இடியுடன் கூடிய மழை பெய்தது.  இதனால் பொதுமக்களும், விவசாயப்பெருமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.


உலகக்கோப்பை கபடி போட்டியில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஈரான் அணிகள் மோதுகின்றன.

No comments

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 484 கனஅடியாக குறைந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 58.78 அடியாக குறைந்து விட்டது.

No comments

Peravurani Town :


பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பெற்றோர் ஆசிரியர் கூட்டம்.

No comments






பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது . தலைமை ஆசிரியர் மற்றும்  பெற்றோர் ஆசிரியர் கழகம் தலைவர். 
நடந்து முடிந்த காலாண்டு தேர்வு மதிப்பெண் குறித்து பெற்றோர்கள் முன்னிலையில் கலந்தாலோசிக்கபட்டது. கூட்டத்தில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர்.
நன்றி :  பா.காமராஜ்



பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் நடிகர் திரு கருணாஸ்.

No comments







பேராவூரணி அருகே உள்ள  குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் நடிகர் திரு கருணாஸ். அவர்கள் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

புதுக்கோட்டை அய்யனார் குதிரை - கருப்பசாமி கோவில்.

No comments

புதுக்கோட்டைலிருந்து  திருச்சி செல்லும் சாலையில் திருக்கோகர்ணம் அருகில் அமைத்துள்ள அய்யனார் குதிரை - கருப்பசாமி கோவில்

தாய்லாந்தை சிதறடித்து இறுதிக்கு முன்னேறியது இந்தியா.

No comments



உலக கோப்பை கபடி தொடரின் பைனலுக்கு இந்திய அணி முன்னேறியது.அரையிறுதியில் 73-20 என்ற கணக்கில் தாய்லாந்து அணியை தோற்கடித்தது.
மற்றொரு அரையிறுதியில் தென் கொரியா, ஈரான் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய ஈரான் அணி, 28-22 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு தகுதி பெற்றது.நாளை நடக்கும் பைனலில் இந்தியா, ஈரான் அணிகள் மோதுகின்றன.

முதலமைச்சருக்காக பேராவூரணியில் தொடர்ந்துவரும் யாக பூஜைகள்.

No comments






பேராவூரணி அருகேயுள்ள பாலத்தளி ஸ்ரீ துர்கையம்மன் கோவிலில் இன்று 21.11.2016 வெள்ளிக்கிழமை புரட்சி தலைவி அம்மா அவர்கள் பூரண குணமடைய வேண்டி பேராவூரணி ஒன்றிய செயலாளர் உ.துரைமாணிக்கம் அவர்கள் நடத்திய யாகபூஜையில் , பால் குடம்,ஆயுஷ்ய ஹோமம், அனுஞ்ஞை விக்னேஷ்வரா ஹோமம், 108 கலச அபிஷேகம், 108 சங்கு அபிஷேகம்,இராகு கால ஸ்ரீ  துர்க்கா பூஜை, கோபூஜை  மற்றும் அன்னதானம் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. யாகத்தில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கழக செய்தி தொடர்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு R.வைத்திலிங்கம் BA., அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன் BSc., அவர்களும்,பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் திரு.மா.கோவிந்தராசு அவர்களும், பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் C.V.சேகர் BA.,BL., அவர்களும், மண்டல பால்வளத் தலைவர் R.காந்தி MA.,BEd.,அவர்களும், சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் குழ. சுந்தர்ராஜன் அவர்களும், மாவட்ட மாணவரணி செயலாளர் R.P.ராஜேந்திரன்BSc., அவர்களும், பேராவூரணி நகர செயலாளர் V.N.பக்கிரிசாமி அவர்களும்,பேராவூரணி நகர MGR மன்ற செயலாளர் R.பாண்டியராஜன் அவர்களும்,தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் G.பிரதீஸ் MBA., அவர்களும் பேராவூரணி நகர துணைச்செயலாளர் அபுபக்கர் அவர்களும் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என அனைவரும் கட்சி சார்பற்றும்,மதச்சார்பற்றும் ஒன்றிணைந்து கலந்து கொண்டு புரட்சி தலைவி அம்மா அவர்கள் நலமடைய மனதார பிரார்த்தனை செய்தனர். பூஜைகள், அபிஷேகங்கள் நிறைவடைந்ததும் அன்னதானத்தில் அனைவரும் கலந்து கொண்டு உணவருந்தினா்.

உயர்நீதிமன்றம் திட்டவட்டம் விளை நிலத்தை வீட்டு மனையாக பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது :

No comments

விளை நிலத்தை வீட்டு மனையாக பத்திரப்பதிவு செய்ய விதி்க்கப்பட்ட தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தடையை நீக்க மறுத்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் பத்திரப்பதிவை முழுமையாக தடை செய்ய்யவில்லை என்றும்,  அங்கீகாரம் இல்லாத மனைகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் மனைகளை அங்கீகரிப்பது தொடர்பாக திட்டம் வகுக்கவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் விளைநிலங்களை வீட்டு மனையாக மாற்றும் விவகாரத்தில் அரசின் கொள்கை என்ன என்று வினவியுள்ள நீதிமன்றம், ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் அரசு தரப்பு கோரிக்கைகளை நிராகரித்தது. முன்னதாக அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. தடையை நீக்க கூடாது என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வாதிட்டார். விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக வாதிட்டார். ஆனால் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனையை பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு அரசு தரப்பு வாதிட்டது. பத்திரப்பதிவு தடையால் கோடிக்கணக்கில் முதலீடு பாதிக்கப்பட்டுள்ளதாக ரியல் எஸ்டேட் தரப்பு வாதிட்டது. கடத்தல் மூலம் பல கோடி கிடைக்கும். அதற்காக கடத்தலை அனுமதிக்க முடியுமா என நீதிபதி வினவினார். இறுதியில் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை மாற்றியமைக்க முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது. பின்னர் வழக்கு விசாரணையை நவம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பேராவூரணி ஸ்ரீ நீலகண்டவிநாயகர் கோவில் மஹா கும்பாவிஷேக விழா பிப்ரவரி 9 ,2014. நடைபெற்ற போது எடுத்த புகைப்படம்.

No comments











பேராவூரணி - நீலகண்டவிநாயகர் கோவில் மஹா கும்பாவிஷேக விழா பிப்ரவரி 9 ,2014.
Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar